---Advertisement---

மகளிர் தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடியின் எக்ஸ் சமூக வலைத்தளத்தை கையாளும் செஸ் வீராங்கனை வைஷாலி

On: March 8, 2025 10:50 AM
Follow Us:
---Advertisement---

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு இந்திய சதுரங்க வீராங்கனையும், தமிழகத்தைச் சேர்ந்தவருமான வைஷாலியிடம் பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் சமூக வலைத்தளப்பக்கத்தை ஒப்படைத்துள்ளார்.

சர்வதேச மகளிர் தினம் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இதனையொட்டி இன்று ஒருநாள் தனது சமூக வலைத்தள பக்கங்களை பெண்கள் கையாள்வார்கள் என்று பிரதமர் நரேந்திர மோடி ஏற்கனவே அறிவித்திருந்தார். அதன்படி இன்று அவரது சமூக வலைதள பக்கங்களை பெண்கள் கையாண்டு வருகிறார்கள்.

அந்த வகையில் பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் எக்ஸ் சமூக வலைத்தள பக்கத்தை இந்திய செஸ் வீராங்கனையும் தமிழகத்தைச் சேர்ந்தவருமான வைஷாலி கையாள்கிறார்.

இந்நிலையில், இது குறித்து பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் எக்ஸ் சமூக வலைத்தள பக்கத்தில் வைஷாலி பதிவிட்டுள்ளார். அதில், ‘‘வணக்கம். நான் வைஷாலி. மகளிர் தினத்தன்று பிரதமர் மோடி அவர்களின் சமூக வலைத்தள பக்கத்தை கையகப்படுத்துவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். உங்களில் பலருக்குத் தெரியும், நான் சதுரங்கம் விளையாடுகிறேன். மேலும் பல போட்டிகளில் நமது அன்பான நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்துவதில் நான் மிகவும் பெருமைப்படுகிறேன்’’ என்று பதிவிட்டுள்ளார்.

Join WhatsApp

Join Now

Subscribe Youtube

Subscribe Now

Leave a Comment