கரூரில் நடந்த பட்ஜெட் விளக்கப் பொதுக்கூட்டத்தில் உதயநிதி ஸ்டாலினை ‘பால்டாயில் பாபு’ என்று தலைவர் அண்ணாமலை கூறியிருந்த நிலையில் தற்போது சமூக வலைத்தளங்களில் பால்டாயில் பாபு என்ற ஹேஷ்டேக் டிரெண்டிங் ஆகி வருகிறது.
கரூரில் பாஜக சார்பில் பட்ஜெட் விளக்கப் பொதுக்கூட்டம் நேற்று (பிப்ரவரி 19) மாலை நடைபெற்றது. இதில் தலைவர் அண்ணாமலை பங்கேற்று மத்திய அரசு தமிழகத்துக்கு வழங்கிய திட்டங்கள் குறித்து பொதுமக்கள் மத்தியில் எடுத்துரைத்தார்.
இதற்கிடையே பிரதமரை ஒருமையில் விமர்சனம் செய்த உதயநிதி ஸ்டாலினை தலைவர் அண்ணாமலை திமுகவுக்கு புரிகின்ற பாஷையில் ‘பால்டாயில் பாபு’ என்று கடுமையாக விமர்சனம் செய்தார்.
இந்தநிலையில், உதயநிதியை விமர்சனம் செய்த பால்டாயில் பாபு என்ற ஹேஷ்டேக் சமூக வலைத்தளங்களில் டிரெண்டிங்காக மாறி வருகிறது. இந்த அசிங்கம் திமுகவுக்கு தேவையான எனவும் நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.