அயோத்தி யுத்தம் முதல் படை வீடான திருப்பரங்குன்றத்தில் தொடங்கியிருப்பதால் இந்து விரோத தாலிபான் திமுக அரசை முடிவுக்கு கொண்டுவருவோம். அதற்கு 2026 தேர்தலில் முகூர்த்தம் குறிக்கப்பட்டுள்து என மதுரை பழங்காநத்தத்தில் இந்து முன்னணி சார்பில் நடந்த மாபெரும் ஆர்ப்பாட்டத்தில் பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா சூளுரைத்தார்.
திருப்பரங்குன்றம் ஸ்ரீகந்தர் மலை மீது ஆடு, கோழிகளை பலியிடுவதற்காக இஸ்லாமிய ஜிகாதிகள் கடந்த மாதம் சென்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனையடுத்து ராமநாதபுரம் இஸ்லாமிய கட்சி எம்.பி.யான நவாஸ்கனி தன்னுடன் ஜிகாதி கூட்டத்தை கூட்டிக்கொண்டு திருப்பரங்குன்றம் ஸ்ரீகந்தர் மலை மீது மாட்டிறைச்சி பிரியாணி உண்டார். இது ஒட்டுமொத்த இந்துக்களையும் கொதிப்படைய செய்தது.
இதன் காரணமாக திருப்பரங்குன்றம் ஸ்ரீகந்தர் மலையை பாதுகாக்க கோரி இந்து முன்னணி சார்பில் (பிப்ரவரி 04) மாபெரும் ஆர்ப்பாட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால் இந்துக்கள் ஒன்றினைந்து விடுவார்கள் என்ற அச்சத்தில் ஸ்டாலின் தலைமையிலான விடியாத திராவிட மாடல் அரசு 144 தடை உத்தரவை பிறப்பித்தது. மேலும் 10 மாவட்ட எஸ்.பி., தலைமையில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசாரை மதுரை முழுக்க குவித்தது.
இந்து அமைப்பின் முக்கிய நிர்வாகிகள், பாஜக நிர்வாகிகளை வீட்டு தடுப்பு காவலில் வைத்தது. அதையும் மீறி ரயில், பேருந்து, இருசக்கர வாகனங்களில் வந்தவர்களை தடுத்து நிறுத்தி மண்டபத்தில் அடைத்து வைத்தது. இதனால் திட்டமிட்டப்படி நேற்று மாலை 3 மணியளவில் ஆர்ப்பாட்டம் நடத்தவிடாமல் பல்வேறு சூழ்ச்சிகளை ஸ்டாலின் அரசு கையாண்டது.
ஆனால் அதையும் மீறி நீதிமன்றத்தில் இந்து முன்னணி வழக்கு போட்டது. அதன் பின்னர் மதுரை பழங்காநத்தத்தில் ஆர்ப்பட்டம் நடத்த நீதிமன்றம் அனுமதி வழங்கிது.
இந்தநிலையில், மதுரை பழங்காநத்தத்தில் இந்து முன்னணி சார்பில் செவ்வாய்க்கிழமை மாலை நடந்த ஆர்ப்பாட்டத்தில் பல்லாயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர். மாநிலச் செயலாளர் சேவகன் தலைமையில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கோட்டச் செயலாளர் அரசப்பாண்டியன் வரவேற்றார்.
இதில் பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா பங்கேற்று பேசியதாவது: “தமிழகத்தில் இருக்கும் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தாலிபான் அரசுக்கும், இந்து விரோத தீய அரசுக்கும் சொல்கிறேன், இப்படித்தான் உத்தரப் பிரசேதத்திலும் நடைபெற்றது. அதனால் உத்தரப் பிரசேத்தில் எதிரிகள் ஆட்சிக்கு வர முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
அதேபோல் இங்கும் ஏற்படும். அறுபடை வீடுகளில் முதல் படை வீடான திருப்பரங்குன்றத்தை பங்கு போட அலையும் இந்து விரோத தீயக்கூட்டத்தை எச்சரிக்கிறேன். திருப்பரங்குன்றத்தில் முதலில் வந்தது முருகன் கோயிலா, தர்காவா? இப்போது மட்டும் ஏன் பிரச்சினை வருகிறது? திமுக வரும்போதெல்லாம் இந்து மக்களுக்கு எதிரான நிர்வாகம் நடைபெறுகிறது என்பதை யாரும் மறக்கக் கூடாது. முன்னெச்சரிக்கையாக நம்மை கைது செய்த போது போலீஸார் பயன்படுத்திய வார்த்தைகளை பதிவு செய்து, அவர்கள் மீது போலீஸில் புகாரளிக்க வேண்டும்.
மதுரை ஆட்சியர் 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த உத்தரவு சென்னை, காரைக்குடி, திருப்பூருக்கு எப்படி செல்லுபடியாகும். மாவட்ட ஆட்சியரின் அதிகாரம் அந்த மாவட்டத்துக்குள் மட்டும் தன் செல்லுபடியாகும். அப்படியிருக்கும் போது எங்களை கைது செய்தது அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானது. இந்த போலீஸார்களை நீதிமன்றத்தில் ஏற்ற வேண்டியது நமது கடமை. நவாஸ்கனியை பார்த்தால் போலீஸாரின் கால்கள் நடுங்குகிறது. நவாஸ்கனியின் கைக்கூலிகள் தமிழகத்தில் ஆட்சியில் உள்ளனர்.
இந்த ஆர்ப்பாட்டத்துக்கு 5 லட்சம் பேர் வந்திருப்பார்கள். எல்லோரையும் சிறையில் அடைத்துள்ளனர். திருப்பரங்குன்றம் மலையில் சிக்கந்தர் பிறப்பதற்கு முன்பே காசி விஸ்வநாதர் கோயில் உள்ளது. சிக்கந்தர் ஏன் மலைக்கு சென்றான்? தற்போது தர்காவுக்கு செல்கிறேன் என்கின்றனர். அப்போது தர்காவும் இல்லை. காசி விஸ்வநாதர் கோயிலை இடிப்பதற்காக சிக்கந்தர் மலைக்கு சென்றான் என ஊரில் பேசுகின்றனர். இந்து கோயிலை இடிக்கச் சென்றவருக்கு தர்காவா? அரசு ஆவணங்களில் சிக்கந்தர் சமாதி கோரிப்பாளையத்தில் இருப்பதாக கூறப்பட்டுள்ளது.
அப்படி என்றால் திருப்பரங்குன்றம் மலையில் தர்கா இருப்பது போலி தானே? முருகனின் அறுபடை வீட்டை அபகரிக்கும் திட்டம் தானே? இந்த நேரத்தில் இந்துக்கள் நாம் ஒன்றாகாமல் இருந்தால் தமிழ் கடவுள் முருகனை தரித்திரனாக்கவிடுவார்கள். முதல் படை வீட்டை கூறுபோட யாருக்கும் உரிமை உள்ளது? இந்தியாவில் 1942-ல் முகமது அலி ஜின்னா பாகிஸ்தான் பிரிவினை கோரிக்கையை முன்வைத்தார். 1944-ல் பிரிவினைவாத மாநாடு நடைபெற்றது. அதில் ஜின்னா பேசும்போது, பாகிஸ்தான் தராவிட்டால் உள் நாட்டு போரை சந்திக்க வேண்டும் என்றார்.
அதற்கு அம்பேத்கர் பதிலளிக்கும்போது, பாகிஸ்தான் பிரிந்தாலும் உள்நாட்டு போர் போகாது என்றார். அதுதான் இப்போது நடக்கிறது. உள்நாட்டு இந்துக்களை வம்புக்கு இழுக்க நவாஸ்கனி ஆடு, கோழியுடன் மலைக்கு மேல் சென்றுள்ளார். இதை முளையிலேயே கிள்ளி எரியாவிட்டால் மிகப் பெரிய விலையை கொடுக்க வேண்டியது வரும். நீதிமன்றத்தில் அரசு, அயோத்தி போல் ஆகிவிடக்கூடாது என்பதற்காக தடை விதிக்கப்பட்டதாக கூறியுள்ளது. இதுதான் ஆரம்பம். அயோத்தி யுத்தம் முதல் படை வீடான திருப்பரங்குன்றத்தில் தொடங்கியுள்ளது.
இப்போராட்டத்தில் தமிழகத்தில் இருக்கும் தாலிபான் அரசை முடிவுக்கு கொண்டுவருவோம். அதற்கு 2026 தேர்தலில் முகூர்த்தம் குறிக்கப்பட்டுள்ளது. இந்த உறுதியுடன் இருப்போம். இந்து ஒருமைப்பாட்டை உலகுக்கு காட்டுவோம்,” என்று ஹெச்.ராஜா கூறினார்.