Skip to content
Orey Naadu ஒரேநாடு – இமயம் முதல் குமரி வரை

Orey Naadu ஒரேநாடு – இமயம் முதல் குமரி வரை

  • முகப்பு
  • சந்த செலுத்த
  • தொடர்புக்கு
  • Toggle search form
  • தமிழகத்தில் ரூ.22,800 கோடி ரயில்வே திட்டங்களுக்கு அனுமதி ; மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தமிழ்நாடு
  • திருவள்ளுவரையும், திருக்குறளையும் களவாட நினைப்பதே திமுக கூட்டம்தான்: ஸ்டாலினுக்கு, வானதி சீனிவாசன் பதிலடி அரசியல்
  • கடலூர் மாவட்ட பாஜகவினர் கைது : தலைவர் அண்ணாமலை கண்டனம் அரசியல்
  • தமிழகத்தை சேர்ந்த 25 பேர் ஐபிஎஸ் அதிகாரிகளாக பதவி உயர்வு: அண்ணாமலை வாழ்த்து அரசியல்
  • திமுக ஆட்சியில் போதையின் கூடாரமாகவும், பெண்களுக்கு பாதுகாப்பற்ற கோட்டையாக செங்கல்பட்டு மாறிவிட்டது: நயினார் நாகேந்திரன் அரசியல்
  • ஈரோடு இரட்டை கொலை; கொல்லப்பட்டவர்களின் உறவினர்களுக்கு அண்ணாமலை நேரில் ஆறுதல் தமிழ்நாடு
  • இளைஞர்கள் யோகாவை வாழ்நாள் முழுவதும் ஒருதுணையாக ஏற்றுக்கொள்ள வேண்டும்: ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழ்நாடு
  • திமுக ஆட்சியில் குற்றங்கள் தமிழ்நாடு

2026 சட்டப்பேரவை தேர்தலை சந்திக்க கனிமவள கொள்ளை கும்பலை நம்பியிருக்கும் திமுக : தலைவர் அண்ணாமலை

Posted on January 24, 2025 By admin No Comments on 2026 சட்டப்பேரவை தேர்தலை சந்திக்க கனிமவள கொள்ளை கும்பலை நம்பியிருக்கும் திமுக : தலைவர் அண்ணாமலை

2026ஆம் ஆண்டு தேர்தலைச் சந்திக்கக் கனிமவளக் கொள்ளை கும்பலை திமுக நம்பியுள்ளது என தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக தலைவர் அண்ணாமலை இன்று (ஜனவரி 24) வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

“திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்து, தமிழகம் முழுவதுமே, கனிமவளங்கள் கொள்ளைப்போவது தொடர்கதை ஆகியிருக்கிறது. திமுகவின் ஆசியுடன், கரூர் கேங், புதுக்கோட்டை கேங் என இரு கும்பல்கள் தலைமையில், தமிழகம் முழுவதும் கனிமவளங்களைக் கடத்தி, கேரளாவுக்கு விற்றுக் கொண்டிருக்கிறது. ஒட்டு மொத்த மேற்குத் தொடர்ச்சி மலையையுமே அழித்துவிட்டுத்தான் ஓய்வார்கள் என்பது போல அவர்கள் நடவடிக்கை இருக்கிறது.

தமிழகத்தில் கனிமவளங்களைப் பாதுகாக்கப் போராடி வரும் சமூக ஆர்வலர்களுக்கும் பாதுகாப்பு இல்லாத சூழலே நிலவி வருகிறது. புதுக்கோட்டை மாவட்டத்தில், கனிமவளக் கொள்ளையர்களை எதிர்த்துப் புகார் அளித்த சமூக ஆர்வலர் ஜெகபர் அலி, கனிமவளக் கொள்ளையர்களால் லாரி ஏற்றிக் கொலை செய்யப்பட்டார்.

கனிமவளக் கொள்ளையைப் பற்றி புகார் அளித்து வீடு திரும்பும் முன், கொள்ளையர்களுக்கே புகாரைக் கசியவிட்டு, சமூக ஆர்வலர்களின் உயிரைப் பறிக்கும் வகையில் ஒரு காட்டாட்சியை நடத்தி வருகிறது. இந்த Disaster மாடல் திமுக அரசு.

திமுக ஆதரவோடு செயல்படும் புதுக்கோட்டை மற்றும் கரூர் கும்பல், கனிமங்களை ஏற்றிச் செல்லும் லாரிகளிடம் கமிஷன் வசூலித்துவிட்டு, அனுமதிக்கப்பட்ட அளவை விட மிக அதிக அளவில் கற்களை வெட்டி எடுப்பதோடு, அனுமதிச் சீட்டுக்களையும் முறைகேடாகப் பயன்படுத்தி கொள்ளையடித்துக் கொண்டிருக்கின்றனர்.

கோவை மாவட்டத்தில் உள்ள கல்குவாரிகளில் தொடர்ந்து பல விதிமீறல்கள் நடைபெற்று வருகின்றன. இதனால் பொதுமக்களும், விவசாயிகளும் பெரிதும் பாதிப்புக்குள்ளாகி வருவதோடு, அரசுக்கும் பெரும் இழப்பு ஏற்பட்டு வருகிறது.

ஒவ்வொரு முறை ஆட்சிக்கு வரும்போதும், தமிழகத்தைச் சுரண்டுவதையே தொழிலாக வைத்திருக்கிறது திமுக. 2006 2011 வரையிலான காலகட்டத்தில், திமுகவினர் செய்த நில அபகரிப்பால், புதியதாக ஒரு விசாரணைத் துறையே உருவாக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

தற்போது. தமிழகம் முழுவதும் மலைகளை உடைத்து, மணலைத் திருடி. கனிம வளங்களைச் சுரண்டி. எதிர்காலத்தில் தமிழகத்திற்கு பருவமழை வருவதையே கேள்விக்குறியாக்கிக் கொண்டிருக்கிறது திமுக அரசு.

வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில், தங்கள் தோல்வி உறுதி என்பதை அறிந்து, தேர்தலின்போது, பணத்தை வாரி இறைக்க முடிவு செய்திருக்கும் திமுக, அதற்காக, பொதுமக்களையும், கனிமவளக் கொள்ளையை எதிர்ப்பவர்களையும் அச்சுறுத்தி, மிரட்டி, கொலையும் செய்து, கொள்ளையடித்துக் கொண்டிருக்கும் இந்தக் கொள்ளைக் கும்பலின் வசூலைத்தான் நம்பியிருக்கிறது என்பது கனிமவளக் கொள்ளையை திமுக அரசு கண்டும் காணாமல் இருப்பதில் இருந்தே தெளிவாகத் தெரிகிறது.

தங்கள் குடும்பத்துக்காக, பொதுமக்களைத் துன்புறுத்திக் கொள்ளையடித்த பல சர்வாதிகாரிகள், இறுதியில் பொதுமக்கள் கோபத்தை எதிர்கொள்ள முடியாமல் காணாமல் போன பல வரலாறுகளை நம் காலத்திலேயே பார்த்திருக்கிறோம். பொதுமக்கள் பொறுமைக்கும் ஒரு எல்லை இருக்கிறது.

வரும் 2026 ஆம் ஆண்டு, தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமையும்போது. இந்த Disaster மாடல் திமுக ஆட்சியின் கனிமவளக் கொள்ளையர்கள் மீதும், அதற்கு உடந்தையாக இருக்கும் திமுகவினர் மீதும், கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு, கனிமவளக் கொள்ளை மூலம் அவர்கள் சேர்த்து வைத்திருக்கும் அத்தனை சொத்துக்களும், சட்டப்படி மீட்கப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

அரசியல் Tags:#Annamalai, #Bjp, #Oreynaadu, #Tamilnadu

Post navigation

Previous Post: தலைவர் அண்ணாமலை விவசாயிகளுக்கு அளித்த வாக்குறுதி வெற்றி: டங்ஸ்டன் சுரங்க திட்டத்தை ரத்து செய்த மத்திய அரசு
Next Post: டெல்லியில் 76-வது குடியரசு தின விழா கோலாகலம்: தேசியக் கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரௌபதி முர்மு

Related Posts

  • டங்ஸ்டன் சுரங்கம் வராது; மீறி வந்தால் களத்தில் இறங்க தயார்: தலைவர் அண்ணாமலை உறுதி அரசியல்
  • தருமபுரி மாவட்ட ஆட்சியர், எஸ்.பி.,க்கு மிரட்டல்: திமுக மாவட்ட பொறுப்பாளர் மீது பாஜக புகார் அரசியல்
  • இல.கணேசன் உடலுக்கு மத்திய அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் ஆகியோர் நேரில் அஞ்சலி அரசியல்
  • ஸ்டாலின் வெளிநாட்டுப் பயணம் வழக்கம் போல் வெற்றுப் பயணம்தான்: நயினார் நாகேந்திரன் அரசியல்
  • மும்மொழிக் கல்விக்கு ஆதரவாக பாஜக சார்பில் ஒரு கோடி கையெழுத்து இயக்கம் தொடக்கம் அரசியல்
  • அமைச்சர் கமிஷன் காந்தி ஊழலுக்கு சப்பைக்கட்டு கட்டாமல் உடனடியாக பதவி விலக வேண்டும் : தலைவர் அண்ணாமலை அரசியல்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • விரைவில் திருட்டு திராவிட மாடல் ஆட்சி தமிழகத்தை விட்டு விரட்டப்படும்: வடசென்னையில் நயினார் நாகேந்திரன் சூளுரை
  • திமுக ஆட்சியில் போதையின் கூடாரமாகவும், பெண்களுக்கு பாதுகாப்பற்ற கோட்டையாக செங்கல்பட்டு மாறிவிட்டது: நயினார் நாகேந்திரன்
  • தீபாவளிக்கு 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க இந்து விரோத திமுக அரசு அனுமதி
  • இருமல் மருந்தால் குழந்தைகள் உயிரிழப்பு; சுகாதாரத்துறை அதிகாரிகள் வீடுகளில் அமலாக்கத்துறை சோதனை
  • மழையால் வீடு இழந்தவருக்கு புதிய வீடு; நயினார் நாகேந்திரன் திறந்து வைத்தார்

Recent Comments

No comments to show.

Archives

  • October 2025
  • September 2025
  • August 2025
  • July 2025
  • June 2025
  • May 2025
  • April 2025
  • March 2025
  • February 2025
  • January 2025

Categories

  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழ்நாடு
  • நாடு
  • சசி தரூர், பினராயி விஜயன் இங்கே இருப்பதால் இண்டி கூட்டணியினர் பலர் தூக்கத்தை இழப்பார்கள்: கேரளாவில் பிரதமர் மோடி பேச்சு இந்தியா
  • அதிமுக, பாஜக தொண்டர்கள் இணைந்து தேர்தல் பணியாற்ற வேண்டும் : கே.பி.ராமலிங்கம் அரசியல்
  • சேலம் பெருங்கோட்ட நிகழ்ச்சியில் ஒரே நாடு சந்தா சேர்ப்பு முகாம் தமிழ்நாடு
  • டெல்லியில் 67 தொகுதிகளில் டெபாசிட் இழந்த காங்கிரஸ் இந்தியா
  • அனைவருக்கும் பிரதமரின் இனிய 2025 புத்தாண்டு வாழ்த்து இந்தியா
  • ம.பொ.சி 119வது பிறந்த நாள்; நயினார் நாகேந்திரன் மரியாதை தமிழ்நாடு
  • காவல்துறையால் கொலை செய்யப்பட்ட இளைஞர்; ஸ்டாலினிடம் 9 கேள்விக்கான பதிலை பெற்றுத்தாருங்கள்; ஊடகங்களுக்கு நயினார் நாகேந்திரன் கோரிக்கை தமிழ்நாடு
  • 95 கோடி பேருக்கு சமூக பாதுகாப்பு ‘மனதின் குரல்’ நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பெருமிதம் இந்தியா

Copyright © 2025 Orey Naadu ஒரேநாடு – இமயம் முதல் குமரி வரை.

Powered by PressBook News WordPress theme