---Advertisement---

யாழ்ப்பாணம் கலாச்சார மையத்துக்கு திருவள்ளூவர் பெயர் : தலைவர் அண்ணாமலை மகிழ்ச்சி

On: January 20, 2025 5:31 PM
Follow Us:
---Advertisement---

இலங்கை யாழ்ப்பாணத்தில் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களால் திறந்து வைக்கப்பட்ட யாழ்ப்பாணம் கலாச்சார மையத்துக்கு திருவள்ளூவர் பெயர் சூட்டப்பட்டுள்ள செய்தி மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது என தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில்; நமது மத்திய அரசின் நிதியுதவியுடன் கடந்த 2015 ஆம் ஆண்டு, இலங்கை யாழ்ப்பாணத்தில் நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களால் அடிக்கல் நாட்டப்பட்டு, கடந்த 2023 ஆம் ஆண்டு திறந்து வைக்கப்பட்ட யாழ்ப்பாணம் கலாச்சார மையத்துக்கு, நமது தெய்வப் புலவர் திருவள்ளுவர் பெயர் சூட்டப்பட்டுள்ள செய்தி மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.

600 இருக்கைகள் கொண்ட அரங்கு, திறந்தவெளி மைதானம், கணினி நூலகம் மற்றும் பல வசதிகளுடன் கூடிய இந்த மையத்திற்கு, தெய்வப் புலவர் திருவள்ளுவர் பெயர் சூட்டியிருப்பது, திருவள்ளுவரின் பெருமையை உலகெங்கும் கொண்டு செல்லும் வாய்ப்பாகவும், இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையேயான கலாச்சார உறவை மேலும் வலிமையாக்கும் படியாகவும், அமையும். இவ்வாறு தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Related Post

ஒரு குடும்பம் வாழ 8 கோடி மக்கள் சுரண்டப்படலாமா? எடப்பாடி பழனிசாமி

தமிழனை காக்க, தமிழனை மீட்கப் பிரதமர் மோடி என்டிஏ கூட்டணியை உருவாக்கியுள்ளார்: நயினார் நாகேந்திரன்

பெண் பிள்ளைகளைத் தவிக்கவிட்டுவிட்டு, தன் மகனுக்குப் பிறந்தநாள் வாழ்த்து பாடும் முதல்வர்: நயினார் நாகேந்திரன் காட்டம்

திமுகவுக்கு ஒரே அக்கறை துணை முதல்வராக இருக்கும் உதயநிதியை முதல்வராக்க வேண்டும்; தேனியில் நயினார் நாகேந்திரன் பேச்சு

2026ல் விழித்துக்கொள்ள வேண்டும் இல்லை என்றால் இந்த நாடு தீயவர்களின் கையில் மாட்டிக்கொண்டு சுக்கு நாறாகிவிடும்: ராமநாதபுரத்தில் தலைவர் நயினார் நாகேந்திரன்

அதிமுக ஆட்சியில் பிரிக்கப்பட்டதால் திருப்பத்தூர் மாவட்ட மக்களை திமுக புறக்கணிக்கிறது: மாநில தலைவர் நயினார் நாகேந்திரன்

Leave a Comment