2026 ஏப்ரல் மாதம் நடைபெறும் தேர்தலில் நீங்க முழித்துக்கொள்ள வேண்டும், விழித்துக்கொள்ள வேண்டும். இல்லை என்று சொன்னால் இந்த நாடு தீயவர்களின் கையில் மாட்டிக்கொண்டு சுக்கு நூறாகி போய்விடும் என ராமநாதரபுரத்தில் (நவம்பர் 13) நடைபெற்ற ‘‘தமிழகம் தலைநிமிர, தமிழனின் பயணம்’’ பொதுக்கூட்டத்தில் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் ‘‘ தமிழகம் தலைநிமிர தமிழனின் பயணம்’’ பிரச்சாரப் பொதுக்கூட்டத்த்தில் பங்கேற்க வந்த மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் அவர்களுக்கு பாஜக மற்றும் அதிமுக உள்ளிட்ட தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதனைத்தொடர்ந்து நடைபெற்ற பிரச்சார பொதுக்கூட்டத்தில் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் உரையாற்றியதாவது:
புகழ்பெற்ற ராமநாதபுரம் மண்ணில் உங்களை எல்லாம் சந்திக்கின்ற இந்த வாய்ப்பினை பெற்றமைக்கு இறைவனுக்கு என்னுடைய நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
நான்கரை ஆண்டுகால திமுக ஆட்சியில் ராமநாதபுரம் மாவட்டம் எப்படி சிக்கித் தவிக்கிறது என்று உங்கள் அனைவருக்கும் தெரியும். சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வாக்களித்திருந்தால் இன்றைக்கு தண்ணீர் பஞ்சமே இருக்காது.

எங்கு பார்த்தாலும் குப்பை கூலங்கள், ராமேஸ்வரத்திற்கும் தனுஷ்கோடிக்கும் இடையே இருக்கின்ற இடங்கள் இன்னும் நல்ல முறையில் கொண்டு வந்திருக்கலாம். ராமநாதபுரத்திற்கு விமான நிலையம் வந்திருக்கலாம். ஹிந்துக்களின் புன்னிய பூமியான ராமேஸ்வரத்தில் இன்னும் நல்ல திட்டங்களை கொண்டு வருவதற்கு நாங்கள் காத்திருக்கிறோம். மேலான உங்களது ஆதரவை நாங்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம்.
இன்றைக்கு 530 கோடியில் புதிய ரயில் பாதை திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். ராமநாதபுரத்தில் பொருளாதாரத்தில் முதுகெலும்பாக இருப்பது கடலோர மாவட்டங்களில் வாழ்கின்ற மீன் இனங்கள் என்பதை நாம் அறிவோம்.
ஆனால் இன்றைக்கு மீனவர்களின் நிலைமை என்ன? 1974 ஆம் ஆண்டு முதலமைச்சராக இருந்த கருணாநிதி கட்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்த்து கொடுத்தார். அப்போது மத்தியில் ஆளுங்கட்சியாக இருந்தது இந்திரா காந்தி அம்மையார் அவர்கள்.
இப்போதும் மீனவர்களுக்கு பிரச்சனை, கடந்த மூன்று தினங்களுக்கு முன்னர் கூட 18 பேர் கைது செய்யப்பட்டார்கள். உடனடியாக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை அணுகினோம். இன்னும் ஒரு வாரக்காலத்திற்குள் சிறையில் உள்ள மீனவர்கள் விடுதலையாகி வருவார்கள் என்பதை இந்த மேடை வாயிலாக தெரிவித்துக்கொள்கிறேன்.
துபாயில் இறந்தவர்களுக்கு மூன்றரை லட்சம் ரூபாய் வாங்கிக் கொடுக்கிறோம் என்று சொன்னால் அது பாரதிய ஜனதா கட்சியால் மட்டுமே முடியும்.

ஆனால் முதலமைச்சர் என்ன செய்வார் தெரியுமா? வெளிநாட்டில் ஏதாவது ஒரு போர் நடந்தால் டெல்லியில் போய் அனைவரையும் அழைத்து வருவார்கள். ஏதோ இவர்களே அந்த நாட்டிற்கு சென்று தூதுவர்களாக அழைத்து வந்ததைபோன்று பேசிவார்கள்.
விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6 ஆயிரம் ரூபாய் கொடுக்கிறோம் என்று சொன்னால் அது பாரதப் பிரதமர் நரேந்திர மோடி. மகளிருக்கு ஆயிரம் ரூபாய் தருவோம் என்று திமுகவினர் ஆட்சிக்கு வந்தார்கள். இரண்டு ஆண்டுகள் கழித்து நாடாளுமன்றத் தேர்தல் வரும்போதுதான் அதை கொடுத்தார்கள். தேர்தலுக்காக வாக்குறுதியை கொடுப்பது திமுகவின் நோக்கம்.
ஆனால் பாரதிய ஜனதா கட்சியும், தேசிய ஜனநாயக கூட்டணியும் அப்படி அல்ல. மக்களுக்காக எதையும் செய்யக்கூடிய கட்சி. இன்றைக்கு உச்ச நீதிமன்றத்தில் ஒரு உத்தரவு வந்திருக்கிறது. காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணைக்கட்டப்போகிறோம் அதற்காக டிபிஆர் கொடுக்கலாம் என்ற தகவல் வந்ததாக செய்தி இருக்கிறது.
ஆனால் இதற்காக உச்ச நீதிமன்றம் போகவில்லை. தான் மற்றும் தன்னுடைய கட்சிக்காரர்களுக்காக மட்டும் உச்ச நீதிமன்றம் போகும் அளவிற்கு திமுக அரசு இருந்துக்கொண்டிருக்கிறது.
சட்டம் ஒழுங்கு சரி இருக்கிறதா? ஒரத்தநாட்டிலே உதயநிதி ஸ்டாலின் மன்றத்தில் உள்ள ஒருவர் கஞ்சா போதைப்பொருள் போட்டு பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார். இதுவரையில் 18200 பாலியல் வன்கொடுமைகள் நடைபெற்றுள்ளது. 631 கொலைக்குற்றங்கள் நடந்துள்ளது. 31 லாக்கப் டெத் நடைபெற்றிருக்கிறது. இதற்கு எல்லாம் பொறுப்பு ஏற்க வேண்டியது முதலமைச்சர் ஸ்டாலினை தவிர வேறு யாரு இருக்க முடியாது.
2026 ஏப்ரல் மாதம் தேர்தல் வர இருக்கிறது. அந்த தேர்தலில் நீங்க முழித்துக்கொள்ள வேண்டும், விழித்துக்கொள்ள வேண்டும். இல்லை என்று சொன்னால் இந்த நாடு தீயவர்களின் கையில் மாட்டிக்கொண்டு சுக்கு நூறாகி போய்விடும்.
கடலோர மாவட்டங்களில் வாழ்கின்ற மீனவர்களுக்கு எல்லோருக்கும் வீடு கட்டித்தருவோம் என்று சொன்னார்கள். செய்தார்களா என்றால் இல்லை. கடலில் காணாமல் போனவர்களுக்கு இரண்டு லட்சம் ரூபாய் தருவோம் என்று சொன்னார்கள். ஆனால் இல்லை. மூன்று மாதங்களுக்கு ஒருமுறை மீனவர்களுக்காக தனியாக ஒரு ஆணையம் அமைத்து அவர்களை விசாரித்து குறைகளை கேட்போம் என்று சொன்னார்கள். செய்தார்களா?
காணாமல் போன படகுகளை மீட்டுத்தருவோம் என்று சொன்னார்கள். இதுவரையில் செய்யவில்லை. இப்படியாக ராமநாதரபும் மாவட்டத்தை மட்டுமல்ல ஒட்டுமொத்த தமிழர்களையும் ஏமாற்றுகின்ற ஒரு ஆட்சியை மாற்றி தேசிய ஜனநாயக கூட்டணியில் இருக்கின்ற வேட்பாளர்கள் அவரவர் போட்டியிடும் சின்னங்களில் உங்களது வாக்குகளை தர வேண்டும். இவ்வாறு நயினார் நாகேந்திரன் தனது உரையை நிறைவு செய்தார்.
மேலும் இது தொடர்பாக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தனது சமூக வலைத்தளப்பதிவில் கூறியிருப்பதாவது:
அறிவார்ந்த தமிழ்ச் சமுதாயத்தை இன்று அறிவற்றவர்களாக மாற்றும் வேலையை பார்த்து வருகிறார்கள் திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சியாளர்கள்.
அனுதினமும் பயத்தோடும், பதற்றத்தோடும் வாழும் சூழலை உருவாக்கி விட்டு, விடியல் ஆட்சி என்றும், மக்களுக்கான ஆட்சி என்றும் மேடைகளில் மார்த்தட்டிக் கொண்டு இருக்கிறார்கள் நிர்வாக திறனற்றவர்கள்.
இனி யாரை ஆட்சிக்கட்டிலில் அமர்த்த வேண்டும், யாரை தூக்கியெறிய வேண்டும் என்று தமிழக மக்கள் முடிவெடுத்து விட்டார்கள்.
வைகை நதி, கடலில் சங்கமிக்கும் இடமான ராமநாதபுரத்தில் இருந்து தமிழக ஆட்சியாளர்களுக்கு இறுதி முடிவு எழுதப்பட்டுவிட்டது.
மாண்புமிகு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் பாதையிலே.. திராவிட முன்னேற்றக் கழகத்தை தூக்கியெறிவார்கள் தமிழக வாக்காள பெருமக்கள் விரைவிலே..
நிச்சயம் 2026ல் ஆட்சி மாற்றம் இருக்கும். அதுவே தமிழக மக்களின் முழக்கம் என்று திடகாத்திரமாக சொல்லி வருகிறது ‘‘தமிழகம் தலைநிமிர தமிழனின் பயணம்’’. மக்கள் சந்திப்பிற்கான இந்த மகத்தான பயணத்தின் 20-ஆம் நாள் நேற்று ராமநாதபுரத்தில்..
நேற்றைய கூட்டத்தில் பாஜக மாநிலப் பொதுச்செயலாளர் கருப்பு முருகானந்தம், பாஜக மாநிலப் பொதுச்செயலாளர் பொன் பாலகணபதி, ராமநாதபுரம் பாஜக மாவட்டத் தலைவர் முரளிதரன், ராமநாதபுரம் அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன், அதிமுக மாவட்டக்கழக செயலாளர் முனியசாமி, அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் முத்தையா, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் ராமநாதபுரம் மாவட்டத் தலைவர் ராமமூர்த்தி, ராமநாதபுரம் ஐ.ஜே.கே. மாவட்டத் தலைவர் ராஜா உள்ளிட்ட பலர் உடனிருந்தனர். இவ்வாறு நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.

