---Advertisement---

ஒரே நாடு, ஒரே தேர்தல் முக்கியத்துவம் பற்றி தமிழக மக்களுக்கு எடுத்துரைக்க உள்ளோம்: நயினார் நாகேந்திரன்

On: May 26, 2025 10:35 AM
Follow Us:
---Advertisement---

ஒரே நாடு, ஒரே தேர்தலின் தேவையை குறித்து நாங்கள் பயனுள்ள விவாதங்களை மேற்கொண்டோம். இதனுடைய முக்கியத்துவத்தை விளக்கி தமிழக மக்களுக்குத் தொடர்ச்சியாக எடுத்துரைக்கவுள்ளோம் என தலைவர் நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ., தெரிவித்துள்ளார்.

சென்னை, திருவான்மியூரில் இன்று பாஜக சார்பில் ஒரே நாடு ஒரே தேர்தலின் முக்கியத்துவத்தை விளக்கும் கருத்தரங்கம் நடைபெற்றது.

இதுகுறித்து தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியதாவது: ஒரே நாடு, ஒரே தேர்தல் முறை நேரத்தையும் பணத்தையும் சேமித்து, தேர்தல் வழிமுறைகளில் ஒரு நிலைத்தன்மையை உறுதி செய்யும் நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் உன்னதமான தொலைநோக்கு திட்டமாகும்!

இன்று திருவன்மியூரில், ஒரே நாடு ஒரே தேர்தலின் முக்கியத்துவத்தை விளக்கும் கருத்தரங்கில் சிறப்பு விருந்தினராக ஆந்திர மாநிலத்தின் துணை முதல்வர் பவன் கல்யாண் அவர்கள் கலந்து கொண்டதில் பெருமகிழ்ச்சி.

முன்னாள் ஆளுநர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள், தேசிய செயலாளரும் தமிழ்நாடு மாநில மேலிடப் பொறுப்பாளருமான அரவிந்த் மேனன் அவர்கள், தேசிய செயலாளரும் செய்தித் தொடர்பாளருமான அணில் ஆண்டனி அவர்கள், தமிழ்நாடு மாநில மேலிட இணைப் பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி அவர்கள், மாநிலத் துணை தலைவர் சக்ரவர்த்தி அவர்கள் மற்றும் மூத்த அரசியல் செயற்பாட்டாளர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன் அவர்கள் உள்ளிட்ட பாஜக-வின் பல மூத்த தலைவர்கள் இந்தக் கருத்தரங்கில் என்னுடன் பங்கேற்றனர்.

இந்தக் கருத்தரங்கை வெற்றிகரமாக ஏற்பாடு செய்த டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள் தலைமையிலான ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ மாநிலக் குழுவில் உள்ள தமிழக பாஜக மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி அவர்களுக்கும், மூத்த தலைவர் அர்ஜுனமூர்த்தி அவர்களுக்கும் மற்றும் அனைவருக்கும் என் மனமார்ந்த பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஒரே நாடு, ஒரே தேர்தலின் தேவையை குறித்து நாங்கள் பயனுள்ள விவாதங்களை மேற்கொண்டோம். மேலும் இதனுடைய முக்கியத்துவத்தை விளக்கி, தமிழக மக்களுக்குத் தொடர்ச்சியாக எடுத்துரைக்கவுள்ளோம். இவ்வாறு தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.

Join WhatsApp

Join Now

Subscribe Youtube

Subscribe Now

இதையும் படிக்கலாமே !

பெண் பிள்ளைகளைத் தவிக்கவிட்டுவிட்டு, தன் மகனுக்குப் பிறந்தநாள் வாழ்த்து பாடும் முதல்வர்: நயினார் நாகேந்திரன் காட்டம்

திமுகவுக்கு ஒரே அக்கறை துணை முதல்வராக இருக்கும் உதயநிதியை முதல்வராக்க வேண்டும்; தேனியில் நயினார் நாகேந்திரன் பேச்சு

2026ல் விழித்துக்கொள்ள வேண்டும் இல்லை என்றால் இந்த நாடு தீயவர்களின் கையில் மாட்டிக்கொண்டு சுக்கு நாறாகிவிடும்: ராமநாதபுரத்தில் தலைவர் நயினார் நாகேந்திரன்

அதிமுக ஆட்சியில் பிரிக்கப்பட்டதால் திருப்பத்தூர் மாவட்ட மக்களை திமுக புறக்கணிக்கிறது: மாநில தலைவர் நயினார் நாகேந்திரன்

கல்வியாளர் பிரிவு மாநில செயலாளருக்கு நியமன கடிதம் வழங்கிய தலைவர் நயினார் நாகேந்திரன்

விவசாயிகள் இறந்தால் 3 லட்சம் சாராயம் குடித்து இறந்தால் 10 லட்சம்; இதுதான் திராவிட மாடல்: உடுமலையில் நயினார் நாகேந்திரன் பேச்சு

Leave a Comment