---Advertisement---

அரசு நிகழ்ச்சிகளில் வந்தே மாதரம் பாடல் கட்டாயம்: மத்திய அரசு அதிரடி உத்தரவு

On: February 11, 2026 11:27 AM
Follow Us:
---Advertisement---

இனி அரசு நிகழ்ச்சிகளில் தேசிய கீதத்திற்கு முன்னதாக ‘வந்தே மாதரம்’ பாடலையும் கட்டாயம் பாட வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

வந்தே மாதரம் பாடல் இசைப்பதற்கு புதிய விதிமுறைகளை மத்திய உள்துறை அமைச்சகம் வகுத்துள்ளது. அதன் விபரம் பின்வருமாறு:

அரசு நிகழ்ச்சிகளில் தேசிய கீதத்திற்கு முன்னதாக ‘வந்தே மாதரம்’ பாடலையும் கட்டாயம் பாட வேண்டும்.

வந்தே மாதரம் பாடல் இசைக்கப்படும் போது பார்வையாளர்கள் அனைவரும் எழுந்து நிற்க வேண்டும்.

ஜனாதிபதி, ஆளுநர் நிகழ்ச்சிகளின் தொடக்கத்திலும், முடிவிலும் வந்தே மாதரம் பாடல் இசைக்கப்பட வேண்டும்.

ஆகாஷ்வானி மற்றும் தூர்தர்ஷன் போன்ற அரசு ஊடகங்களில் ஒளிபரப்பப்படும் ஜனாதிபதி உரைக்கு, முதலிலும், கடைசியிலும் வந்தே மாதரம் இசைக்கப்பட வேண்டும். இவ்வாறு மத்திய உள்துறை அமைச்சகம் கூறியுள்ளது.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment