---Advertisement---

பிரதமர் மோடியை சந்தித்தார் அமெரிக்க உளவுத்துறை தலைவர் துளசி கப்பார்டு

On: February 13, 2025 4:06 PM
Follow Us:
---Advertisement---

அமெரிக்க உளவுத்துறை தலைவரும், இந்திய வம்சாவளியை சேர்ந்தவருமான துளசி கப்பார்டு பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார்.

அமெரிக்காவுக்கு இரண்டு நாள் அரசு முறைப்பயணமாக சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி இன்று (பிப்ரவரி 13) அமெரிக்கா சென்றடைந்தார். அவருக்கு விமான நிலையத்தில் ராணுவ மரியாதை அளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து இந்திய வம்சாவளியினர் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

இதனை தொடர்ந்து அமெரிக்க உளவுத் துறை இயக்குநரும், இந்திய வம்சாவளியை சேர்ந்தவருமான துளசி கப்பார்டு வாஷிங்டனில் பிரதமர் நரேந்திர மோடியை சந்திதார்.

இது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில், அமெரிக்க உளவுத்துறை தலைவர் துளசி கப்பார்டை நான் வாஷிங்கடன்னில் சந்தித்தேன். அவருடன் இந்திய – அமெரிக்க நட்புறவு குறித்து ஆலோசித்தேன். இந்தியாவுடனான நட்புறவைப் பேணுவதில் துளசி எப்போதுமே உறுதியாக இருப்பவர். அவர் ட்ரம்ப் அரசாங்கத்தில் முக்கியப் பொறுப்புக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளதற்காக வாழ்த்தும் தெரிவித்தேன்.” என்று குறிப்பிட்டுள்ளார்.

Join WhatsApp

Join Now

Subscribe Youtube

Subscribe Now

Leave a Comment