தேச விடுதலைக்கு தன் உயிரை ஈந்த வீரமங்கை வேலு நாச்சியாரின் வீரமும் தியாகமும் தலைமுறைகளைத் தாண்டி இன்றும் என்றும் நமக்கு வழிகாட்டும் ஒளிவிளக்காக திகழும் என மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் (ஜனவரி 03) வெளியிட்டுள்ள சமூக வலைத்தளப்பதிவில் கூறியிருப்பதாவது:
வீரமும் அறிவும் ஒன்றாய் இணைந்த சிவகங்கை சீமையின் வீரமங்கை ராணி வேலுநாச்சியார் அவர்களின் பிறந்த நாள் இன்று.
பெண்களுக்கென சமூகம் விதித்திருந்த கட்டுப்பாடுகளை உடைத்து அடக்குமுறைக்கு எதிராக ஆயுதம் எடுத்த முதல் பெண் விடுதலை வீரர். ஆங்கிலேய ஆதிக்கத்தை ஒழித்துக்கட்ட போர்க்களத்தில் நின்ற அசைக்க முடியாத தைரியத்தின் உறுதியான வரலாற்று ஆவணம் ராணி வேலுநாச்சியாரின் வாழ்க்கை.
தேச விடுதலைக்கு தன் உயிரை ஈந்த வீரமங்கையின் வீரமும் தியாகமும் தலைமுறைகளைத் தாண்டி இன்றும் என்றும் நமக்கு வழிகாட்டும் ஒளிவிளக்காக திகழும்.
வீரமங்கை ராணி வேலுநாச்சியார் புகழ் ஓங்குக!
இன்றைய நாளில், வீரமங்கை வேலுநாச்சியார் அவர்களின் வீரத்தையும் உயரிய தியாகத்தையும் போற்றி வணங்குவோம். இவ்வாறு நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.




