---Advertisement---

தலைவர் அண்ணாமலை விவசாயிகளுக்கு அளித்த வாக்குறுதி வெற்றி: டங்ஸ்டன் சுரங்க திட்டத்தை ரத்து செய்த மத்திய அரசு

On: January 23, 2025 7:10 PM
Follow Us:
---Advertisement---

மதுரை அரிட்டாப்பட்டி சுற்று வட்டாரப் பகுதி விவசாயிகளுக்கு தலைவர் அண்ணாமலை பொங்கல் பண்டிகைக்கு முன் அளித்த வாக்குறுதி படி தற்போது டங்ஸ்டன் சுரங்க திட்டத்தை மத்திய அரசு அதிரடியாக ரத்து செய்துள்ளது.

மதுரை மாவட்டம், மேலூர் அடுத்த அரிட்டாபட்டி சுற்றுவட்டாரத்தில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள், விவசாயிகள் போராட்டம் நடத்தி வந்தனர். அவர்களிடம் தலைவர் அண்ணாமலை பொங்கல் பண்டிகைக்கு முன்னர் நேரில் சந்தித்து நம்பிக்கை அளித்தார். இப்பகுதியில் டங்ஸ்டன் சுரங்கம் திட்டம் வராது இதற்கு நான் உங்களுக்கு உறுதி அளிக்கிறேன் என்றார்.

அதே போன்று மத்திய அரசிடம் நேரடியாக கோரிக்கை வைக்க விவசாயிகள் பிரதிநிதி குழுவை தலைவர் அண்ணாமலை தலைமையில் டெல்லி அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு மத்திய அமைச்சர் கிஷண் ரெட்டியை சந்தித்து விவசாயிகளின் கோரிக்கை பற்றி எடுத்துரைக்கப்பட்டது.

இதனையடுத்து டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கு எதிராக கிராம தலைவர்கள் குழுவுடன் மத்திய அமைச்சர் கிஷண் ரெட்டியை சந்தித்த பிறகு தலைவர் அண்ணாமலை நேற்று தந்த பேட்டியில், ‘‘தமிழக மக்களுக்கு மிக மிக மகிழ்ச்சியான செய்தி அதிகாரபூர்வமாக வரும்’’ ‘‘சுரங்கம் வராது என்கிற உறுதிமொழியை கொடுத்தோம். அதைக் காப்பாற்றி இருக்கிறோம். அதிகாரப்பூர்வமாக மத்திய அரசு சார்பில் செய்திக்குறிப்பு வரும்.’’ என்று தலைவர் அண்ணாமலை கூறினார்.

இந்நிலையில் தற்போது மதுரை அரிட்டாபட்டி டங்ஸ்டன் சுரங்க திட்டம் ரத்து என மத்திய அரசு அதிரடியாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மேலும், டங்ஸ்டன் ஏலத்தை ரத்து செய்து உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் எப்போதும் தமிழக விவசாயிகளுக்கு உற்ற நண்பனாக இருப்பார் என்பது டங்ஸ்டன் சுரங்க திட்டம் ரத்து மூலம் மீண்டும் ஒருமுறை நிரூபணமாகியுள்ளது.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Related Post

கடனில் சிக்கித் தவிக்கும் TANGEDCO – திமுக அரசின் ஆகப்பெரும் சாதனை!

வர்த்தக ஒப்பந்தங்களால் இளைஞர்களுக்குப் புதிய வேலைவாய்ப்பு; பிரதமர் மோடி பெருமிதம்

தமிழனை காக்க, தமிழனை மீட்கப் பிரதமர் மோடி என்டிஏ கூட்டணியை உருவாக்கியுள்ளார்: நயினார் நாகேந்திரன்

திமுகவிற்கு செல்லக்கூடிய ஒவ்வொரு வாக்கும் தீய சக்தியை இன்னும் தீய சக்தியாக மாற்றும் வாக்கு: அண்ணாமலை

பிஹாரை போன்று நாளை தமிழ்நாட்டிலும் என்.டி.ஏ. வெற்றி பெறும்; தென்காசியில் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன்

கோவையில் இயற்கை வேளாண் மாநாட்டை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி: பி.எம்.கிசான் நிதி ரூ.18,000 கோடி விடுவிப்பு

Leave a Comment