திமுகவின் புளித்துப்போன தேர்தல் அறிக்கையையும் ஊசிப்போன வாக்குறுதிகளையும் மீண்டும் நம்ப மக்கள் தயாராக இல்லை என மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் (மார்ச் 29) வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
மீண்டும் மீண்டும் தமிழக மக்களை ஏமாற்ற முடியாது முதல்வர் ஸ்டாலின் அவர்களே! கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் அளித்த தேர்தல் வாக்குறுதிகளில் 90% நிறைவேற்றாமல் வஞ்சித்து ஐந்தாண்டுகளாகத் தெருதோறும் மக்களைப் போராடவிட்டுவிட்டு, மீண்டும் தேர்தல் வந்ததும் பழைய அறிக்கையைத் தூசி தட்டி புதிய வாக்குறுதிகள் போல நீங்கள் நாடகமாடலாம்! ஆனால், உங்கள் புளித்துப்போன தேர்தல் அறிக்கையையும் ஊசிப்போன வாக்குறுதிகளையும் மீண்டும் நம்ப மக்கள் தயாராக இல்லை! மீண்டும் தெருவில் இறங்கிப் போராட மக்களிடம் தெம்பும் இல்லை!
கடந்த ஐந்தாண்டுகளாகக் கல்வி, முன்னேற்றம், வேலைவாய்ப்பு, விலைவாசியைக் கட்டுப்படுத்துதல், சமூக நீதி, சட்டம் ஒழுங்கு என அனைத்தையும் சீரழித்த #ALLFAIL திமுக அரசு, வரும் சட்டமன்றத் தேர்தலிலும் #ALLFAIL ஆகும்! தமிழக மக்களால் விரட்டியடிக்கப்படும்! இவ்வாறு மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.






