விரைவில் திருட்டு திராவிட மாடல் ஆட்சி தமிழகத்தை விட்டு விரட்டப்படும் என்று வடசென்னையில் நடந்த ‘‘தமிழகம் தலை நிமிர, தமிழனின் பயணம்’’ பிரச்சாரத்தில் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் ‘‘தமிழகம் தலை நிமிர, தமிழனின் பயணம்’’ நான்காம் நாள் பிரச்சாரம் வடசென்னையில் (அக்டோபர் 15) நடைபெற்றது. இதில் பாஜக மற்றும் அதிமுக தொண்டர்கள் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.
இந்த நிகழ்ச்சியில் நயினார் நாகேந்திரன் பேசியதாவது: எந்த ஊரில் இருந்து வந்தாலும், எந்த மாநிலத்தில் இருந்து வந்தாலும் வந்தவர்களை வாழவைக்கும் இந்த பூமிதான் சிங்கார சென்னை என்பதில் யாருக்கும் எந்த சந்தேகம் இருக்கிறது.
ஆகவே இந்த மண்ணிற்கு எனது முதல் வணக்கத்தை தெரிவிக்க கடமை பட்டிருக்கேன். ஒரு பொதுக்கூட்டமா என்று சொல்ல முடியாத அளவிற்கு ஒரு மாநாட்டையே இங்கே ஏற்பாடு செய்திருக்கிறார்கள். இது தேர்தலுக்கு பிறகு நடைபெற வேண்டிய கூட்டம், தேர்தலுக்கு முன்பாகவே ஏற்பாடு செய்திருக்கிறார்கள்.
கூவம் ஆற்றிலும், பக்கிங்காம் கால்வாயிலும் சரி தேர்தல் அறிக்கையில் சொன்னார்கள். 5000 கோடி ரூபாயில் அனைத்தையும் மாற்றப்போகிறோம் என்றார்கள். முன்னாடி மேயராக இருக்கிற போது நாங்கள் சிங்கார சென்னையாக மாற்றுவோம் என்று சொன்னார்கள். வடசென்னையில் உள்ள ஆர்.கே.நகரில் அவ்வளவு குப்பை போட்டு வைத்துள்ளார்கள்.

ஆனால் 5000 கோடி ரூபாயில் அனைத்தையும் மாற்றுவோம் என்றார்கள். லேசாக மழை பெய்தாலே சென்னையில் அனைத்து இடங்களிலும் வெள்ளம் வந்துவிடும். அன்றைக்கு பெய்த பெரிய மழை வெள்ளத்தில் கூட திமுக அமைச்சர்கள் யாரும் வரவில்லை. தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா இருக்கிறார். நாங்கள் 15000 கோடி ரூபாயில் ஃபாக்ஸ்கான் முதலீட்டை கொண்டு வந்திருக்கிறோம் என்றார்.
ஆனால் ஃபாக்ஸ்கான் நிறுவனம் இன்றைக்கு அவர்கள் கூறியதை மறுத்துள்ளது. ஃபாக்ஸ்கான் 2006ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட ஒரு நிறுவனம் ஆகும். அந்த நிறுவனம் 2006ஆம் ஆண்டு புரட்சித் தலைவர் அம்மா அவர்கள் முதலமைச்சராக இருந்தார்கள். அன்றைக்கு தொழில்துறை அமைச்சராக நான்தான் இருந்தேன்.
ஃபாக்ஸ்கான் நிறுவனத்தை தாங்கள்தான் கொண்டு வந்தோம் என, யாரோ பெற்ற குழந்தைக்கு திமுகவினர் பெயர் வைக்கிறார்கள். திமுகவினர் கூறியதற்கு ஃபாக்ஸ்கான் நிறுவனம் மறுத்துள்ளது. இதற்கு டி.ஆர்.பி.ராஜா என்ன பதில் சொல்வார் என்று தெரியவில்லை.
ஏற்கனவே வெளிநாட்டிற்கு எல்லாம் சென்றீர்களே எவ்வளவு தொழிற்சாலை கொண்டு வந்துள்ளீர்கள் என வெள்ளை அறிக்கை கொடுங்கள் என்று அண்ணன் எடப்பாடி பழனிசாமி கேட்டார்கள். அதற்கு ஒரு வெள்ளை பேப்பரை காண்பித்து இதுதான் வெள்ளை அறிக்கை என்று டி.ஆர்.பி.ராஜா சொல்கிறார். ஒரு அமைச்சர் இப்படி பதில் சொல்லலாமா? எல்லாமே பொய், அரசனும் பொய், ஆண்டியும் பொய்.. திமுகவில் எல்லோருமே பொய்தான்.
அது மட்டுமல்ல ஜாபர்சாதிக் 3500 கிலோ போதைப் பொருட்களை கடத்தியிருக்கிறார். அந்த ஜாபர்சாதிக் யாரு, திமுகவில் பொறுப்பில் இருந்தவர். ஆனால் இங்கே வடசென்னையில் இன்றைக்கு கஞ்சா எவ்வளவு தூரம் புழக்கத்தில் இருக்கு என்று சொன்னால் அதனை திமுகவினர்தான் செய்து வருகின்றனர்.
சென்னையில் 15 நாட்களாக துப்புறவு தொழிலாளர்கள் போராடினார்கள். நீதிமன்றத்தில் ஒரு உத்தரவை வாங்கி அவர்களை அப்புறப்படுத்துகிறார்கள்.
வடசென்னையில் உள்ள அமைச்சர் சேகர்பாபு தூய்மை பணியாளர்களை மிரட்டுகிறார். மேலும் அடித்து விரட்டுகின்றனர். திமுக தேர்தல் அறிக்கையில் தூய்மை பணியாளர்களுக்கு சம்பளம் உயர்த்தி வழங்கப்படும், பணி நிரந்தரம் ஆக்கப்படும் என்று சொன்னார்கள்.
ஆனால் சென்னையில் உள்ள எல்லோருக்கும் தெரியும். தூய்மை பணியாளர்கள் ஆண், பெண் என்று பார்க்காமல் அடித்து அப்புறப்படுத்தி மிகப்பெரிய பாவத்தை திமுக செய்துள்ளது. தூய்மை பணியாளர்கள் என்ன கேட்டார்கள். கூலி உயர்வு வேண்டும் என்றவர்களை அடித்து அப்புறப்படுத்தினர்.
அந்த நேரத்தில் முதல்வர் ஸ்டாலின் கூலி திரைப்படம் பார்த்துக் கொண்டிருக்கிறார். இதற்கு எல்லாம் வரக்கூடிய தேர்தலில் நிச்சயமாக பதில் சொல்லி ஆக வேண்டும். புரட்சித் தலைவர் அம்மா அவர்கள் பாராளுமன்றத் தேர்தலில் ஒரு பாட்டு பாடினார். ஒரு குடும்பம் வாழ்வதா தனி மனிதன் சாவதா என்று கேட்டார்கள். ஒரு குடும்பம் வாழ்வதற்காக ஒரு தனிமனிதன் சாவதா என்பதுதான் எனது கேள்வி. மத்தியில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சியில் இருக்க வேண்டும், தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமி ஆட்சிக்கு வரவேண்டும் திராவிட மாடல் ஆட்சியை ஒழிக்க வேண்டும் என்பதற்காக ஏற்படுத்தப்பட்ட அற்புதமான கூட்டணிதான் இந்த கூட்டணி, இந்த கூட்டம் சாதாரண கூட்டம் அல்ல, இது வெற்றிக்கான கூட்டம்.. வெற்றி வீரர்கள் கூடும் கூட்டம்.. வெத்து வீரர்கள் கூடும் கூட்டமல்ல, இது கூட்டிய கூட்டம் அல்ல, கூடிய கூட்டம்.. விரைவில் திராவிட மாடல் ஆட்சி தமிழகத்தை விட்டு விரட்டப்படும். இவ்வாறு நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.
மேலும் இது தொடர்பாக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தனது சமூக வலைத்தளப்பதிவில் கூறியிருப்பதாவது: மூன்று நாள் பயணத்தில், ஆட்சி மாற்றத்திற்கான அவசியமும் எதிர்பார்ப்பும் தெளிவாகத் தென்பட்டது. “தமிழகம் தலை நிமிர, தமிழனின் பயணம்” நான்காம் நாள் இன்று.
வந்தாரை வாழ வைக்கும் தமிழகத்தில், இந்தியாவின் முதல் நவீன நகரத்தை உருவாக்கிய தனிச்சிறப்பு வடசென்னைக்கே உண்டு. 27 நட்சத்திரக் காரர்களுக்காக தனித்தனியே 27 லிங்கங்கள், சுந்தரருக்கும் சங்கிலியாருக்கும் சிவபெருமானே திருமணம் செய்து வைத்த புண்ணிய ஸ்தலமான திருவெற்றியூரில் வீற்றிருக்கும் அருள்மிகு வடிவடை அம்மன் உடனுறை தியாகராஜ சுவாமிகளை வணங்கி, மாண்புமிகு பாரதப் பிரதமர் அவர்களின் வழியில் முதல் இடத்தை நமக்கு கொடுக்கப் போகிறது புனித ஜார்ஜ் கோட்டை!
ஊழல்வாதிகளை அவர்கள் போக வேண்டிய இடத்துக்கே அனுப்பி வைக்க ஆரம்பித்துவிட்டது வேட்டை!
பார்க்கும் போது மனம் குமுறுகிறது மக்கள் படும் பாட்டை இனி என்றும் எடுபடாது தமிழக மக்கள் மத்தியில் திருட்டு திராவிட முன்னேற்றக் கழகத்தின் சேட்டை!
இந்த நிகழ்வில், பாஜக மாநில துணைத்தலைவர் கரு.நாகராஜன், சட்டமன்ற உறுப்பினர் ஐயா எம்.ஆர்.காந்தி, மாநில பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம், மாநிலத் துணைத்தலைவர் வி.பி.துரைசாமி, கே.எஸ்.ராதாகிருஷ்ணன், பாஜக வடசென்னை கிழக்கு மாவட்ட தலைவர் நாகராஜ், வடசென்னை மேற்கு மாவட்ட தலைவர் பாலாஜி, அதிமுக வட சென்னை வடக்கு (கிழக்கு) மாவட்டம் ஆர்.எஸ். ராஜேஷ், அதிமுக வட சென்னை வடக்கு (மேற்கு) மாவட்டம் புரசை விஎஸ் பாபு முன்னாள் எம்.எல்.ஏ., உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இவ்வாறு நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.