உலகின் வலிமைக்கு ஒரு நம்பிக்கை தூணாக இந்தியா உள்ளது : கானா நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி பெருமிதம்
			
					மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியா, உலகின் வலிமைக்கு ஒரு நம்பிக்கை தூணாக உள்ளது. நிலையான மற்றும் வளமான உலகிற்கு வலுவான இந்தியா பங்களிக்கும், என, கானா நாடாளுமன்றத்தில் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். ஐந்து நாடுகளுக்கு அரசு முறைப் பயணமாக பிரதமர் மோடி சென்றுள்ளார். முதலாவதாக, மேற்கு ஆப்ரிக்க நாடான கானாவுக்கு அவர் சென்றார். தலைநகர் அக்ராவில் உள்ள விமான நிலையத்தில் வந்திறங்கிய பிரதமர் மோடியை, அந்நாட்டின் அதிபர் ஜான் டிரமணி மஹாமா நேரில் சென்று…

