தருமபுரியில் காலாவதியான அரசுப் பேருந்து மோதி சிறுமி உயிரிழந்திருக்கும் செய்தி நெஞ்சை கனக்க வைக்கிறது : நயினார் நாகேந்திரன்
			
					தருமபுரியில் கட்டுப்பாட்டை இழந்த காலாவதியான அரசுப் பேருந்து சாலையோரம் இருந்த வீட்டின் மீது மோதியதில், அங்கு விளையாடிக்கொண்டிருந்த மூன்று வயது சிறுமி உயிரிழந்திருப்பது நெஞ்சை கனக்க வைக்கிறது என பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். தருமபுரி மாவட்டம் நூலஅள்ளி அடுத்த உழவன் கொட்டாய் கிராமத்திற்கு சென்றுவிட்டு (ஜூலை 23) காலை தருமபுரி நகரத்தை நோக்கி திரும்பிக்கொண்டிருந்த காலாவதியான அரசுப் பேருந்து ஸ்டேரிங் கட்டானதால் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த ராமு என்பவரின் வீட்டின்…

