நரேந்திர மோடி ஆட்சியில் ஊழல் முற்றிலுமாக ஒழிக்கப்பட்டுள்ளது : தருமபுரியில் எஸ்.ஜி.சூர்யா
பாரத பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான ஆட்சியில் ஊழல் முற்றிலுமாக ஒழிக்கப்பட்டுள்ளது என பாஜக மாநில செயலாளர் எஸ்.ஜி.சூர்யா தெரிவித்துள்ளார். தருமபுரி நகரில் தொழில்முறை சந்திப்பு கூட்டம் (ஜூன் 18) பாஜக மாவட்டத் தலைவர் சி.சரவணன் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தர்மபுரி மாவட்டத்தை சார்ந்த மருத்துவர்கள், பொறியாளர்கள், வழக்கறிஞர்கள், தொழிலதிபர்கள் ஆகியோர் பங்கேற்றனர். சிறப்பு அழைப்பாளராக மாநில செயலாளர் எஸ்.ஜி.சூர்யா கலந்து கொண்டு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசின் 11 ஆண்டுகால சாதனைகள் குறித்து…