திமுகவுக்கு ஒரே அக்கறை துணை முதல்வராக இருக்கும் உதயநிதியை முதல்வராக்க வேண்டும்; தேனியில் நயினார் நாகேந்திரன் பேச்சு
திமுகவுக்கு இருக்கின்ற அக்கறை ஒன்றே ஒன்றுதான். துணை முதலமைச்சராக இருக்கும் உதயநிதி ஸ்டாலினை முதலமைச்சராக்க வேண்டும். அதை ஒன்றை தவிர வேற எந்தவிதமான நோக்கமும் கிடையாது என தேனியில் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். தேனி மாவட்டத்தில் ‘‘தமிழகம் தலைநிமிர தமிழனின் பயணம்’’ 28வது நாளாக (நவம்பர் 24) நடைபெற்றது. இந்தக்பொதுக்கூட்டத்தில் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கலந்து கொண்டார். அவருக்கு பாஜகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதனையடுத்து மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் உரையாற்றியதாவது:…

