---Advertisement---

சத்தீஸ்கரில் 14 நக்சலைட்டுகளை என்கவுண்டர் செய்த பாதுகாப்பு படை

On: January 3, 2026 8:34 AM
Follow Us:
---Advertisement---

சத்தீஸ்கர் மாநிலத்தில் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் நக்சலைட்டுகள் 14 பேர் கொல்லப்பட்டனர்.

சத்தீஸ்கரின் பிஜாப்பூர், சுக்மா பகுதிகளில் நக்சலைட்டுகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. அப்பகுதியில் பாதுகாப்பு படையினர் போலீசாருடன் இணைந்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அங்கு பதுங்கியிருந்த நக்சல்கள், பாதுகாப்பு படையினர் மீது துப்பாக்கியால் சுட்டனர். படையினரும் தக்க பதிலடி கொடுத்தனர்.

இரண்டு இடங்களில் பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுன்டரில் நக்சலைட்டுகள் 14 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். மேலும் அப்பகுதியில் நக்சலைட்டுகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினர் சந்தேகப்படுகின்றனர். இதனால் அப்பகுதியில் தொடர்ந்து தேடுதல் வேட்டை நடந்து வருகிறது. இந்த ஆண்டு இதுவரை சத்தீஸ்கரில் நக்சலைட்டுகள் 285 பேர் என்கவுன்டர்களில் கொல்லப்பட்டுள்ளனர்.

மறுபுறம், பாதுகாப்பு படையினரின் அதிரடி நடவடிக்கையால் நக்சலைட்டுகள் போலீசாரிடம் ஆயுதங்களுடன் சரண் அடையும் நிகழ்வுகளும் நடக்கிறது. வரும் மார்ச் 31ம் தேதிக்குள் இந்தியாவில் நக்சலிசத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சர் காலக்கெடு விதித்துள்ள நிலையில் நக்சல் எதிர்ப்பு நடவடிக்கையை பாதுகாப்பு படையினர் தீவிரப்படுத்தி உள்ளனர்.

Join WhatsApp

Join Now

Subscribe Youtube

Subscribe Now

இதையும் படிக்கலாமே !

Leave a Comment