---Advertisement---

இந்திய ராணுவத்திற்கு உயிரை கொடுக்கத் தயார்: சண்டீகரில் குவிந்த இளைஞர்கள்

On: May 10, 2025 8:07 AM
Follow Us:
---Advertisement---

இந்தியா – பாகிஸ்தான் இடையேயான கடுமையான தாக்குதல் நடைபெற்றுவரும் நிலையில், இந்திய ராணுவத்தில் சேர விருப்பம் தெரிவித்து பஞ்சாபின் சண்டீகரில் பெண்கள், இளைஞர் என பல்லாயிரம் பேர் குவிந்ததால் அங்கு பரபரப்பு நிலவி வருகிறது.

ஏப்ரல் 22 ஆம் தேதி பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் அப்பாவி ஹிந்துக்கள் 26 கொல்லப்பட்டனர். இதனைத் தொடர்ந்து பாகிஸ்தானில் உள்ள 9 பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா துல்லியத் தாக்குதல் நடத்தியது. இதில் நூற்றுக்கணக்கான பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.

பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக இந்தியா மீது மே 8ஆம் தேதி முதல் ட்ரோன் தாக்குதலை பாகிஸ்தான் தொடர்ந்துள்ளது.

பாகிஸ்தானின் தொடர் ட்ரோன் தாக்குதலை, இந்திய வான் பாதுகாப்புப் பிரிவு துல்லிய தாக்குதல் நடத்தி அனைத்தை ட்ரோன்களையும் அழித்தொழித்தது. இருதரப்பினரும் நாள்தோறும் கடுமையான தாக்குதல் நடத்தப்பட்டு வரும் வேளையில் சண்டீகர் துணை ஆணையர் நிஷாந்த் குமார் நேற்றிரவு தன்னுடைய எக்ஸ் வலைத்தளப் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார்.

அந்தப் பதிவில், “18 வயதுக்கு மேற்பட்டோர் தன்னார்வலர்களாக சிவில் பாதுகாப்பு படையில் சேருமாறும், ஆர்வமுள்ளவர்கள் நாளை (அதாவது மே 10) காலை 10 மணிக்கு தாகூர் தியேட்டருக்கு வரலாம்” என்றும் பதிவிட்டிருந்தார். அதன்படி, காலையிலேயே குவிந்த இளைஞர் தன்னார்வலர் படையினர், “பாகிஸ்தான் அழிய வேண்டும்.. இந்திய ராணுவத்துக்கு உயிரைக் கொடுக்கவும் தயார்” எனக் கோஷமிட்டனர். இந்தத் தன்னார்வலர்களுக்கான பயிற்சிகள் இன்றிரவு 10.30 மணியளவில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சண்டிகர் இளைஞர்கள் போன்று ஒட்டுமொத்த தேசத்தில் உள்ள இளைஞர்களும் ராணுவத்திற்காக உதவ தயாராக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Join WhatsApp

Join Now

Subscribe Youtube

Subscribe Now

Leave a Comment