கோவாவில் நடந்த ‘அயர்ன்மேன்’ போட்டியில் சாதித்த தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தேசிய இளைஞர் அணி தலைவர் தேஜஸ்வி சூர்யா ஆகியோருக்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டியுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி (நவம்பர் 09) வெளியிட்டுள்ள வாழ்த்துச்செய்தியில்;
கோவாவில் இன்று நடைபெற்ற அயர்ன்மேன் 70.3 போன்ற நிகழ்வுகளில் நமது இளைஞர்களின் பங்களிப்பு அதிகரித்து வருவதைக் கண்டு மகிழ்ச்சி அடைகிறேன். இதுபோன்ற நிகழ்வுகள் #FitIndia இயக்கத்திற்கு பெரும் பங்களிக்கின்றன. கலந்து கொண்ட அனைவருக்கும் வாழ்த்துகள். நமது கட்சியின் இளம் சகாக்களான அண்ணாமலையும் தேஜஸ்வி சூர்யாவும் அயர்ன்மேன் டிரையத்லானை வெற்றிகரமாக நிறைவு செய்தவர்களில் இடம்பெற்றிருந்தது மகிழ்ச்சி அளிக்கிறது. இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.

