கோவை ஈச்சனாரி செல்வம் மஹாலில், (செப்டம்பர் 06) நடைபெற்ற தமிழக பாஜக சேவை இருவாரங்கள் மாநில பயிலரங்க நிகழ்வில் கலந்துகொண்டு தலைவர் நயினார் நாகேந்திரன் உரையாற்றினார்.
இது தொடர்பாக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் சமூக வலைத்தளப்பதிவில்: மாண்புமிகு பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் பிறந்தநாளையொட்டி, பாஜக சார்பில் இந்தியா முழுவதும் வரும் செப்டம்பர் 17 ஆம் தேதியிலிருந்து அக்டோபர் 2 ஆம் தேதி வரை சேவை இரு வாரங்கள் நிகழ்வு கொண்டாடப்படுகிறது.
இதையொட்டி இன்று கோவை ஈச்சனாரி செல்வம் மஹாலில், நடைபெற்ற தமிழக பாஜக சேவை இருவாரங்கள் மாநில பயிலரங்க நிகழ்வில் கலந்துகொண்டு பேசினேன்.
இந்த பயிலரங்கத்தை சிறப்பாக ஒருங்கிணைத்த கோவை பெருங்கோட்ட பொறுப்பாளர் மற்றும் மாநில பொதுச் செயலாளர் ஏ.பி.முருகானந்தம் அவர்களுக்கும் கோவை தெற்கு மாவட்ட தலைவர் சந்திரசேகர் அவர்களுக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த நிகழ்வில், பாஜகவின் மேலிட பொறுப்பாளர் அரவிந்த் மேனன் அவர்களும், தமிழக பாஜக தேசிய இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி அவர்களும், பாஜக மாநில அமைப்பு பொதுச்செயலாளர் கேசவ விநாயகன் அவர்களும், பாஜக மாநில செயலாளர் வினோஜ் பி செல்வம் அவர்களும், மாநில செயலாளர் நந்தகுமார் அவர்களும், மகளிர் அணி தலைவர் கவிதா ஸ்ரீகாந்த் அவர்களும், மகளிர் அணி முன்னாள் தலைவர் உமாரதி அவர்களும், மாநில பொதுக்குழு உறுப்பினர் கதிரவன் அவர்களும், முன்னாள் ஈரோடு தெற்கு மாவட்ட தலைவர் வேதானந்தம் அவர்களும் உடன் இருந்தனர். இவ்வாறு நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.