சமூகவலைத்தளத்தில் பஹல்காமல் பயங்கரவாத சம்பவத்தில் இந்திய ராணுவத்தை இழிவுபடுத்தியும், பிரதமரை தொடர்பு படுத்தியும் பேசிய திகவை சேர்ந்த சுந்தரவள்ளி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தருமபுரி எஸ்.பி., அலுவலகத்தில் பாஜக மகளிரணி சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
காஷ்மீர் பஹல்காமில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக உயிழிந்தனர். அவர்களின் மரணத்திற்கு உலகம் முழுவதும் கண்டனம் வலுத்து வருகிறது. ஆனால் உள்நாட்டில் உள்ள சில விஷக்கிருமிகள் இந்திய ராணுவத்தையும், பாரதப் பிரதமரையும் தொடர்பு படுத்தி சமூக வலைத்தளம் வாயிலாக கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
அதுபோன்று திகவை சேர்ந்த சுந்தரவள்ளி என்ற விஷக்கிருமியும் பஹல்காமில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலை பிரதமர் மற்றும் இந்திய ராணுவத்தையும் தொடர்பு படுத்தி சமூக வலைத்தளம் வாயிலாக கருத்துக்களை தெரிவித்து வந்தார்.
சுந்தரவள்ளியின் கருத்துக்கு கண்டனங்கள் குவிந்து வருவது மட்டுமின்றி தமிழகம் முழுவதும் பாஜக மகளிர் அணியினர் புகார் அளித்து வருகின்றனர்.
இந்தநிலையில், சுந்தரவள்ளி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தருமபுரி மாவட்ட பாஜக மகளிர் அணி தலைவர் சங்கீதா தலைமையிலான குழுவினர் தருமபுரி மாவட்ட எஸ்.பி., மகேஸ்வரனை சந்தித்து புகார் மனு அளித்துள்ளனர்.
புகார் மனுவில் திக சுந்தரவள்ளி மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.