சென்னையில் இன்று (ஜூலை 16) பாஜக மாநில மையக்குழு கூட்டம் தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமையில் நடைபெற்றது.
இதுகுறித்து நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் சமூக வலைத்தளப்பதிவில் கூறியிருப்பதாவது: ‘‘பூத் வலிமைப்படுத்தும் பயணத்தின்’’ செயல்பாடுகள் தொடர்பான பாஜகவின் மாநில மையக்குழு கூட்டம் இன்று சென்னையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், ஜூலை 13 ஆம் தேதி முதல் ஜூலை 15 ஆம் தேதி வரை பூத் முகவர்களுடன் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டம் உள்ளிட்ட பல்வேறு பணிகள் தொடர்பாக, ஆலோசனை நடத்தினோம்.
இந்தக் கூட்டத்தில், பாஜக மாநில அமைப்பு பொதுச்செயலாளர் கேசவ விநாயகன், தேசிய பொதுக்குழு உறுப்பினர் ஹெச்.ராஜா, மாநில துணைத்தலைவர் மற்றும் சென்னை பெருங்கோட்ட பொறுப்பாளர் கரு நாகராஜன், மாநில பொதுச்செயலாளர் பேராசிரியர் இராம ஸ்ரீனிவாசன், மாநில பொதுச்செயலாளரும் கோவை பெருங்கோட்ட பொறுப்பாளருமான ஏ.பி.முருகானந்தம், மாநில பொதுச் செயலாளர் மற்றும் கன்னியாகுமரி பெருங்கோட்ட பொறுப்பாளர் பொன் பாலகணபதி அவர்களும் மதுரை பெருங்கோட்ட பொறுப்பாளர் கதலி நரசிங்க பெருமாள், மாநில பொதுச்செயலாளர் மற்றும் வேலூர் பெருங்கோட்ட பொறுப்பாளர் கார்த்தியாயினி, மாநில செயலாளர் வெங்கடேசன் அவர்களும் பங்கேற்று தங்களது ஆலோசனைகளை வழங்கினர். இவ்வாறு நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.