---Advertisement---

பாஜக தேர்தல் அறிக்கை இரண்டு நாட்களில் வெளியிடப்படும்: மாநில தலைவர் நயினார் நாகேந்திரன்

On: March 26, 2026 4:27 PM
Follow Us:
---Advertisement---

இரு தினங்களில் பாஜக தேர்தல் அறிக்கை வெளியிடப்படும் என மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

சென்னை கமலாலயத்தில் தமிழக சட்டசபை தேர்தல் குறித்த ஆலோசனை கூட்டம் (மார்ச் 26) நடந்தது. இக்கூட்டத்திற்கு பாஜக அமைப்பு பொதுச் செயலாளர் பி.எல் சந்தோஷ் தலைமை தாங்கினார். தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் மற்றும் மூத்த தலைவர்கள் பங்கேற்றனர்.

பிறகு செய்தியாளர்கள் சந்திப்பில் நயினார் நாகேந்திரன் கூறியதாவது: கமிட்டி கூடி வேட்பாளர் பட்டியலை முடிவு செய்வோம். அதன் பிறகு இன்னும் இரு தினங்களில் பாஜக தேர்தல் அறிக்கை அறிவிக்கப்படும். பாஜக வேட்பாளர் குறித்து டெல்லியில் இருந்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும். இவ்வாறு நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment