---Advertisement---

துணை ஜனாதிபதி தேர்தல் – முதல் நபராக வாக்கை பதிவு செய்த பிரதமர் மோடி

On: September 9, 2025 6:23 AM
Follow Us:
---Advertisement---

துணை ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று (செப்டம்பர் 09) தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த தேர்தலில், பிரதமர் நரேந்திர மோடி முதல் வாக்கை பதிவு செய்தார். காலை 10 மணிக்கு முன்னதாகவே நாடாளுமன்ற வளாகத்துக்கு வந்த அவர், வாக்குப் பதிவு அறைக்குச் செல்லும்போது மத்திய அமைச்சர்கள் கிரண் ரிஜிஜு மற்றும் ராம் மோகன் நாயுடு ஆகியோர் உடன் இருந்தனர்.

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளராக மகாராஷ்டிரா மாநில ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் மற்றும் இண்டி கூட்டணி சார்பில் உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி சுதர்சன் ரெட்டியும் போட்டியிடுகின்றனர். துணை ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாடாளுமன்ற வளாகத்தில் இன்று நடைபெற்று வருகிறது. முதல் நபராக பிரதமர் நரேந்திர மோடி தனது வாக்கை பதிவு செய்தார்.

துணை ஜனாதிபதி தேர்தலில் 781 எம்.பி-க்கள் வாக்களிக்க தகுதி பெற்றனர். ஆனால், சிலர் வாக்களிப்பதை புறக்கணித்த நிலையில், 770 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களது வாக்கினை பதிவு செய்து வருகின்றனர். வாக்குப்பதிவு நிறைவடைந்த பிறகு, மாலை 6 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கி இன்று இரவே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.

Join WhatsApp

Join Now

Subscribe Youtube

Subscribe Now

Leave a Comment