நாடாளுமன்றத்தில் பிரதமர் நரேந்திர மோடியை (ஆகஸ்ட் 07) தமிழக விவசாயிகள் குழுவினர் சந்தித்தனர்.
இந்த சந்திப்பு குறித்து சமூக ஊடக எக்ஸ் வலைத்தளத்தில் பிரதமர் நரேந்திர மோடி பதிவிட்டதாவது: தமிழ்நாட்டைச் சேர்ந்த விவசாயிகள் குழு ஒன்றை இன்று காலை நாடாளுமன்றத்தில் சந்தித்தேன். புதிய கண்டுபிடிப்பு, உற்பத்தி திறனை ஊக்குவிக்கவும், நிலைத்தன்மையை அதிகரிக்கவும் புதிய வேளாண் தொழில்நுட்பங்களை பயன்படுத்துவதில் அவர்களின் கவனம் மற்றும் அனுபவங்கள் பற்றி கேட்டறிந்தது உற்சாகம் அளிப்பதாக இருந்தது. இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.