Skip to content
Orey Naadu ஒரேநாடு – இமயம் முதல் குமரி வரை

Orey Naadu ஒரேநாடு – இமயம் முதல் குமரி வரை

  • முகப்பு
  • சந்த செலுத்த
  • தொடர்புக்கு
  • Toggle search form
  • சசி தரூர், பினராயி விஜயன் இங்கே இருப்பதால் இண்டி கூட்டணியினர் பலர் தூக்கத்தை இழப்பார்கள்: கேரளாவில் பிரதமர் மோடி பேச்சு இந்தியா
  • போலீஸிடம் வழங்கிய ஆதாரம் ஐடிவிங் நிர்வாகிக்கு சென்றது எப்படி? திமுக நிர்வாகி மீது புகார் அளித்த இளம்பெண் கண்ணீர் தமிழ்நாடு
  • பஹல்காமில் இஸ்லாமிய பயங்கரவாதிகள் வெறியாட்டம்; ‘‘நீ ஹிந்துவா?’’ என கேட்டு, கேட்டு 28 சுற்றுலாப்பயணிகளை கொன்ற கொடூரம் இந்தியா
  • ‘ஆபரேஷன் சிந்தூர்’ பெயர் வைக்க காரணம் என்ன? இந்தியா
  • அரசு ரப்பர் தொழிற்சாலையில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு மருத்துவ காப்பீடு வழங்க வேண்டும் : நயினார் நாகேந்திரன் அரசியல்
  • பாஜக ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்துரையாடிய நயினார் நாகேந்திரன் தமிழ்நாடு
  • தீர்வு கொடுக்காமல் எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊற்றும் விஜய்: தலைவர் அண்ணாமலை காட்டம் அரசியல்
  • அப்பாவி இளைஞனைத் துள்ளத் துடிக்கக் கொன்றுவிட்டு “சாரி” என்று சொல்வது எந்த வகையில் நியாயமாகும்? ஸ்டாலினுக்கு நயினார் நாகேந்திரன் கேள்வி அரசியல்

கர்மவீரர் காமராஜரை தொடர்ந்து இழிவுபடுத்தும் திமுக : பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கண்டனம்

Posted on July 17, 2025July 17, 2025 By வ.தங்கவேல் No Comments on கர்மவீரர் காமராஜரை தொடர்ந்து இழிவுபடுத்தும் திமுக : பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கண்டனம்

கர்மவீரர் காமராஜரைத் தொடர்ந்து இழிவுபடுத்தும் திமுக-வினருக்கு தமிழக பாஜக சார்பாகக் கண்டனங்கள் என மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

மறைந்த முன்னாள் முதலமைச்சர் கர்ம வீரர் காமராஜர் குறித்து திமுக எம்.பி., திருச்சி சிவா, அவதூறாக பேசியிருந்தார். அவருக்கு கண்டனங்கள் வலுத்து வருகிறது.

இந்தநிலையில், தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் (ஜூலை 16) வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில் கூறியிருப்பதாவது: கர்மவீரர் காமராஜரைத் தொடர்ந்து இழிவுபடுத்தும் திமுக-வினருக்கு தமிழக பாஜக சார்பாகக் கண்டனங்கள்.

மறைந்த தலைவர்களைக் கொச்சைப்படுத்திப் பேசுவது, அவர்களது மேன்மையை இழிவுபடுத்திப் பேசுவது திமுகவிற்குப் புதிதில்லை. குறிப்பாக, கர்மவீரர் காமராஜரைக் கொச்சைப்படுத்திப் பேசுவது திமுக-வினரின் வழித் தோன்றல்களுக்குப் புதிதில்லை.

தற்போது, திமுகவின் துணைப் பொதுச் செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான திருச்சி சிவா அவர்கள், மறைந்த திமுக தலைவர் கருணாநிதி அவர்களைப் புகழ்கிறேன் என கர்மவீரர் காமராஜர் அவர்களைக் குறைத்துப் பேசியிருப்பது, அதுவும் வரலாற்றுத் திரிபைச் செய்திருப்பது வருந்தத்தக்கது என்பதை விட வன்மையாகக் கண்டிக்கத்தக்கதாகும்.

தன் மறைவுக்கு முன்பு கருணாநிதியின் கரங்களைப் பிடித்துக் கொண்டு ஜனநாயகத்தைக் காக்க வேண்டுமென்று காமராஜர் கேட்டதாகவும், மின் வெட்டினைக் கண்டித்தும் திமுக அரசின் அவலத்தை எதிர்த்தும் தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்திய காமராஜர் அவர்கள் ஏசி இல்லாமல் இருக்கமாட்டார் என்றும் அவருடைய தங்கும் விடுதி உட்பட அனைத்து இடங்களிலும் குளிர்சாதன வசதி செய்தவர் கருணாநிதி என்றும் திருச்சி சிவா பேசியுள்ளார்.

ஏழை எளிய மக்களின் வாழ்வு மேம்பட உழைத்த ஒப்பற்ற மனிதரான காமராஜர் சுகவாழ்வு வாழ்ந்தார் என்பது போல உள்நோக்கம் கொண்டு திருச்சி சிவா பேசியிருப்பது உண்மையிலேயே பேரதிர்ச்சியாக உள்ளது.

அதோடு எமர்ஜென்சியின் போது காமராஜரைக் கைது செய்ய கங்கணம் கட்டிக் கொண்டிருந்த இந்திரா காந்தியிடமிருந்து திமுக அரசு தான் அவரைக் காத்தது என்றும் பேசியுள்ளார்.

சுதந்திரப் போராட்டத்தில் வெள்ளையர்களை எதிர்த்து சிறை சென்ற காமராஜரை இந்திரா காந்தியிடமிருந்து காத்தோமென திமுக சொல்வதெல்லாம் நகைப்புக்குரியது. காமராஜர் அவர்களை அன்று இந்திரா காந்தி அவர்கள் கைது செய்திருந்தால் தமிழகமே வெகுண்டெழுந்திருக்கும், இன்று அதை வைத்து அவரை இழிவு செய்யும் திமுகவிற்கு எதிராகவும் நிச்சயமாக வெகுண்டெழும்.

மேலும், இந்திரா காந்தியின் எதேச்சதிகாரத்தை எதிர்த்து தான் காங்கிரஸ் அன்று உடைந்தது. அப்போது காமராஜர் அவர்களை எதிர்த்துக் கொண்டு இந்திரா காந்தியோடு கூட்டணி வைத்தது யார்? இதே கருணாநிதி தலைமையிலான திமுகதானே?

காமராஜரின் புகழும், அரசியலும் அழிய வேண்டுமென்று பணி செய்தது திமுகதான். அவர்களுடைய ஆழ் மனதின் வன்மம் எப்போதும் காமராஜரைப் பதம் பார்த்துக் கொண்டேதான் உள்ளது. சட்டமன்றத்திலேயே காமராஜரின் அருஞ்செயலை கருணாநிதி மீது ஏற்றிக் கூறினார் அமைச்சர் துரைமுருகன் அவர்கள். காமராஜருக்கே கல்லறை கட்டினோம் எனக் கொச்சையாகப் பேசினார் ஆர்.எஸ். பாரதி. அதே வரிசையில் அவதூறை அள்ளித் தெளித்துள்ளார் திருச்சி சிவா.

உண்மை என்னவென்றால், தன்னுடைய ஒப்பற்ற தலைவர்களில் ஒருவரான காமராஜர் மீது காங்கிரஸ் கட்சியே தீரா காழ்ப்பில்தான் உள்ளது. அதனால்தான் திமுக காமராஜரைக் கொச்சைப்படுத்தும் போதெல்லாம், பெயருக்குக் கூட ஒரு கண்டனம் தெரிவிக்காமல், உள்ளூர ரசித்தப்படியே கூட்டணியில் தொடருகிறது.

கர்மவீரர் காமராஜரைக் கொச்சைப்படுத்திப் பேசியதற்கு திமுக துணைப் பொதுச் செயலாளர் திருச்சி சிவா பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். இதை ஒரு போதும் மக்கள் மன்னிக்க மாட்டார்கள். இதைத் தமிழக பாஜகவும் எளிமையாகக் கடந்து செல்லாது என்பதையும் தெளிவாகக் கூறிக் கொள்கிறேன். இவ்வாறு நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.

அரசியல் Tags:#Bjp, #Oreynaadu, #Tamilnadu

Post navigation

Previous Post: பாஜக மாநில மையக்குழு கூட்டம்
Next Post: வளர்ச்சி அடைந்த பீகாரை உருவாக்க மத்திய அரசு தீவிரம்: பிரதமர் மோடி உறுதி

Related Posts

  • 2026 சட்டப்பேரவை தேர்தலை சந்திக்க கனிமவள கொள்ளை கும்பலை நம்பியிருக்கும் திமுக : தலைவர் அண்ணாமலை அரசியல்
  • அமைப்பு பருவம் – 2025 புதிய மாவட்ட தலைவர்கள் பட்டியல் அறிவிப்பு அரசியல்
  • டெல்லியில் வென்றது சாதாரண வெற்றி அல்ல; வரலாற்று சிறப்புமிக்கது: பிரதமர் மோடி பெருமிதம் அரசியல்
  • ஒவ்வொரு பாஜக தொண்டரும் திமுக ஆட்சியை வேறோடு பிடுங்கி எறியத் தயாராகி விட்டார்கள்: கோவையில் தலைவர் அண்ணாமலை கர்ஜனை அரசியல்
  • அப்பாவி இளைஞனைத் துள்ளத் துடிக்கக் கொன்றுவிட்டு “சாரி” என்று சொல்வது எந்த வகையில் நியாயமாகும்? ஸ்டாலினுக்கு நயினார் நாகேந்திரன் கேள்வி அரசியல்
  • அனைவரும் பொங்கலை கொண்டாடுங்க, டங்ஸ்டன் சுரங்கம் வராது: விவசாயிகளிடம் உறுதி கொடுத்த தலைவர் அண்ணாமலை அரசியல்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • வளர்ச்சி அடைந்த பீகாரை உருவாக்க மத்திய அரசு தீவிரம்: பிரதமர் மோடி உறுதி
  • கர்மவீரர் காமராஜரை தொடர்ந்து இழிவுபடுத்தும் திமுக : பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கண்டனம்
  • பாஜக மாநில மையக்குழு கூட்டம்
  • அதிமுக, பாஜக தொண்டர்கள் இணைந்து தேர்தல் பணியாற்ற வேண்டும் : கே.பி.ராமலிங்கம்
  • திருப்பரங்குன்றம் சுப்ரமணிய சுவாமி கோவில் கும்பாபிஷே விழா : நயினார் நாகேந்திரன் பங்கேற்று சாமி தரிசனம் செய்தார்

Recent Comments

No comments to show.

Archives

  • July 2025
  • June 2025
  • May 2025
  • April 2025
  • March 2025
  • February 2025
  • January 2025

Categories

  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழ்நாடு
  • நாடு
  • வளர்ச்சி அடைந்த பாரதத்தை உருவாக்குவதில் மகளிர் சக்திக்கு பெரும் பங்கு உள்ளது : பிரதமர் மோடி பெருமிதம் இந்தியா
  • சமூகத்துக்கு ஆர்எஸ்எஸ் செய்த பங்களிப்பு என்ன? லெக்ஸ் ஃப்ரிட்மேனுடன் கலந்துரையாடலில் பிரதமர் மோடி விளக்கம் இந்தியா
  • மோடி ஐயா உங்களுடன் இருப்பதை மீண்டும் ஒருமுறை உணர்த்தியுள்ளார் : மதுரை விவசாயிகள் மத்தியில் தலைவர் அண்ணாமலை பெருமிதம் தமிழ்நாடு
  • காசி தமிழ் சங்கமம் 3.0 அனுபவப் போட்டி: 46 பேருக்கு பரிசுகளை வழங்கினார் ஆளுநர் தமிழ்நாடு
  • திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினார் பிரதமர் மோடி இந்தியா
  • ‘தாலிபான் திமுக அரசு’ முடிவுக்கு கொண்டுவரப்படும்: மதுரையில் ஹெச்.ராஜா சூளுரை தமிழ்நாடு
  • அதிமுக, பாஜக தொண்டர்கள் இணைந்து தேர்தல் பணியாற்ற வேண்டும் : கே.பி.ராமலிங்கம் அரசியல்
  • பொதுமக்கள் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் பட்ஜெட் : தலைவர் அண்ணாமலை வரவேற்பு அரசியல்

Copyright © 2025 Orey Naadu ஒரேநாடு – இமயம் முதல் குமரி வரை.

Powered by PressBook News WordPress theme