Skip to content
Orey Naadu ஒரேநாடு – இமயம் முதல் குமரி வரை

Orey Naadu ஒரேநாடு – இமயம் முதல் குமரி வரை

  • முகப்பு
  • சந்த செலுத்த
  • தொடர்புக்கு
  • Toggle search form
  • 22 லட்சம் மரங்களை நட்டு சாதனை: வனத்துக்குள் திருப்பூர் அமைப்புக்கு தலைவர் அண்ணாமலை பாராட்டு தமிழ்நாடு
  • வளர்ச்சி அடைந்த பீகாரை உருவாக்க மத்திய அரசு தீவிரம்: பிரதமர் மோடி உறுதி இந்தியா
  • முருக பக்தர்கள் மாநாட்டில் அறுபடை வீடுகள் மாதிரி அமைப்பு: மக்கள் தரிசனத்துக்கு இன்று முதல் அனுமதி தமிழ்நாடு
  • டெல்லியில் 67 தொகுதிகளில் டெபாசிட் இழந்த காங்கிரஸ் இந்தியா
  • திருவள்ளுவரையும், திருக்குறளையும் களவாட நினைப்பதே திமுக கூட்டம்தான்: ஸ்டாலினுக்கு, வானதி சீனிவாசன் பதிலடி அரசியல்
  • திருப்பரங்குன்றம் சுப்ரமணிய சுவாமி கோவில் கும்பாபிஷே விழா : நயினார் நாகேந்திரன் பங்கேற்று சாமி தரிசனம் செய்தார் தமிழ்நாடு
  • காலத்தால் அழியாத சக்தி வாய்ந்த ஊடகம்: உலக வானொலி தினத்தில் பிரதமர் மோடி நெகிழ்ச்சி இந்தியா
  • இந்தியாவில் முதலீடு செய்ய இதுவே நல்ல தருணம் : பிரான்ஸில் பிரதமர் மோடி உரை உலகம்

அரசு ரப்பர் தொழிற்சாலையில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு மருத்துவ காப்பீடு வழங்க வேண்டும் : நயினார் நாகேந்திரன்

Posted on May 27, 2025May 27, 2025 By வ.தங்கவேல் No Comments on அரசு ரப்பர் தொழிற்சாலையில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு மருத்துவ காப்பீடு வழங்க வேண்டும் : நயினார் நாகேந்திரன்

கன்னியாகுமரி மாவட்டம் கீரிப்பாறையில் உள்ள அரசு ரப்பர் தொழிற்சாலையில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு மருத்துவ காப்பீட்டை திமுக அரசு வழங்க வேண்டும் என பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

கன்னியாகுமரி அரசு ரப்பர் தொழிற்சாலையில் மருத்துவ காப்பீடு வழங்க வேண்டும் என கடந்த 152 நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்தநிலையில், இதுகுறித்து மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கன்னியாகுமரி மாவட்டம் கீரிப்பாறை அரசு ரப்பர் தொழிற்சாலையில் பணிபுரியும் தொழிலாளர்கள், தமிழக அரசு சார்பில் தங்களுக்கு முறையான மருத்துவக் காப்பீடு வழங்க வேண்டுமென கடந்த 152 நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாக அதிர்ச்சி செய்திகள் வெளியாகியுள்ளன.

அம்மோனியா, சல்ஃபூரிக் அமிலம் போன்ற அபாயகரமான இரசாயனங்களைக் கையாளும் ரப்பர் தொழிலாளர்களுக்கு போதுமான அடிப்படை மருத்துவ வசதிகளை செய்து தராதது மட்டுமன்றி, தங்கள் உரிமைகளுக்காக மாதக்கணக்கில் போராடுபவர்களை இன்று வரை கண்டு கொள்ளாமல் காலம் தாழ்த்தி வரும் திமுக அரசின் அலட்சியப் போக்கு ஏற்புடையதல்ல.

குறிப்பாக, அத்தொழிற்சாலையில் இயங்கிவந்த மருத்துவமனை தற்போது பகுதிநேர ஆரம்ப சுகாதார மையமாக தரமிறக்கப்பட்டுள்ளதாகவும், ஒரே ஒரு மருத்துவர் அதுவும் வாரத்திற்கு இரண்டு முறை மட்டுமே அங்கே பணிக்கு வருகிறார் எனவும், அரசு நிறுவனத்தில் பணிபுரியும் தங்களின் மருத்துவக் கோரிக்கைகள் தொடர்ந்து புறக்கணிக்கப்படுகின்றன எனவும் குமுறும் அத்தொழிலாளர்களின் பரிதாப நிலை நம்மைக் கவலையடையச் செய்கிறது.

எனவே, தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் உடனடியாக இந்த விவகாரத்தில் தலையிட்டு அம்மக்களின் நீண்ட கால கோரிக்கையான ஊழியர் மாநிலக் காப்பீட்டின் (ESIC) கீழ் அவர்களைப் பதிவு செய்வதோடு, அரசு ரப்பர் தொழிற்சாலையில் பணிபுரியும் அனைவருக்கும் முறையான பாதுகாப்பு கவசங்கள் வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.

அரசியல், தமிழ்நாடு Tags:#Bjp, #Oreynaadu, #Tamilnadu

Post navigation

Previous Post: முருக பக்தர்கள் மாநாடு: காசி விஸ்வநாதர் கோவிலில் பாஜக சார்பில் சிறப்பு பூஜை
Next Post: நடிகர் ராஜேஷ் பூதவுடலுக்கு அஞ்சலி செலுத்திய தலைவர் நயினார் நாகேந்திரன்

Related Posts

  • அஜித்குமார் கொலையில் ஈடுபட்டவர்கள் அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும்: நயினார் நாகேந்திரன் தமிழ்நாடு
  • ராணி அஹல்யாபாய் ஹோல்கர் 300வது பிறந்த நாள் விழாவில் கலந்து கொண்டது பெருமை: நயினார் நாகேந்திரன் தமிழ்நாடு
  • துரு புடிச்சு இத்துப்போன ஸ்டாலினின் இரும்புக்கரம் தமிழ்நாடு
  • திருநீறு பூசி, ருத்ராட்சம் அணிந்து மாணவர்கள் பள்ளிக்கு செல்ல வேண்டும்: அண்ணாமலை அரசியல்
  • தீர்வு கொடுக்காமல் எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊற்றும் விஜய்: தலைவர் அண்ணாமலை காட்டம் அரசியல்
  • திருவள்ளுவரையும், திருக்குறளையும் களவாட நினைப்பதே திமுக கூட்டம்தான்: ஸ்டாலினுக்கு, வானதி சீனிவாசன் பதிலடி அரசியல்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • வளர்ச்சி அடைந்த பீகாரை உருவாக்க மத்திய அரசு தீவிரம்: பிரதமர் மோடி உறுதி
  • கர்மவீரர் காமராஜரை தொடர்ந்து இழிவுபடுத்தும் திமுக : பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கண்டனம்
  • பாஜக மாநில மையக்குழு கூட்டம்
  • அதிமுக, பாஜக தொண்டர்கள் இணைந்து தேர்தல் பணியாற்ற வேண்டும் : கே.பி.ராமலிங்கம்
  • திருப்பரங்குன்றம் சுப்ரமணிய சுவாமி கோவில் கும்பாபிஷே விழா : நயினார் நாகேந்திரன் பங்கேற்று சாமி தரிசனம் செய்தார்

Recent Comments

No comments to show.

Archives

  • July 2025
  • June 2025
  • May 2025
  • April 2025
  • March 2025
  • February 2025
  • January 2025

Categories

  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழ்நாடு
  • நாடு
  • போலீஸிடம் வழங்கிய ஆதாரம் ஐடிவிங் நிர்வாகிக்கு சென்றது எப்படி? திமுக நிர்வாகி மீது புகார் அளித்த இளம்பெண் கண்ணீர் தமிழ்நாடு
  • தமிழகத்தில் தாமரை மலர்ந்தே தீரும்: சேலத்தில் தலைவர் நயினார் நாகேந்திரன் நாடு
  • நீட் தேர்வில் தமிழக அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்த நெல்லை மாணவர் தமிழ்நாடு
  • பிரான்சில் இந்திய துணைத் தூதரகத்தை திறந்து வைத்த பிரதமர் மோடி உலகம்
  • காசி தமிழ் சங்கமம் 3.0 அனுபவப் போட்டி: 46 பேருக்கு பரிசுகளை வழங்கினார் ஆளுநர் தமிழ்நாடு
  • சேலம் பெருங்கோட்ட நிகழ்ச்சியில் ஒரே நாடு சந்தா சேர்ப்பு முகாம் தமிழ்நாடு
  • இந்தியாவில் முதலீடு செய்ய இதுவே நல்ல தருணம் : பிரான்ஸில் பிரதமர் மோடி உரை உலகம்
  • உலகின் வலிமைக்கு ஒரு நம்பிக்கை தூணாக இந்தியா உள்ளது : கானா நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி பெருமிதம் இந்தியா

Copyright © 2025 Orey Naadu ஒரேநாடு – இமயம் முதல் குமரி வரை.

Powered by PressBook News WordPress theme