---Advertisement---

ஒரே நாடு ஒரே தேர்தல் முறையை கருணாநிதி வரவேற்றார்; ஸ்டாலின் எதிர்க்கிறார் : பவன் கல்யாண்

On: May 26, 2025 10:33 AM
Follow Us:
---Advertisement---

‘‘ஒரே நாடு ஒரே தேர்தல் முறையை கருணாநிதி ஆதரித்தார். ஆனால் முதல்வர் ஸ்டாலின் எதிர்க்கிறார். திமுக இரட்டை வேடம் போடுகிறது’’ என ஆந்திர மாநில துணை முதல்வர் பவன் கல்யாண் குற்றம் சாட்டியுள்ளார்.

சென்னை திருவான்மியூரில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் இன்று (மே 26) நடந்த ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ தொடர்பான கருத்தரங்கு நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக பங்கேற்ற ஆந்திர மாநில துணை முதல்வர் பவன் கல்யாணுக்கு பாஜக சார்பில் வேல் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், மேலிட பொறுப்பாளர் அரவிந்த் மேனன், பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், தேசிய செயலாளரும் செய்தித் தொடர்பாளருமான அனில் கே. ஆண்டனி, இணைப்பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, மாநிலத் துணைத்தலைவர் சக்ரவர்த்தி, மூத்த அரசியல் செயற்பாட்டாளர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பல மூத்த தலைவர்கள், நிர்வாகிகள் பங்கேற்றனர்.

விழா மேடையில் ஆந்திர மாநில துணை முதல்வர் பவன் கல்யாண் பேசியதாவது: தமிழகம் சித்தர்களின் பூமி. கடவுள் முருகனின் பூமி. தமிழகம் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு நடக்கும் பூமி. ஒரே நாடு , ஒரே தேர்தல் குறித்து பொய்யான தகவல்கள் பரப்பப்படுகிறது.

சிலர் இரட்டை வேடம் போடுகிறார்கள். தமிழகம் திருவள்ளுவர், பாரதியார், எம்.ஜி.ஆர் வாழ்ந்த பூமி. எதிர்க்கட்சிகள் ஓட்டுப்பதிவு இயந்திரம் குறித்து தங்களுக்கு சாதகமான கருத்துகளை கூறி வருகின்றனர். எதிர்க்கட்சிகள் தோற்றுவிட்டால் ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் சூடு வைத்துவிட்டதாக கூறுகின்றனர். மாமியார் உடைத்தால் மண் குடம். மருமகள் உடைத்தால் பொன் குடம் என எதிர்க்கட்சியினர் செயல்படுகின்றனர்.

ஒரே நாடு ஒரே தேர்தல் முறையை கருணாநிதி ஆதரித்தார். ஆனால் முதல்வர் ஸ்டாலின் எதிர்க்கிறார். நெஞ்சுக்கு நீதியில் ஒரே நாடு ஒரே தேர்தல் முறையை கருணாநிதி ஆதரித்து குறிப்பிட்டுள்ளார். இப்போது திமுக இரட்டை வேடம் போடுகிறது. நான் தமிழகத்தை விட்டு போனாலும் தமிழகம் என்னை விட்டுவிடவில்லை.

ஒரே நாடு, ஒரே தேர்தல் முறை மூலம் தேர்தல் செலவுகளை குறைக்க முடியும். நாடு எப்போதும் தேர்தல் பணிகளில் முடங்கி உள்ளது. ஒரே நாடு ஒரே தேர்தல் மூலம் பொது மக்களிடம் பல்வேறு திட்டங்களை கொண்டு சேர்க்க முடியும். தொடர்ந்து தேர்தல்களினால் அதிகாரிகள், போலீசார் மற்றும் ஆசிரியர்கள் தொடர்ந்து பணி செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது. இவ்வாறு பவன் கல்யாண் கூறியுள்ளார்.

Join WhatsApp

Join Now

Subscribe Youtube

Subscribe Now

இதையும் படிக்கலாமே !

பிஹாரை போன்று நாளை தமிழ்நாட்டிலும் என்.டி.ஏ. வெற்றி பெறும்; தென்காசியில் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன்

கோவையில் இயற்கை வேளாண் மாநாட்டை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி: பி.எம்.கிசான் நிதி ரூ.18,000 கோடி விடுவிப்பு

பாலக்கோடு அருகே 3 ஆண்டுகளாக கோவில் வளாகம் மற்றும் தெருக்களில் நடக்கும் வகுப்பறை; இடம் வாங்கி கொடுத்தும் கண்டுகொள்ளாத விடியாத அரசு

5 சட்டமன்றத் தொகுதிகளையும் என்.டி.ஏ., கைப்பற்றியதால்தான் தருமபுரியை திமுக வஞ்சிக்கிறது: மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் ஆவேசம்

விடியா அரசைக் கண்டித்து பாஜக மகளிரணி சார்பில் மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம்

பூத் கமிட்டி உறுப்பினர்களுக்கு ஆலோசனைகள் வழங்கிய மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன்

Leave a Comment