---Advertisement---

ஆதம்பூர் விமானப்படை வீரர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடல்

On: May 13, 2025 11:02 AM
Follow Us:
---Advertisement---

பஞ்சாபில் உள்ள ஆதம்பூர் விமானப்படை தளத்தில் பிரதமர் நரேந்திர மோடி வீரர்களுடன் கலந்துரையாடினார்.

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக, பாகிஸ்தானுக்கு ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுத்தது. இந்தியா- பாகிஸ்தான் போரில் பஞ்சாபில் உள்ள ஆதம்பூர் விமானப்படை தளம் முக்கியப் பங்காற்றியது. இந்த விமானப்படை தளத்தில் இருந்து வீரர்கள் பாகிஸ்தானின் ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளை துல்லியமாக சுட்டு வீழ்த்தினர். தற்போது இந்தியா- பாகிஸ்தான் இடையே போர் முடிவுக்கு வந்தது.

இந்நிலையில் இன்று (மே 13) ஆதம்பூர் விமானப்படை தளத்திற்கு சென்ற பிரதமர் நரேந்திர மோடிக்கு வீரர்கள் உற்சாகமாக வரவேற்றனர். அதனைத்தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடி வீரர்களுடன் கலந்துரையாடினார். பிரதமர் மோடிக்கு பாகிஸ்தானுக்கு அளித்த பதில் தாக்குதல் குறித்து வீரர்கள் விளக்கம் அளித்தனர்.

விமானப்படை தளத்தில் வீரர்களுடன் பிரதமர் மோடி எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வெளியாகி உள்ளது. தற்போது இந்த புகைப்படம் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. இந்த விமானப்படை தளத்தை தான், பாகிஸ்தான் ராணுவம் குண்டு வீசி அழித்து விட்டதாக முற்றிலும் பொய்யான தகவல்களை பரப்பியது. அதை பொய் என்று நிரூபிக்கும் வகையில், இன்று பிரதமர் நரேந்திர மோடியின் பயணம், வீரர்களின் கலந்துரையாடல் அமைந்துள்ளது.

Join WhatsApp

Join Now

Subscribe Youtube

Subscribe Now

இதையும் படிக்கலாமே !

Leave a Comment