பாரதிய ஜனதா கட்சியின் 45வது ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு பாலக்கோடு அரசு மருத்துவமனையில் மகளிர் அணி தலைவர் சங்கீதா தலைமையில் தூய்மைப் பணி மேற்கொள்ளப்பட்டது.
தருமபுரி மாவட்டம், பாலக்கோட்டில் அமைந்துள்ள அரசு மருத்துவமனையில் நேற்று (ஏப்ரல் 08) பாஜக மாவட்ட மகளிர் அணி தலைவர் சங்கீதா தலைமையில் தூய்மைப்பணி மேற்கொண்டனர்.
மருத்துவமனையில் தேங்கியிருந்த பிளாஸ்டிக் குப்பைகளை அகற்றினர். மேலும் மருத்துவமனையின் கழிவறைகளை சுத்தம் செய்தனர்.

அதோடு மட்டுமின்றி பாலக்கோடு நகரில் அருகாமையில் உள்ள ஏரியில் இறைச்சிக்கழிவுகள் கொட்டப்பட்டிருப்பதையும் அகற்றினர். இந்த பணியில் பாலக்கோடு நகர மகளிர் அணி தலைவர் வித்யா, மத்திய அரசு நலத்திட்ட பிரிவு மாவட்ட செயலாளர் பெரியசாமி, முன்னாள் நகரத் தலைவர் வேலு, மாவட்ட செயற்குழு உறுப்பினர் கிருஷ்ணன் மற்றும் ஆனந்தன், பிரேமா, சிவசக்தி, கவிதா, கிரி, அழகு பெருமாள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
மருத்துவமனையில் தூய்மைப்பணி மேற்கொண்ட பாஜகவினரை பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்.