---Advertisement---

விளம்பரத்திற்கு மடிக்கணினி – மாணவர்களுக்கு தொடர்ந்து பாகுபாடு காட்டும் திமுக அரசு!

On: February 10, 2026 4:44 PM
Follow Us:
---Advertisement---

திமுக அரசு முந்தைய அரசின் திட்டத்திற்கு பெயர் மாற்றி, கல்லூரி பயிலும் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் என்று அறிவித்து, மடிக்ணினியை வழங்கிவருகிறது, வழங்கிய மடிக்கணினிகளின் மீது புகைப்படங்கள் ஒட்டப்பட்டதால் மாணவர்கள் மத்தியல் அது கடும் அதிருப்தியை உண்டாக்கியது மட்டுமில்லாமல் ஏன் இந்த மடிக்கணினி அரசு வழங்கியது என்று வெறுத்தனர்.

சில நாட்களுக்கு முன்பு கோவையிலுள்ள சட்டக்கல்லூரியில் குறிப்பிட்ட படிப்பு பயிலும் மாணவர்களுக்கு மட்டும் மடிக்கணினி வழங்கியது தெரியவந்ததை அடுத்து, மற்ற மாணவர்கள் அரசின் இந்த பாகுபாட்டை எதிர்த்து கண்டனக் குரலை எழுப்பினர். அப்போதாவது திமுக அரசு விழித்ததா என்றால் இல்லை என்பதே பதில்.

நேற்று (09/02/2026) நெல்லையிலுள்ள மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில், 5 ஆண்டு மேற்படிப்பில் பயிலும் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்க மறுத்து, இளநிலை படிப்பு பயிலும் மாணவர்களுக்கே அரசு மடிகணினி வழங்குகிறது என்ற குற்றச்சாட்டை முன்வைத்து மாணவர்கள் மாவட்ட நிர்வாகத்திடம் மனு அளித்து முறையிட்டு உடனடியாக இவ்விவகாரத்தில் தலையிட்டு தீர்வுகாண வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். இதையறிந்த பொதுமக்கள் பலர், வெறும் நாடகத்திற்கு சில மடிக்கணினியை வழங்குவதற்கு எதற்கு இந்த வெற்று அறிவிப்பை திமுக அரசு செய்கிறது என்று கேள்வியை முன்வைக்கின்றனர்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment