
கர்நாடக மாநிலத்திலிருந்து தமிழகத்திற்கு விடுவிக்க வேண்டிய தண்ணீரின் அளவு, டிசம்பர் 1, 2025-ல் இருந்து குறைந்து வருவதால் வெயில் காலங்களில் தண்ணீர் பற்றாக்குறை நிலவும் பிரச்சினை உருவாக வாய்ப்புள்ளது. தமிழக அரசின் தகவலின் படி, தற்போது மேட்டூர் அணையின் நீர் இருப்பு 57.523 டிஎம்சி ஆக உள்ளது, இது கடந்த ஆண்டு இதே காலத்தை ஒப்பிடும் போது 80.472 டிஎம்சி நீர் இருப்பு இருந்தது; இப்போது நீர்வரத்து ஒரு நொடிக்கு 26 கனஅடியாக மட்டுமே உள்ளது என தெரியவந்துள்ளது.
தனியார் செய்தித்தாளுக்கு நீர்வளத்துறை அதிகாரி அளித்த பேட்டியில், கடந்த இரு மாதங்களாக அணைக்கு நீர்வரத்து வெகுவாக குறைந்து வருகிறது. நீர் பயன்படுத்துதல் மற்றும் நீர் ஆவியாகும் காரணத்தினால் வரும் மாதங்களில் இது இன்னும் அதிகமாக இருக்கும்”, என தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில், பாசனத்திற்காக அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படாது என்றும், இருக்கும் நீரை வெயில் காலத்தில் குடிநீர் பயன்பாட்டிற்காக மட்டும் தான் பயன்படுத்தப்படும் என்று தெரிவித்துள்ளார்.
அண்டை மாநிலமான கர்நாடகாவில் தமிழகத்தில் ஆட்சியில் இருக்கும் திமுகவின் கூட்டணி கட்சியான காங்கிரஸ் தான் ஆட்சி செய்கிறது. மேகதாது விவகாரத்திலும் சரி, இதிலும் சரி திமுக ஏன் மௌனம் காக்கிறது என்றும், தமிழகத்தின் நலனுக்காக தான் திமுக அரசு இருக்கிறது என்று அன்றாடம் மேடைகளில் குறிப்பிட்டு வரும் திமுக அரசும், அதன் கட்சியினரும் கர்நாடக மாநில காங்கிரஸ் அரசை எதிர்த்து குரல் கொடுக்காதது ஏன் என்றும் பலர் கேள்வியெழுப்பி வருகின்றனர்.








