Skip to content
Orey Naadu ஒரேநாடு – இமயம் முதல் குமரி வரை

Orey Naadu ஒரேநாடு – இமயம் முதல் குமரி வரை

  • முகப்பு
  • சந்த செலுத்த
  • தொடர்புக்கு
  • Toggle search form
  • இளைஞர்கள் யோகாவை வாழ்நாள் முழுவதும் ஒருதுணையாக ஏற்றுக்கொள்ள வேண்டும்: ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழ்நாடு
  • ம.பொ.சி 119வது பிறந்த நாள்; நயினார் நாகேந்திரன் மரியாதை தமிழ்நாடு
  • ரூ.6 லட்சம் கோடி முதலீட்டை ஜப்பான் நாட்டில் ஈர்க்க இந்தியா இலக்கு: பிரதமர் மோடி இந்தியா
  • ‘ஆபரேஷன் சிந்தூர்’ பெயர் வைக்க காரணம் என்ன? இந்தியா
  • சுதந்திரத் தினத்தையொட்டி கமலாலயத்தில் தேசியக்கொடி ஏற்றினார் நயினார் நாகேந்திரன் தமிழ்நாடு
  • ‘‘அன்புள்ள நண்பரே!’’ -அமெரிக்க அதிபராக பதவியேற்ற டிரம்புக்கு பிரதமர் மோடி வாழ்த்து உலகம்
  • கல்வி நிலையங்களில் திமுகவினர் தரங்கெட்ட நாடகம்: அண்ணாமலை கண்டனம் தமிழ்நாடு
  • திமுக ஆட்சியில் குற்றங்கள் தமிழ்நாடு

காவல்துறையால் கொலை செய்யப்பட்ட இளைஞர்; ஸ்டாலினிடம் 9 கேள்விக்கான பதிலை பெற்றுத்தாருங்கள்; ஊடகங்களுக்கு நயினார் நாகேந்திரன் கோரிக்கை

Posted on June 30, 2025June 30, 2025 By வ.தங்கவேல் No Comments on காவல்துறையால் கொலை செய்யப்பட்ட இளைஞர்; ஸ்டாலினிடம் 9 கேள்விக்கான பதிலை பெற்றுத்தாருங்கள்; ஊடகங்களுக்கு நயினார் நாகேந்திரன் கோரிக்கை

காவல்துறையினரால் அடித்து கொலை செய்யப்பட்ட சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த அஜித் குமாரின் மரணம் தொடர்பான கீழ்கண்ட கேள்விகளுக்கும் சந்தேகங்களுக்கும் ‘‘காவல்துறை அமைச்சர்’’ ஸ்டாலின் அவர்களிடம் இருந்து பதில்களை பெற்று தாருங்கள் என ஊடகங்கள் மற்றும் பத்திரிகைகளுக்கு தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து இன்று (ஜூன் 30) தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: அருமை ஊடகங்களே, பத்திரிகை நண்பர்களே,
பாஜகவின் மாநிலத் தலைவராக அல்ல, பாஜகவின் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவராக அல்ல, ஈன்றெடுத்த மகனை இழந்து வாடும் ஒரு தாயின் சார்பாக உங்களிடம் ஒரு கோரிக்கையை வைக்கிறேன்.

காவல்துறையினரால் அடித்து கொலை செய்யப்பட்ட சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த அஜித் குமாரின் மரணம் தொடர்பான கீழ்கண்ட கேள்விகளுக்கும் சந்தேகங்களுக்கும் ‘‘காவல்துறை அமைச்சர்’’ ஸ்டாலின் அவர்களிடம் இருந்து பதில்களை பெற்று தாருங்கள்.

1. காவல்துறையால் கைது செய்யப்பட்ட அஜித்குமார் 24-மணி நேரத்திற்குள் நீதிபதிக்கு முன் ஏன் ஆஜர்படுத்தப்படவில்லை?

2. பல இடங்களில் அஜித்குமாரை வைத்து அடித்து துன்புறுத்திய காவல்துறை மடப்புரம் கோவில் அலுவலகத்தின் பின்புறம் அழைத்து சென்று அவரைத் தாக்கியதாக அஜித்குமாரின் சகோதரர் நவீன் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார். இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இருக்கும் ஒரு கோவிலில் இருந்து விசாரணை என்ற பெயரில் முறையாக கைது செய்யப்படாத ஒருவரை காவல்துறை அழைத்துச்செல்ல அனுமதி வழங்கியது யார்?

3. விரைந்து தனிப்படை அமைத்து அஜித்குமாரை விசாரிக்கும்படி விசாரித்து ‘‘உண்மையை’’ வரவழைக்க மாவட்ட எஸ்.பி., ஆஷிஷ் ராவத் வாயிலாக, நகையை பறிகொடுத்தவர்களுக்கு நெருக்கமாக இருக்கும் தலைமை செயலகத்தில் பணிபுரியும் ஒருவர் அழுத்தம் கொடுத்ததாக கூறப்படுகிறதே. இது உண்மையா? உண்மை எனில், யார் அவர்? அவர் மீது என்ன நடவடிக்கை?

4. இரும்பு கம்பியால் சரமாரியாக அடிக்கப்பட்டு, மிளகாய் பொடி கலந்த தண்ணீரை குடிக்கச் செய்து துன்புறுத்தப்பட்ட அஜித்குமார் மயங்கி விழுந்த பின் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்படாமல், நான்கு மணி நேரம் போலீஸ் டெம்போ வேனில் பூட்டிவைக்கப்பட்டது ஏன்?

5. எளிய பின்புலம் கொண்ட இந்த இளைஞன் உயிர் வாழ்ந்தால் என்ன, இறந்தால் என்ன என்ற ஏளனமான எண்ணமா? அல்லது, உயிர் பிரிந்து விட்டது என்று தெரிந்து, தடயங்களை அழிக்கவும், கட்டுக்கதைகளை புனையவும் காவல் துறையினருக்கு தேவைப்பட்ட அவகாசம் தான் அந்த 4-மணி நேரமா?

6. நான்கு மணி நேரம் தாமதமாக அழைத்து வந்த காரணத்தினாலும், சந்தேகத்திற்குரிய நிலையில் மரணம் நிகழ்ந்துள்ள காரணத்தினாலும், அஜித்குமாரை பரிசோதிக்க திருப்புவனம் அரசு மருத்துவமனையும், மானாமதுரை அரசு மருத்துவமனையும் மறுத்துவிட்டதால், மதுரை வரை சென்று ஒரு தனியார் மருத்துவமனையில் அஜித் குமாரை சடலமாக காவல்துறையினர் பரிசோதனைக்கு ஒப்படைத்தார்கள் என்பது உண்மையா?

7. அஜித்குமாரின் இறப்புக்கு போலீஸ் துன்புறுத்தல் காரணம் இல்லையென்றால், 6 காவலர்கள் ஏன் சஸ்பெண்ட் செய்யப்பட வேண்டும்? இது கொலை தான் என்று ஒப்புக்கொண்ட பின்னும், அஜித் குமாரின் மரணத்திற்கு காரணமாக இருந்தவர்கள் மீது கொலை வழக்கை இப்பொழுது வரையில் ஏன் பதியவில்லை? ஏன் கைது செய்யவில்லை?

8. இவ்வளவு குளறுபடிகள் இருந்தும், போராட்டத்தில் இறங்கிய அஜித் குமாரின் குடும்பத்தாரிடம் சடலத்தை பெற்றுக்கொள்ளவும், பிரச்சனையை பெரிதாக்காமல் இருக்கவும்  திமுகவினரை வைத்து பேச்சுவார்த்தை நடத்தியதோடு, அவர்கள் மசியாமல் இருந்த நிலையில், காவல் துறையின் பாதுகாப்புடன் திமுக கொடிப் பொருந்திய வாகனத்தில் அஜித் குமாரின் தம்பியான நவீனை மறுபடியும் எங்கேயோ அழைத்துச் செல்ல முயற்சித்தது எவ்வித அராஜக செயலாகும்? நீதியை தடுக்கும் பொருட்டு செயல்பட்ட அறிவாலய அமைச்சர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் மீது எப்பொழுது வழக்கு பதிவு?

9. இதுவரை திமுக ஆட்சியில் 24-க்கும் மேற்பட்ட காவல்நிலைய மரணங்கள் நிகழ்ந்துள்ள நிலையில் இதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பது தான் முதல்வரின் வேலையா? தமிழகக் காவல்துறை முதல்வரின் கட்டுப்பாட்டில் இருக்கிறதா இல்லையா? தொடர் காவல் மரணங்களுக்கு முதல்வர் கூறப் போகும் பதில் என்ன? இதற்கெல்லாம் முதல்வர் தார்மீகப் பொறுப்பேற்றுக் கொள்வது எப்பொழுது? மக்கள் கேட்கிறார்கள்! இவ்வாறு மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.

தமிழ்நாடு Tags:#Bjp, #Oreynaadu, #Tamilnadu

Post navigation

Previous Post: 95 கோடி பேருக்கு சமூக பாதுகாப்பு ‘மனதின் குரல்’ நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பெருமிதம்
Next Post: அப்பாவி இளைஞனைத் துள்ளத் துடிக்கக் கொன்றுவிட்டு “சாரி” என்று சொல்வது எந்த வகையில் நியாயமாகும்? ஸ்டாலினுக்கு நயினார் நாகேந்திரன் கேள்வி

Related Posts

  • பாஜக ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்துரையாடிய நயினார் நாகேந்திரன் தமிழ்நாடு
  • உரிமைக்காக போராடிய தூய்மை பணியாளர்கள் கைது; நள்ளிரவில் போலீசாரை அனுப்பி வீரத்தை காண்பித்த திராவிட மாடல் தமிழ்நாடு
  • தினமலர் நிறுவனர் ராமசுப்பையர் நினைவு தினம்: நயினார் நாகேந்திரன் மரியாதை தமிழ்நாடு
  • திமுக ஆட்சியில் குற்றங்கள் தமிழ்நாடு
  • ஸ்ரீ கந்தர் மலைக்காக சிறைச்சென்று ஜாமினில் வந்த பாஜக நிர்வாகிக்கு உற்சாக வரவேற்பு தமிழ்நாடு
  • ம.பொ.சி 119வது பிறந்த நாள்; நயினார் நாகேந்திரன் மரியாதை தமிழ்நாடு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • ரூ.6 லட்சம் கோடி முதலீட்டை ஜப்பான் நாட்டில் ஈர்க்க இந்தியா இலக்கு: பிரதமர் மோடி
  • பிஜியின் கடல்சார் பாதுகாப்பை வலுப்படுத்த இந்தியா பயிற்சி மற்றும் உபகரணங்களை வழங்கும்: பிரதமர் மோடி
  • நெல்லையில் பாஜக பூத் பொறுப்பாளர்கள் மாபெரும் மாநாடு: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்பு
  • சி.பி.ராதாகிருஷ்ணனை அனைத்து கட்சிகளும் ஒருமனதாக ஆதரிக்க வேண்டும் : ஸ்டாலினுக்கு நயினார் நாகேந்திரன் வேண்டுகோள்
  • இல.கணேசன் உடலுக்கு மத்திய அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் ஆகியோர் நேரில் அஞ்சலி

Recent Comments

No comments to show.

Archives

  • August 2025
  • July 2025
  • June 2025
  • May 2025
  • April 2025
  • March 2025
  • February 2025
  • January 2025

Categories

  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழ்நாடு
  • நாடு
  • மக்களவையில் தொடர்ந்து அமளியில் ஈடுபடும் தயாநிதி மாறன்: சபாநாயகர் ஓம் பிர்லா கடும் எச்சரிக்கை இந்தியா
  • ‘தாலிபான் திமுக அரசு’ முடிவுக்கு கொண்டுவரப்படும்: மதுரையில் ஹெச்.ராஜா சூளுரை தமிழ்நாடு
  • மோடி ஐயா உங்களுடன் இருப்பதை மீண்டும் ஒருமுறை உணர்த்தியுள்ளார் : மதுரை விவசாயிகள் மத்தியில் தலைவர் அண்ணாமலை பெருமிதம் தமிழ்நாடு
  • சிங்கத்தை படம் பிடித்த பிரதமர் மோடி: உலக வனவிலங்கு நாளில் உற்சாகம் இந்தியா
  • முக்கியமான காலகட்டத்தில் பயணிப்பதால் அனைவரும் விழிப்புடன் இருக்க வேண்டும்: அமைச்சகங்களுக்கு பிரதமர் மோடி அறிவுரை இந்தியா
  • 2026 சட்டப்பேரவை தேர்தலை சந்திக்க கனிமவள கொள்ளை கும்பலை நம்பியிருக்கும் திமுக : தலைவர் அண்ணாமலை அரசியல்
  • உலகின் வலிமைக்கு ஒரு நம்பிக்கை தூணாக இந்தியா உள்ளது : கானா நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி பெருமிதம் இந்தியா
  • முருக பக்தர்கள் மாநாடு: காசி விஸ்வநாதர் கோவிலில் பாஜக சார்பில் சிறப்பு பூஜை தமிழ்நாடு

Copyright © 2025 Orey Naadu ஒரேநாடு – இமயம் முதல் குமரி வரை.

Powered by PressBook News WordPress theme