Skip to content
Orey Naadu ஒரேநாடு – இமயம் முதல் குமரி வரை

Orey Naadu ஒரேநாடு – இமயம் முதல் குமரி வரை

  • முகப்பு
  • சந்த செலுத்த
  • தொடர்புக்கு
  • Toggle search form
  • முஸ்லிம் அமைப்பை கேள்வி கேட்க துப்பில்லாத காவல்துறை இந்துக்களுக்கு மட்டும் ஏன் கெடுபிடி? பேராசிரியர் இராம ஸ்ரீனிவாசன் தமிழ்நாடு
  • தமிழக அரசு நிறுவனங்களை கமிஷன் மையங்களாக இயக்கியதன் விளைவாக அமலாக்கத்துறை சோதனை: அண்ணாமலை நாடு
  • வளர்ச்சி அடைந்த பாரதத்தை உருவாக்குவதில் மகளிர் சக்திக்கு பெரும் பங்கு உள்ளது : பிரதமர் மோடி பெருமிதம் இந்தியா
  • திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினார் பிரதமர் மோடி இந்தியா
  • அஜித்குமார் கொலையில் ஈடுபட்டவர்கள் அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும்: நயினார் நாகேந்திரன் தமிழ்நாடு
  • அனைவருக்கும் பிரதமரின் இனிய 2025 புத்தாண்டு வாழ்த்து இந்தியா
  • தேசிய ஒருமைப்பாட்டை வெளிப்படுத்தும் காசி தமிழ் சங்கமம்: தேசிய தலைவர் ஜெ.பி. நட்டா புகழாரம் இந்தியா
  • “ஆபரேஷன் சிந்தூர்” இந்தியா நடத்திய தாக்குதலில் 100க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் பலி? இந்தியா

உங்கள் வீட்டுப் பிள்ளை; நயினார் பேசுகிறேன்; தொடர்பில் இருப்போம்… தொடர்ந்து பேசுவோம்…!

Posted on May 23, 2025May 23, 2025 By வ.தங்கவேல் No Comments on உங்கள் வீட்டுப் பிள்ளை; நயினார் பேசுகிறேன்; தொடர்பில் இருப்போம்… தொடர்ந்து பேசுவோம்…!

அன்பு தாமரைச் சொந்தங்களின் நெஞ்சங்களுக்கு,

முதற்கண் அடியேனின் நன்றி கலந்த வணக்கத்தை தெரிவித்துக் கொள்ள கடமைப்பட்டுள்ளேன்.

இயல்பான இதயபூர்வ வணக்கத்துடன், இந்த நன்றி கலந்த வணக்கம் ஏன்? என ஒவ்வொருவரின் மனதிலும் ஒரு வினா எழும், எழுவது இயற்கையே.

இதற்கு காரணங்கள் இருக்கின்றன. அவற்றை உங்கள் முன் பகிர்ந்து கொள்ள விழைகிறேன்.

கடந்த ஏப்ரல் 12 ஆம் தேதி, என்னுடைய அரசியல் வரலாற்றில் ஏற்பட்ட ஒரு மகிழ்ச்சிகரமான திருப்பம் நிறைந்த திருநாள்!

நான், தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவராக, ஒரு தலைமை தொண்டனாக, ஒரு மனதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நாள்.

கடந்த எட்டு ஆண்டுகளாக தாயகப் பணியில் ஈடுபட்டு வந்த எனக்கு, இந்த தலைமை பதவி வழங்கி, ஆசியையும், ஆதரவையும் கொடுத்த அருமைத் தலைவர்களான பாரத பிரதமர் திரு. நரேந்திர மோடி ஜி அவர்களுக்கும், பாரதிய ஜனதா கட்சியின் தேசியத் தலைவர் திரு. நட்டா ஜி அவர்களுக்கும், உள்துறை அமைச்சர் திரு. அமித் ஷா ஜி அவர்களுக்கும், பாரதிய ஜனதா கட்சியின் தூய தொண்டர்களுக்கும் மற்றும் கட்சியின் அனைத்து தலைவர்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

மாபெரும் கட்சிக்கு தலைவராக பொறுப்பேற்கும் இந்த நேரத்தில், எனக்கு முன் இந்த பொறுப்பில் இருந்து சாதனைகள் பல புரிந்த தலைவர்களை நினைவு கூர்வது என்பது என் கடமையாக கருதுகிறேன்.

அண்ணன் திரு. பொன்னார் அவர்கள், இந்த கட்சியின் மாநில தலைவராக இருந்தபோது ”தாமரைச்சங்கம்” என்ற மாநாடு நடத்தியதன் மூலம் கட்சியை ஒரு படி மேலே வளர்த்தெடுத்தார். ”பொற்றாமரை”யின் மூலம் அண்ணன் உயர்திரு. இல.கணேசன் அவர்கள் தனது வளர்ச்சிப் பங்கை செலுத்தினார்.

அண்ணன் திரு. ஹெச். ராஜா அவர்களும், தன் வீரியமிக்க வழியில் ஒரு படி  மேலே சென்று கட்சியை வளர்த்து எடுத்தவர். அடுத்ததாக, மாநில தலைவராக இருந்தபோது ”தாமரை மலர்ந்தே தீரும்” என்ற மகா மந்திரத்தை நாடெங்கும் பரப்பிய முன்னாள் ஆளுநரான திருமதி. தமிழிசை சவுந்தரராஜன் அவர்கள் கட்சியை மேலும் ஒரு படி உயர்த்தினார்.

இதே போலவே அண்ணன் உயர்திரு. சிபி ராதாகிருஷ்ணன் அவர்களும் தனது ”ரத யாத்திரை” மூலம் கட்சியை ஒரு படி உயர்த்தினார்.

அண்ணன் திரு. எல்.முருகன் அவர்கள் தலைவராக இருந்த பொழுது, ”வேல் யாத்திரை” நடத்தி அரசியல் வேள்வியை தொடங்கினார்.

சகோதரி திருமதி. வானதி சீனிவாசன் அவர்கள் அகில இந்திய மகளிர் அணி தலைவியாக இருந்து, தீவிரமாக பணியாற்றி, அவரும் கட்சியை உயர்த்தி வருகிறார்.

இவர்களைப் போல திரு. அண்ணாமலை அவர்கள் ”என் மண், என் மக்கள்” என்ற யாத்திரை மூலம் நடைபயணம் சென்று, பாஜக என்ற கட்டி முடிக்கப்பட்ட கோபுரத்திற்கு சக்தி மிகுந்த தங்க கலசங்களை நிறுவினார்.

இப்பொழுது எனக்கு வழங்கியுள்ள பணி என்னவென்றால், நான் மாநிலத் தலைவராக இருக்கும் இந்த நேரத்தில், திரு. அண்ணாமலை அவர்கள் அமைத்த கலசங்களுக்கு கும்பாபிஷேகம் செய்ய வேண்டிய பொறுப்பு என்னை சார்ந்ததாக இருக்கிறது.

வரும் 2026 ஆம் ஆண்டு மே மாதம் நடக்கவிருக்கும் சட்டமன்றத்    தேர்தல் மூலம் நிச்சயம் அந்த கும்பாபிஷேகம் நடக்கும்.   இன்று தமிழகத்தை ஆளுவோர் விரட்டி அடிக்கப்பட்டு, காடாளும்

காலம் நிச்சயம் வரும். காலங்கள் இதை செய்ய மறந்தாலும், கிரகங்கள் நிச்சயம் செய்யும் !

நமது மத்திய உள்துறை அமைச்சர் திரு. அமித் ஷா ஜி அவர்கள் சொன்னதைப் போல தமிழகத்தில் ”தேசிய ஜனநாயக ஆட்சி” நடந்தே தீரும்… ”தாமரை மலர்ந்தே தீரும்”

எனக்கு வழங்கப்பட்ட மூன்று ஆண்டுகள் பதவி காலத்தில், பாரதிய ஜனதா கட்சியை மூன்று தலைமுறைகளுக்கான, 30 ஆண்டுகளுக்குரிய வளர்ச்சியை காணும் கட்சியாக உருவாக்குவேன் என்று உறுதி கூறுகிறேன்.

நமது தலைமையகமான கமலாலயத்தில் உள்ள பாரதத்தாயின் பாதம் தொட்டு வணங்கி, இந்த தாயகப் பணியை மேற்கொள்கிறேன். இதற்கிடையில நமது பாரத ஜனதா கட்சியின் வரலாறு மற்றும் நமது தேச பக்தர்களை நெஞ்சில் நிறுத்தி பார்க்கிறேன்.

இந்த கட்சியை வேர்வைத் துளிகளாலும்,  இரத்த துளிகளாலும் வளர்த்தெடுத்த உத்தமத் தலைவர்களின் தியாகங்களை நினைத்துப்  பார்க்கின்றேன்.

தேசப் பிரிவினையை எதிர்த்து களம் கண்டு தன் உயிர் தியாகம் செய்த தேசபக்தர் ”ஷியாம பிரசாந்த் முகர்ஜி”.

”ஏகாத்ம மானவ தரிசனம்” என்னும் தேசிய மந்திரத்தை நமக்கு அளித்த ”தீனதயாள் உபாத்தியாயா”.

மனித சக்தியை ஒற்றுமைப்படுத்தி ”ஒரே உணர்வு, ஒரே நாடு” என்ற தத்துவத்தை வார்த்து எடுத்த, பரம பூஜனிய ”டாக்டர் கேசவ பலிராம் ஹெட் கேவர்”.

”அகண்ட பாரதம்” என்னும் லட்சிய பாதையை நோக்கி பயணித்த ”அடல் பிகாரி வாஜ்பாய்”.

இவர்களைப் போல தென் தமிழகத்தில் தோன்றிய வீர தியாகிகள் ”கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி. சிதம்பரனார்”, “வா.வே.சு. ஐயர்”, ”சுப்பிரமணிய சிவா”, “மகாகவி பாரதி” மற்றும் தேசியமும் தெய்வீகமும் எனது இரு கண்கள் என வாழ்ந்து நமது நெஞ்சங்களில் என்றும் வாழும் உத்தமத் தலைவர் ”பசும்பொன் முத்துராமலிங்க தேவர்”, கருப்பு காந்தி, கர்மயோகி கர்மவீரர் ”பெருந்தலைவர் காமராஜர்”, அரசியல் சாணக்கியர் ”மூதறிஞர் ராஜாஜி” போன்ற தேசபக்தர்களை நினைத்து அவர்களது பாதங்களைத் தொட்டு என் கண்களில் இட்டு கொள்கிறேன்.

அவர்கள் விட்டுச் சென்ற தேசிய, தெய்வீக பாதையில் பயணித்து வெற்றி பெற அன்னை பாரதத் தாயை வணங்குகிறேன்.

அன்பு தாமரை நெஞ்சங்களே, சொந்தங்களே !

நமது கட்சி எனக்கிட்ட பணிகளை தொய்வில்லாமல், தொடர்ந்து செய்து வரும் இந்த வேளையில், எனக்கு உங்களோடு நேருக்கு நேராக பேசும் வாய்ப்பு கிடைக்கவில்லை.

ஆகவே நாம் இருவரும் பேசும் களமாக, நமக்கு இருப்பது பாரதிய ஜனதா கட்சியின் அதிகாரப்பூர்வ ஏடான    ”இமயம் முதல் குமரி வரை ஒரே நாடு” என்ற மாலை மின்னிதழ். இனி இதன் மூலமாக நான் உங்களோடு தினமும் பேச முடிவு செய்து இருக்கிறேன்… பேசுவோம்…!

‘மூன்று எழுத்தில் என் மூச்சு இருக்கும், அது முடிந்த பின்னால் தான் பேச்சு இருக்கும்”. ஆம், பாஜக என்ற மூன்று எழுத்தில் என் முழு மூச்சிருக்கும் அதை வளர்த்தெடுப்பதில் தான் எனது முழு முயற்சியும் இருக்கும்

”இருந்திடலாம் நாட்டில் பல வண்ணக் கொடி, பறக்க வேண்டும் எங்கும் ஒரே சின்ன கொடி, அது பஞ்சமில்லை என்னும் அன்னக்கொடி” அதுதான் பாரதிய ஜனதா கட்சியின் தேசியக்கொடி. என்பதைக் கூறி, நாளை பேசும் வேளை வரும் வரை உங்களிடமிருந்து விடைபெறுகிறேன்.

நன்றி வணக்கம்,

ஜெய் ஹிந்த் ! பாரத் மாதா கி ஜெய் !

அன்புடன் உங்கள் வீட்டுப்பிள்ளை நயினார் நாகேந்திரன்.

அரசியல் Tags:#Bjp, #nainar nagendran, #Oreynaadu, #Tamilnadu

Post navigation

Previous Post: தமிழகத்தில் புனரமைக்கப்பட்ட 9 ரயில் நிலையங்களை பிரதமர் மோடி திறந்து வைத்தார்
Next Post: ஒரே நாடு ஒரே தேர்தல் முறையை கருணாநிதி வரவேற்றார்; ஸ்டாலின் எதிர்க்கிறார் : பவன் கல்யாண்

Related Posts

  • அமைப்பு பருவம் – 2025 புதிய மாவட்ட தலைவர்கள் பட்டியல் அறிவிப்பு அரசியல்
  • தீர்வு கொடுக்காமல் எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊற்றும் விஜய்: தலைவர் அண்ணாமலை காட்டம் அரசியல்
  • மாணவி பாலியல் விவகாரத்தில் மக்களை திசை திருப்பும் முதல்வர் ஸ்டாலின்: தலைவர் அண்ணாமலை அரசியல்
  • கர்மவீரர் காமராஜரை தொடர்ந்து இழிவுபடுத்தும் திமுக : பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கண்டனம் அரசியல்
  • தமிழகத்தை சேர்ந்த 25 பேர் ஐபிஎஸ் அதிகாரிகளாக பதவி உயர்வு: அண்ணாமலை வாழ்த்து அரசியல்
  • ஒரே நாடு, ஒரே தேர்தல் முக்கியத்துவம் பற்றி தமிழக மக்களுக்கு எடுத்துரைக்க உள்ளோம்: நயினார் நாகேந்திரன் அரசியல்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • ரூ.6 லட்சம் கோடி முதலீட்டை ஜப்பான் நாட்டில் ஈர்க்க இந்தியா இலக்கு: பிரதமர் மோடி
  • பிஜியின் கடல்சார் பாதுகாப்பை வலுப்படுத்த இந்தியா பயிற்சி மற்றும் உபகரணங்களை வழங்கும்: பிரதமர் மோடி
  • நெல்லையில் பாஜக பூத் பொறுப்பாளர்கள் மாபெரும் மாநாடு: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்பு
  • சி.பி.ராதாகிருஷ்ணனை அனைத்து கட்சிகளும் ஒருமனதாக ஆதரிக்க வேண்டும் : ஸ்டாலினுக்கு நயினார் நாகேந்திரன் வேண்டுகோள்
  • இல.கணேசன் உடலுக்கு மத்திய அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் ஆகியோர் நேரில் அஞ்சலி

Recent Comments

No comments to show.

Archives

  • August 2025
  • July 2025
  • June 2025
  • May 2025
  • April 2025
  • March 2025
  • February 2025
  • January 2025

Categories

  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழ்நாடு
  • நாடு
  • டெல்லியில் 76-வது குடியரசு தின விழா கோலாகலம்: தேசியக் கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரௌபதி முர்மு இந்தியா
  • ம.பொ.சி 119வது பிறந்த நாள்; நயினார் நாகேந்திரன் மரியாதை தமிழ்நாடு
  • தமிழகத்தில் தாமரை மலர்ந்தே தீரும்: சேலத்தில் தலைவர் நயினார் நாகேந்திரன் நாடு
  • பிரதமர் மோடியை சந்தித்தார் அமெரிக்க உளவுத்துறை தலைவர் துளசி கப்பார்டு இந்தியா
  • பொதுமக்கள் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் பட்ஜெட் : தலைவர் அண்ணாமலை வரவேற்பு அரசியல்
  • புதிய கல்விக் கொள்கையில் ஹிந்தி மொழி கட்டாயப்படுத்தவில்லை: மத்திய அமைச்சர் எல்.முருகன் அரசியல்
  • ரூ.12 லட்சம் வரை வருமான வரி இல்லை:பட்டியலின, பழங்குடியின பெண்கள் 5 லட்சம் பேருக்கு தலா ரூ.2 கோடி கடன்; பட்ஜெட்டில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அதிரடி அறிவிப்பு இந்தியா
  • தீர்வு கொடுக்காமல் எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊற்றும் விஜய்: தலைவர் அண்ணாமலை காட்டம் அரசியல்

Copyright © 2025 Orey Naadu ஒரேநாடு – இமயம் முதல் குமரி வரை.

Powered by PressBook News WordPress theme