---Advertisement---

மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவு அதிகரிப்பதை பொறுக்க முடியாமல் எஸ்.ஜி.சூர்யா உள்ளிட்ட 5 பாஜகவினரை கைது செய்த திராவிட மாடல்

On: March 8, 2025 10:24 AM
Follow Us:
---Advertisement---

தேசிய புதிய கல்விக்கொள்கையில் இடம்பெற்றுள்ள மும்மொழிக் திட்டத்திற்கு தமிழக மாணவர்கள் மற்றும் பொதுமக்களிடம் ஆதரவு அதிகரிப்பதை பொறுத்துக்கொள்ள முடியாத திராவிட மாடல் அரசு சென்னையில் பாஜக மாநில செயலாளர் எஸ்.ஜி.சூர்யா உட்பட 5 பேரை கைது செய்துள்ளது.

சென்னை சோழிங்கநல்லூர் அருகேயுள்ள அரசு மேல்நிலைப் பள்ளி அருகில் மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவான கையெழுத்து இயக்கம் பாஜக சார்பில் நேற்று (மார்ச் 07) நடைபெற்றது. அப்போது அரசுப் பள்ளி மாணவ, மாணவியர்கள் தாங்களாகவே விருப்பப்பட்டு ஆர்வமுடன் கையெழுத்திட்டு வந்தனர். அதே போன்று அப்பகுதி பொது மக்களும் ஆர்வமுடன் கையெழுத்திட்டனர்.

ஆனால் இதனை பொறுத்துக்கொள்ள முடியாத திராவிட மாடல் அரசு, மாணவர்களிடம் கட்டாயப்படுத்தி கையெழுத்து வாங்கியதாக கூறி பாஜக மாநில செயலாளர் எஸ்.ஜி.சூர்யா, பாஜக கவுன்சிலர் சுந்தரம் உட்பட 5 பேரை கைது செய்தது.

கைது நடவடிக்கையை கண்டித்து கண்ணகி நகர் காவல் நிலையத்தை 100க்கும் மேற்பட்ட பாஜக தொண்டர்கள் முற்றுகையிட்டு தங்களையும் கைது செய்யக்கூறி திராவிட மாடல் போலீசாரிடம் தெரிவித்தனர். இதனால் பதறிப்போன போலீசார் செய்வதறியாமல் திகைத்தனர்.

இதையடுத்து கைது செய்யப்பட்ட எஸ்.ஜி.சூர்யா உள்ளிட்ட 5 பேரும் சோழிங்கநல்லூர் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், ஐந்து பேரையும் ஜாமினில் விடுவித்து நீதிபதி உத்தரவிட்டார்.
திமுகவின் சர்வாதிகார ஆட்சி நீண்ட நாட்கள் நீடிக்காது என்பது மட்டும் நிதர்சணமான உண்மை.

Join WhatsApp

Join Now

Subscribe Youtube

Subscribe Now

இதையும் படிக்கலாமே !

Leave a Comment