போலீஸிடம் வழங்கிய ஆதாரம் ஐடிவிங் நிர்வாகிக்கு சென்றது எப்படி? திமுக நிர்வாகி மீது புகார் அளித்த இளம்பெண் கண்ணீர்
‘‘போலீஸிடம் நான் கொடுத்த எல்லா ஆதாரங்களும் தி.மு.க ஐடி விங் நிர்வாகியான ராகுல் என்பவரிடம் சென்றது எப்படி? அந்த நபர் என்னைப் பற்றி சமூக வலைத்தளங்களில் தவறான தகவல்களை பரப்பிக்கொண்டிருக்கிறார்.’’ என -பாதிக்கப்பட்ட மாணவி கண்ணீர் மல்க பேட்டி அளித்துள்ளார். ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் காவனூர் பெரியத் தெருவைச் சேர்ந்தவர் தெய்வா என்கிற தெய்வச்செயல். இவர் தி.மு.க இளைஞரணியில் அரக்கோணம் மத்திய ஒன்றிய துணை அமைப்பாளராகவும், உதயநிதி ஸ்டாலின் ரசிகர் நற்பணி மன்றத்தின் நிர்வாகியாகவும் பொறுப்புகள் வகிக்கிறார்….