பாகிஸ்தானை வேட்டையாடுவதற்காக இந்திய ராணுவம் தயாராக உள்ளது. இதற்கான போர் ஒத்திகையிலும் ஈடுபட்டும் வரும் நிலையில் தேசப்பணிக்கு தயார் என இந்திய கடற்படை அதிரடியாக அறிவித்துள்ளது.
பஹல்காமில் கடந்த செவ்வாய்கிழமை பாகிஸ்தான் இஸ்லாமிய பயங்கரவாதிகள் நிகழ்த்திய துப்பாக்கிச் சூட்டில் 26 ஹிந்து சுற்றுலாப்பயணிகள் படுகொலை செய்யப்பட்டனர். இதனால் பாகிஸ்தானுக்கு எதிராக மத்திய அரசு பல்வேறு அதிரடியான முடிவுகளை எடுத்து வருகிறது.
இந்தநிலையில், இந்தியா எப்போது வேண்டுமானாலும் தாக்கக்கூடும் என்பதால் எல்லையில் பாகிஸ்தான் தனது ராணுவத்தை குவித்து வருகிறது. இதற்கிடையே முப்படைகளும் தயார் நிலையில் இருக்குமாறு பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்திருந்தார்.
இந்தநிலையில், பாகிஸ்தானை மரண பீதியில் ஆழ்த்தும் விதமாக தேசப்பணிக்கு தயார் என இந்திய கடற்படை அறிவித்துள்ளது. இந்தியாவின் 5 போர்க்கப்பல்களின் புகைப்படத்தை வெளியிட்டு தேசப்பணிக்கு தயார் என இந்திய கடற்படை அறிவித்துள்ளது. ஒற்றுமையில் தான் சக்தி இருக்கிறது எனும் வார்த்தையோடு 5 போர் கப்பல்களின் புகைப்படங்களை வெளியிட்டுள்ளது. எந்த நேரத்திலும், எந்த இடத்திலும், எப்படி வேண்டுமானாலும் தயாராக இருக்கிறோம் என இந்திய கடற்படை தெரிவித்துள்ளது.
இந்தியா அமைதியை விரும்பும் நாடு என்றாலும் தனது நாட்டுக்கு தீங்கு ஏற்படுத்தும் யாராக இருந்தாலும் அவர்களை ஒருபோதும் விட்டு வைக்காது என்பதுதான் நிதர்சனமான உண்மை.