---Advertisement---

பிரான்சில் இந்திய துணைத் தூதரகத்தை திறந்து வைத்த பிரதமர் மோடி

On: February 12, 2025 5:32 PM
Follow Us:
---Advertisement---

பிரான்சில் அமைக்கப்பட்டுள்ள இந்திய துணைத் தூதரகத்தை பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பிரான்ஸ் அதிபர் மேக்ரான் திறந்து வைத்தனர்.

பிரான்ஸ் நாட்டிற்கு அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி, பாரிசில் நேற்று நடைபெற்ற செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப மாநாட்டிற்கு தலைமை தாங்கினார். தொடர்ந்து அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ், கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை உட்பட பல்வேறு நாட்டுத் தலைவர்கள் மற்றும் தொழிலதிபர்களை சந்தித்தார்.

இந்நிலையில், மார்சேலே நகரில் அமைக்கப்பட்டுள்ள இந்திய துணைத் தூதரகத்தை பிரதமர் நரேந்திர மோடி, பிரான்ஸ் அதிபர் மேக்ரான் ஆகியோர் இணைந்து திறந்து வைத்தனர்.

இந்திய துணைத் தூதரக திறப்பு விழாவிற்கு வருகை தந்திருந்த பிரான்ஸ் வாழ் இந்தியர்கள், பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். அவர்களுடன் பிரதமர் கைகுலுக்கி மகிழ்ச்சியுடன் கலந்துரையாடினார்.

முன்னதாக முதல் உலகப்போரில் உயிர் தியாகம் செய்த இந்திய வீரர்களின் தியாகங்களை நினைவுகூறும் வகையில், மசார்குஸ் போர் நினைவு சின்னத்தில் பிரதமர் மோடி மற்றும் அதிபர் மேக்ரான் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.

Join WhatsApp

Join Now

Subscribe Youtube

Subscribe Now

Leave a Comment