ஜனாதிபதி திரௌபதி முர்முவை நேரில் சந்தித்த பிரதமர் நரேந்திர மோடி, பாகிஸ்தான் மீதான தாக்குதல் குறித்து விளக்கமளித்தார்.
காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் மீது இந்தியா பதிலடி கொடுத்துள்ளது. ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில், ஆக்கிரமிப்பு காஷ்மீர் மற்றும் பாகிஸ்தானில் செயல்படும் பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தி நமது இந்திய ராணுவம் பதிலடி கொடுத்துள்ளது. இதில் 100க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டு உள்ளனர்.
இந்த தாக்குதலைத் தொடர்ந்து மத்திய அமைச்சரவை கூட்டி பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார். நாளை அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற உள்ளது.
இந்நிலையில், ஜனாதிபதி திரௌபதி முர்முவை நேரில் சந்தித்த பிரதமர் நரேந்திர மோடி ‘ஆபரேஷன் சிந்தூர்’ குறித்து விளக்கமளித்தார். இந்தியா தாக்குதல் நடத்திய விதம் மற்றும் பாகிஸ்தானுக்கு ஏற்பட்டுள்ள இழப்பு குறித்து பிரதமர் மோடி விளக்கமளித்தார்.