---Advertisement---

பாஜக ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்துரையாடிய நயினார் நாகேந்திரன்

On: May 21, 2025 12:27 PM
Follow Us:
---Advertisement---

தமிழக பாஜக ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு ஊடக விவாதங்களில் பங்குபெறும் கட்சி நிர்வாகிகளிடம் கலந்துரையாடினேன் என தலைவர் நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ., தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் சமூக வலைத்தளப்பதிவில்; இன்று நமது தமிழக பாஜக ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்துக் கொண்டு ஊடக விவாதங்களில் பங்குபெறும் கட்சி நிர்வாகிகளுடன் கலந்துரையாடினேன். உடன் பாஜக மாநில அமைப்பு பொதுச் செயலாளர் கேசவவிநாயகம் அவர்களும், தேசிய மகளிரணித் தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் அவர்களும், மூத்த தலைவர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் அவர்களும், தேசிய பொதுக்குழு உறுப்பினரும் தேசிய டிஜிட்டல் நூலகம் மற்றும் ஆவணமயமாக்கல் ஒருங்கிணைப்பாளருமான ஆசிர்வாதம் ஆச்சாரி அவர்களும், மூத்த தலைவர்களும், கட்சி நிர்வாகிகளும் மற்றும் ஆதரவாளர்களும் கலந்துக்கொண்டு சிறப்பித்தனர். இந்நிகழ்வை சிறப்பாக ஒருங்கிணைத்த மாநிலத் துணைத்தலைவரும், ஊடகப் பிரிவின் பொறுப்பாளருமான கரு.நாகராஜன் அவர்களுக்கும் செய்தி தொடர்பாளர் ஸ்ரீகாந்த் கருணேஸ் அவர்களுக்கும் என் வாழ்த்துகள். இவ்வாறு தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.

Join WhatsApp

Join Now

Subscribe Youtube

Subscribe Now

இதையும் படிக்கலாமே !

Leave a Comment