Skip to content
Orey Naadu ஒரேநாடு – இமயம் முதல் குமரி வரை

Orey Naadu ஒரேநாடு – இமயம் முதல் குமரி வரை

  • முகப்பு
  • சந்த செலுத்த
  • தொடர்புக்கு
  • Toggle search form
  • தொடர்ந்து இரண்டு முறை தி.மு.க., வென்றதாக சரித்திரம் இல்லை: நயினார் நாகேந்திரன் அரசியல்
  • பொதுமக்கள் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் பட்ஜெட் : தலைவர் அண்ணாமலை வரவேற்பு அரசியல்
  • பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு கமலாலயத்தில் அஞ்சலி தமிழ்நாடு
  • இசை இறைவனுடன் ஒரு சந்திப்பு: தலைவர் அண்ணாமலை நெகிழ்ச்சி தமிழ்நாடு
  • வடலூர் விவகாரத்தில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பு திமுக அரசுக்கு சம்மட்டி அடி: தலைவர் அண்ணாமலை அரசியல்
  • கடலூர் மாவட்ட பாஜகவினர் கைது : தலைவர் அண்ணாமலை கண்டனம் அரசியல்
  • டெல்லியில் ஒவ்வொரு ஊழலும் விசாரிக்கப்படும்; கொள்ளை அடித்தவர்கள் அதற்கான விளைவுகளை சந்திக்க நேரிடும்: பிரதமர் மோடி இந்தியா
  • அனைவரும் பொங்கலை கொண்டாடுங்க, டங்ஸ்டன் சுரங்கம் வராது: விவசாயிகளிடம் உறுதி கொடுத்த தலைவர் அண்ணாமலை அரசியல்

முருக பக்தர்கள் மாநாட்டில் அறுபடை வீடுகள் மாதிரி அமைப்பு: மக்கள் தரிசனத்துக்கு இன்று முதல் அனுமதி

Posted on June 16, 2025June 16, 2025 By வ.தங்கவேல் No Comments on முருக பக்தர்கள் மாநாட்டில் அறுபடை வீடுகள் மாதிரி அமைப்பு: மக்கள் தரிசனத்துக்கு இன்று முதல் அனுமதி

மதுரையில் முருக பக்தர்கள் மாநாட்டில் முருகனின் அறுபடை வீடுகளின் மாதிரி அமைக்கப்பட்டு பக்தர்கள் தரிசனத்துக்கு இன்று முதல் (ஜூன் 16) அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மதுரை பாண்டிகோவில் அம்மா திடலில் இந்து முன்னணி சார்பில் முருக பக்தர்கள் மாநாடு ஜூன் 22-ல் நடைபெறுகிறது. இதையாட்டி மாநாட்டு வளாகத்தில் முருகனின் அறுபடை வீடுகளின் மாதிரிகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மாதிரி அறுபடை வீடுகளை புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் இன்று திறந்து வைத்தார்.

முருகனின் அறுபடை வீடுகளாக திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழனி, சுவாமிமலை, திருத்தணி, சோலைமலை முருகன் கோயில்களில் கோபுரங்களுடன் தனித்தனியாக மாதிரி கோயில்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மாதிரி கோயில்களில் அறுபடை வீடுகளின் மூலவர் அப்படியே காட்சிப்படுத்தப்பட்டுள்ளார். அறுபடை வீடுகளில் பூஜிக்கப்பட்ட வேல்களை மாதிரி அறுபடை வீடுகளில் அருள்பாலிக்கும் மூலவர் கையில் பிடித்தபடி காட்சியளிக்கிறார்.

திருப்பரங்குன்றம் முருகன் அமர்ந்தபடியும், பழனி முருகன் ராஜாங்க அலங்காரத்திலும் காட்சியளிக்கிறார். மாதிரி கோயில்களில் அறுபடை வீடுகளின் தூண்கள், சிற்பங்கள் அச்சிடப்பட்ட பிளக்ஸ் ஒட்டப்பட்டு கோயில் போல் தோற்றம் உருவாக்கப்பட்டுள்ளது. மாதிரி அறுபடை வீடுகளை ஜூன் 22 வரை பொதுமக்கள் வழிபட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தினமும் காலை, மாலையில் இரு மணி நேரம் பூஜை செய்யவும், பிரசாதம் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மாதிரி அறுபடை வீடுகளுக்கு வரும் பக்தர்களை ஒழுங்குபடுத்தும் பணியில் இந்து முன்னணியினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மாதிரி அறுபடை வீடுகளில் வழிபட வரும் பக்தர்கள் கந்த சஷ்டி கவசம், திருப்புகழ்பாடி வருகின்றனர். முருக பக்தர்கள் மாநாடு ஜூன் 22-ல் மாலை 3 மணி முதல் இரவு 8 மணி வரை நடைபெறுகிறது. மாநாட்டில் சரியாக 6 மணிக்கு ஒரே நேரத்தில் கந்த சஷ்டி மற்றும் திருப்புகழ் பாடவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாடு Tags:#Bjp, #Oreynaadu, #Tamilnadu

Post navigation

Previous Post: 2027 மார்ச்சில் மக்கள் தொகை கணக்கெடுப்பு; கெஜட்டில் அரசாணையை வெளியிட்டது மத்திய அரசு
Next Post: கோவை சின்னியம்பாளையம் மாரியம்மன் கோவில் சேதம் : அண்ணாமலை கண்டனம்

Related Posts

  • தாய்மார்கள், சகோதர சகோதரிகள் அனைவருக்கும் இனிய மகளிர் தின நல்வாழ்த்துக்கள் : தலைவர் அண்ணாமலை தமிழ்நாடு
  • பாஜக ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்துரையாடிய நயினார் நாகேந்திரன் தமிழ்நாடு
  • பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு கமலாலயத்தில் அஞ்சலி தமிழ்நாடு
  • தோல்வி பயத்தால் முருக பக்தர்கள் மாநாட்டுக்கு தொல்லை தரும் திமுக: நயினார் நாகேந்திரன் தமிழ்நாடு
  • ஒரே நாடு ஒரே தேர்தல் முறையை கருணாநிதி வரவேற்றார்; ஸ்டாலின் எதிர்க்கிறார் : பவன் கல்யாண் தமிழ்நாடு
  • ‘தாலிபான் திமுக அரசு’ முடிவுக்கு கொண்டுவரப்படும்: மதுரையில் ஹெச்.ராஜா சூளுரை தமிழ்நாடு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • காவல்துறையால் கொலை செய்யப்பட்ட இளைஞர்; ஸ்டாலினிடம் 9 கேள்விக்கான பதிலை பெற்றுத்தாருங்கள்; ஊடகங்களுக்கு நயினார் நாகேந்திரன் கோரிக்கை
  • 95 கோடி பேருக்கு சமூக பாதுகாப்பு ‘மனதின் குரல்’ நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பெருமிதம்
  • திருநீறு பூசி, ருத்ராட்சம் அணிந்து மாணவர்கள் பள்ளிக்கு செல்ல வேண்டும்: அண்ணாமலை
  • தொடர்ந்து இரண்டு முறை தி.மு.க., வென்றதாக சரித்திரம் இல்லை: நயினார் நாகேந்திரன்
  • ம.பொ.சி 119வது பிறந்த நாள்; நயினார் நாகேந்திரன் மரியாதை

Recent Comments

No comments to show.

Archives

  • June 2025
  • May 2025
  • April 2025
  • March 2025
  • February 2025
  • January 2025

Categories

  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழ்நாடு
  • நாடு
  • இளைஞர்கள் யோகாவை வாழ்நாள் முழுவதும் ஒருதுணையாக ஏற்றுக்கொள்ள வேண்டும்: ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழ்நாடு
  • ஆதம்பூர் விமானப்படை வீரர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடல் இந்தியா
  • தமிழக அரசு நிறுவனங்களை கமிஷன் மையங்களாக இயக்கியதன் விளைவாக அமலாக்கத்துறை சோதனை: அண்ணாமலை நாடு
  • கோவை சின்னியம்பாளையம் மாரியம்மன் கோவில் சேதம் : அண்ணாமலை கண்டனம் அரசியல்
  • மக்களவையில் தொடர்ந்து அமளியில் ஈடுபடும் தயாநிதி மாறன்: சபாநாயகர் ஓம் பிர்லா கடும் எச்சரிக்கை இந்தியா
  • மத்திய அரசு வழங்கிய ரூ.1,050 கோடி நிதியை ஏப்பம் விட்ட அமைச்சர் அன்பில் மகேஷ் : தலைவர் அண்ணாமலை அரசியல்
  • திருநீறு பூசி, ருத்ராட்சம் அணிந்து மாணவர்கள் பள்ளிக்கு செல்ல வேண்டும்: அண்ணாமலை அரசியல்
  • பாகிஸ்தான் இனி தாக்குதல் நடத்தினால் அணு ஆயுத போர் தான்: நயினார் நாகேந்திரன் தமிழ்நாடு

Copyright © 2025 Orey Naadu ஒரேநாடு – இமயம் முதல் குமரி வரை.

Powered by PressBook News WordPress theme