Skip to content
Orey Naadu ஒரேநாடு – இமயம் முதல் குமரி வரை

Orey Naadu ஒரேநாடு – இமயம் முதல் குமரி வரை

  • முகப்பு
  • சந்த செலுத்த
  • தொடர்புக்கு
  • Toggle search form
  • பொதுமக்கள் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் பட்ஜெட் : தலைவர் அண்ணாமலை வரவேற்பு அரசியல்
  • இசை இறைவனுடன் ஒரு சந்திப்பு: தலைவர் அண்ணாமலை நெகிழ்ச்சி தமிழ்நாடு
  • சைவ சித்தாந்தம் என்பது மதம் சார்ந்தது அல்ல, ஆன்மா சார்ந்தது : மத்திய அமைச்சர் ஜெ.பி.நட்டா தமிழ்நாடு
  • பஹல்காமில் இஸ்லாமிய பயங்கரவாதிகள் வெறியாட்டம்; ‘‘நீ ஹிந்துவா?’’ என கேட்டு, கேட்டு 28 சுற்றுலாப்பயணிகளை கொன்ற கொடூரம் இந்தியா
  • ஊர் உறங்கிய பின்னர், நள்ளிரவில் பதிலளிக்கும் பெரியகருப்பன் – திமுக ஆட்சியில் விடியாது என்பதில் அத்தனை நம்பிக்கையா? தலைவர் அண்ணாமலை கேள்வி அரசியல்
  • புதிய பாம்பன் ரயில் பாலத்தை ராம நவமி நாளில் திறந்து வைத்தார் பிரதமர் மோடி தமிழ்நாடு
  • உங்கள் வீட்டுப் பிள்ளை; நயினார் பேசுகிறேன்; தொடர்பில் இருப்போம்… தொடர்ந்து பேசுவோம்…! அரசியல்
  • ஒரே நாடு, ஒரே தேர்தல் முக்கியத்துவம் பற்றி தமிழக மக்களுக்கு எடுத்துரைக்க உள்ளோம்: நயினார் நாகேந்திரன் அரசியல்

மத்திய அரசு வழங்கிய ரூ.1,050 கோடி நிதியை ஏப்பம் விட்ட அமைச்சர் அன்பில் மகேஷ் : தலைவர் அண்ணாமலை

Posted on February 13, 2025 By admin No Comments on மத்திய அரசு வழங்கிய ரூ.1,050 கோடி நிதியை ஏப்பம் விட்ட அமைச்சர் அன்பில் மகேஷ் : தலைவர் அண்ணாமலை

சமக்ர சிக்ஷா திட்டத்தின் மூலம், மத்திய அரசு வழங்கிய ரூ.1,050 கோடி நிதியை அமைச்சர் அன்பில் மகேஷ் ஏப்பம் விட்டுள்ளார் என தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தலைவர் அண்ணாமலை இன்று (பிப்ரவரி 13) வெளியிட்டுள்ள அறிக்கையில்: மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள், நமது குழந்தைகள் அனைவருக்கும் தரமான, சமமான கல்வி கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில், கடந்த 2018 – 2019 ஆம் ஆண்டு, சமக்ர சிக்ஷா திட்டத்தைக் கொண்டு வந்தார்.  இந்தத் திட்டத்தின் சிறப்பம்சங்களில் ஒன்றான, தகவல் தொடர்பு தொழில்நுட்பக் கல்வி (ICT) தொடர்பாக, சில விதிமுறைகளை மத்திய அரசு வகுத்துள்ளது.

இதன்படி, அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளிலும், ஆறாம் வகுப்பிலிருந்து, 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவ மாணவியர்களுக்கு, தகவல் தொடர்பு தொழில்நுட்பம், தனிப் பாடமாக இடம்பெற வேண்டும் என்றும், இதற்காக, ஒவ்வொரு பள்ளிகளிலும், ICT Labs அமைக்கப்பட வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இவற்றை அமைக்க, மூலதனச் செலவுகளுக்காக, ரூ.6.40 லட்சமும், இந்தப் பாடத்தைப் பயிற்றுவிக்கும் பயிற்றுனருக்கு மாத ஊதியமாக ரூ.15,000 மற்றும் இதர செலவுகள் சேர்த்து, ஆண்டுக்கு ரூ.2.50 லட்சமும் மத்திய அரசால் வழங்கப்படுகிறது.

இதன்படி, கடந்த மூன்று ஆண்டுகளில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், தகவல் தொடர்பு தொழில்நுட்பக் கல்வி (ICT) பாடத்திட்டத்துக்காக, மத்திய அரசு தமிழகத்துக்கு வழங்கியுள்ள நிதி ரூ.1,050 கோடி.

ஆறாம் வகுப்பிலிருந்து, 12 ஆம் வகுப்பு வரை, தகவல் தொடர்பு தொழில்நுட்பம் என்பது தனிப்பாடமாக அமைக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், தமிழகத்தில், அறிவியல் பாடத்தின் ஒரு பகுதியாக மட்டுமே வைக்கப்பட்டுள்ளது. இதனால், சிறு வயதிலிருந்தே, தகவல் தொடர்பு தொழில்நுட்பத்தில் நமது குழந்தைகள் சிறந்து விளங்க வேண்டும் என்ற இந்தத் திட்டத்தின் அடிப்படை நோக்கமே சிதைந்திருக்கிறது.

டெல்லி, தெலுங்கானா, ராஜஸ்தான் உள்ளிட்ட பிற மாநிலங்களில் எல்லாம், ஆறாம் வகுப்பில் இருந்தே பாடத்திட்டத்தில் தகவல் தொடர்பு தொழில்நுட்பம் என்பது தனிப்பாடமாக அமைக்கப்பட்டுள்ளது. திமுகவின் கூட்டணிக் கட்சியான கம்யூனிஸ்டுகள் ஆட்சி செய்யும் கேரள மாநிலத்தில், தமிழ் உட்பட மும்மொழிகளில், ஆறாம் வகுப்பில் இருந்தே தகவல் தொடர்பு தொழில்நுட்பக் கல்விப் பாடம் உள்ளது. குறைந்தபட்சம், கேரள மாநிலத்திடம் இருந்து, தமிழில் இருக்கும் அந்தப் பாடநூலையாவது வாங்கி, நமது ஆறாம் வகுப்பு மாணவர்களுக்குக் கொடுத்திருக்கலாம்.

ஆனால், திமுக செய்திருப்பது என்ன? இல்லம் தேடிக் கல்வித் திட்டத்தில் செயல்பட்ட தன்னார்வலர்களை, கேரள மாநில அரசு நிறுவனமான Keltron நிறுவனத்தின் கீழ், மாதம் ரூ.11,500 ஊதியத்தில், அலுவலகப் பணியாளர் மற்றும் தகவல் தொடர்பு தொழில்நுட்பப் பயிற்றுனர் என்ற புதிய பணியிடத்தை உருவாக்கிப் பணியில் அமர்த்தியுள்ளது. கடந்த 2008 ஆம் ஆண்டு, மாண்புமிகு உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பின்படி, கணினி அறிவியல் ஆசிரியர்கள், B.Ed பட்டம் பெற்றிருக்க வேண்டும். கணினி அறிவியலில் முறையான கல்வித் தகுதி பெறாதவர்களை,  அலுவலகப் பணியாளர் மற்றும் தகவல் தொடர்பு தொழில்நுட்பப் பயிற்றுனர் என்ற பெயரில் நியமித்து, மாண்புமிகு உச்சநீதிமன்ற வழிகாட்டுதலை மீறியிருக்கிறது திமுக அரசு.

தமிழகம் முழுவதும், கணினி பயிற்சி பெற்ற B.Ed பட்டதாரிகள் சுமார் 60,000 பேர் இருக்கையில், அவர்களுக்குப் பணி நியமனம் வழங்காமல் வஞ்சித்திருப்பது ஏன்?

கடந்த மூன்று ஆண்டுகளில், சமக்ர சிக்ஷா திட்டத்தின்கீழ், தகவல் தொடர்பு தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் செயல்பாடுகள் பாடத்திட்டத்திற்காக, மத்திய அரசு, தமிழகத்துக்கு வழங்கிய ரூ.1,050 கோடி எங்கே சென்றது? அரசு மற்றும் அரசு உதவி பெறும் எத்தனை பள்ளிகளில், ICT Labs செயல்பாட்டில் உள்ளது? ஏன் ஆறாம் வகுப்பிலிருந்தே, தகவல் தொடர்பு தொழில்நுட்பக் கல்வி, தனிப் பாடமாக அமைக்கப்படவில்லை? இதுகுறித்து பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் பொதுமக்களுக்குத் தெளிவுபடுத்தக் கடமைப்பட்டிருக்கிறார். இவ்வாறு தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

அரசியல் Tags:#Annamalai, #Bjp, #Oreynaadu, #Tamilnadu

Post navigation

Previous Post: பிரான்சில் இந்திய துணைத் தூதரகத்தை திறந்து வைத்த பிரதமர் மோடி
Next Post: பிரதமர் மோடியை சந்தித்தார் அமெரிக்க உளவுத்துறை தலைவர் துளசி கப்பார்டு

Related Posts

  • அமைச்சர் கமிஷன் காந்தி ஊழலுக்கு சப்பைக்கட்டு கட்டாமல் உடனடியாக பதவி விலக வேண்டும் : தலைவர் அண்ணாமலை அரசியல்
  • சமூக வலைத்தள டிரெண்டிங்கில் பால்டாயில் பாபு அரசியல்
  • அரசு ரப்பர் தொழிற்சாலையில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு மருத்துவ காப்பீடு வழங்க வேண்டும் : நயினார் நாகேந்திரன் அரசியல்
  • வடலூர் விவகாரத்தில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பு திமுக அரசுக்கு சம்மட்டி அடி: தலைவர் அண்ணாமலை அரசியல்
  • டெல்லியில் வென்றது சாதாரண வெற்றி அல்ல; வரலாற்று சிறப்புமிக்கது: பிரதமர் மோடி பெருமிதம் அரசியல்
  • முருக பக்தர்கள் மீது கை வைப்பதா? சேகர்பாபு, ரகுபதியை எச்சரித்த தலைவர் அண்ணாமலை அரசியல்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • காவல்துறையால் கொலை செய்யப்பட்ட இளைஞர்; ஸ்டாலினிடம் 9 கேள்விக்கான பதிலை பெற்றுத்தாருங்கள்; ஊடகங்களுக்கு நயினார் நாகேந்திரன் கோரிக்கை
  • 95 கோடி பேருக்கு சமூக பாதுகாப்பு ‘மனதின் குரல்’ நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பெருமிதம்
  • திருநீறு பூசி, ருத்ராட்சம் அணிந்து மாணவர்கள் பள்ளிக்கு செல்ல வேண்டும்: அண்ணாமலை
  • தொடர்ந்து இரண்டு முறை தி.மு.க., வென்றதாக சரித்திரம் இல்லை: நயினார் நாகேந்திரன்
  • ம.பொ.சி 119வது பிறந்த நாள்; நயினார் நாகேந்திரன் மரியாதை

Recent Comments

No comments to show.

Archives

  • June 2025
  • May 2025
  • April 2025
  • March 2025
  • February 2025
  • January 2025

Categories

  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழ்நாடு
  • நாடு
  • டெல்லியில் 76-வது குடியரசு தின விழா கோலாகலம்: தேசியக் கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரௌபதி முர்மு இந்தியா
  • தருமபுரி மாவட்ட ஆட்சியர், எஸ்.பி.,க்கு மிரட்டல்: திமுக மாவட்ட பொறுப்பாளர் மீது பாஜக புகார் அரசியல்
  • யாழ்ப்பாணம் கலாச்சார மையத்துக்கு திருவள்ளூவர் பெயர் : தலைவர் அண்ணாமலை மகிழ்ச்சி அரசியல்
  • 2027 மார்ச்சில் மக்கள் தொகை கணக்கெடுப்பு; கெஜட்டில் அரசாணையை வெளியிட்டது மத்திய அரசு இந்தியா
  • கோவை சின்னியம்பாளையம் மாரியம்மன் கோவில் சேதம் : அண்ணாமலை கண்டனம் அரசியல்
  • காவல்துறையால் கொலை செய்யப்பட்ட இளைஞர்; ஸ்டாலினிடம் 9 கேள்விக்கான பதிலை பெற்றுத்தாருங்கள்; ஊடகங்களுக்கு நயினார் நாகேந்திரன் கோரிக்கை தமிழ்நாடு
  • தோல்வி பயத்தால் முருக பக்தர்கள் மாநாட்டுக்கு தொல்லை தரும் திமுக: நயினார் நாகேந்திரன் தமிழ்நாடு
  • பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு கமலாலயத்தில் அஞ்சலி தமிழ்நாடு

Copyright © 2025 Orey Naadu ஒரேநாடு – இமயம் முதல் குமரி வரை.

Powered by PressBook News WordPress theme