ஞானக் குழந்தையாம் திருஞானசம்பந்தர் அருட்பா பாடி தெய்வ தொண்டு செய்ததைப் போல திருஞானச் செல்வி தியா அவர்களை கமலாலயத்தில் சந்தித்தது எனக்கு மட்டில்லா மகிழ்ச்சியை தந்தது என பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
சென்னை தியாகராய நகரில் உள்ள பாஜக தலைமையகமான கமலாலயத்தில் திருஞானச் செல்வி தியா, மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனை சந்தித்து முருகன் பாடலை பாடி அசத்தினார்.
இதுதொடர்பாக நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் சமூக வலைத்தளப்பதிவில் திருஞானச் செல்வி தியா பாடிய வீடியோவை பதிவிட்டு கூறியிருப்பதாவது: ஞானக் குழந்தையாம் திருஞானசம்பந்தர் அருட்பா பாடி தெய்வ தொண்டு செய்ததைப் போல திருஞானச் செல்வி தியா (வயது 8) அவர்களை சென்னை தி நகர் பாரதிய ஜனதா அலுவலகத்தில் சந்தித்தது எனக்கு மட்டில்லா மகிழ்ச்சியை தந்தது.
அவருடைய பாடும் திறமையைக் கண்டு அதிசியத்து போய்விட்டேன் இவர், திருச்செந்தூர் பழனி திருப்பரங்குன்றம் திருவண்ணாமலை போன்ற திருக்கோவில்களில் நூற்றுக்கும் மேற்பட்ட பக்தி நிகழ்ச்சிகள் நடத்தி சாதனை புரிந்துள்ளார் என்ற செய்தி மிகவும் பாராட்டத்தக்கது.
சமீபத்தில் திருச்செந்தூர் முருகப்பெருமான் கோவிலில் நடந்த கும்பாபிஷேகத்தின் திருநாளின் போது, இவர் நூறாவது, இசை நிகழ்ச்சி நடத்தியுள்ளார்.
இவரது தேனிய குரலைக் கேட்டு வாழ்த்து மழை பொழிந்துள்ளனர் பக்தர்கள்!
ஞான குழந்தை தியாவின் இந்த தெய்வப்பணி மேலும் மேலும் சிறக்க வேண்டுமென எல்லாம் வல்ல இறைவனை மனமார வேண்டிக்கொண்டு அவர் பல்லாண்டு பல்லாண்டு வாழ்ந்து, தெய்வப் பணியை தொடர வேண்டும் என்று ஆசீர்வதித்து மகிழ்கிறேன். நன்றி. இவ்வாறு நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.