மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா குறித்து அவதூறாக பேசிய திமுக எம்.பி., ராசா மீது நடவடிக்கைக்கோரி கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட பாஜக சார்பில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது.
சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் 2ஜியில் ஊழல் செய்த திமுக எம்.பி., ராசா மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா குறித்து அவதூறாக பேசியிருந்தார். அவருக்கு தமிழக பாஜக சார்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது மட்டுமின்றி அனைத்து மாவட்டங்களிலும் புகார் அளிக்கப்பட்டு வருகிறது.
இந்தநிலையில், கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சித் தலைவர் கவியரசு தலைமையில் மாவட்ட கண்காணிப்பாளரிடம் ராசா மீது நடவடிக்கை எடுக்கக்கோரி புகார் அளிக்கப்பட்டது.
இந்த நிகழ்வில், மாவட்ட பொதுச்செயலாளர் எம்.ஆர்.ராஜேந்திரன், முருகேசன், பொருளாளர் ராணா, மாவட்டத் துணைத்தலைவர்கள் சுந்தரமூர்த்தி, தர்மன், மாவட்ட செயலாளர் கார்த்திகேயன், மாநில பொதுக்குழு உறுப்பினர் வேணு செல்வம், மண்டல் தலைவர்கள் சுப்பிரமணி, பழனி, சக்திவேல், தாபா சிவா, பொறுப்பாளர்கள் தாமோதரன், சிவக்கமார், பிரேம் ஆனந்த், ஜிகே பழனி, முனியப்பன், சிவா, மாதவன், சரவணன், மஞ்சுளா, சசிக்குமார், மாதேஷ் மற்றும் தொண்டர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.