ராணி அஹல்யாபாய் ஹோல்கர் அவர்களின் 300-வது பிறந்தநாள் விழாவில் இன்று கலந்து கொண்டதில் பெருமை கொள்கிறேன் என தலைவர் நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ., தெரிவித்துள்ளார்.
சென்னை தி.நகரில் உள்ள பாஜக தலைமையகமான கமலாலயத்தில் இன்று (மே 13) ராணி அஹல்யாபாய் ஹோல்கர் அவர்களின் 300வது பிறந்த நாள் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சி குறித்து தலைவர் நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ., கூறியதாவது:
பாரதத்தின் தத்துவமே ஆணும் பெண்ணும் சமமென்பதுதான். கல்வி, ஆட்சி, வீரம் எல்லாவற்றிலும் ஆண்களுக்கு நிகராக அல்லது ஒருபடி மேலேயே நமது பெண்கள் சிறந்து விளங்கிய தருணங்கள் பல உண்டு. இப்படி சிறந்து விளங்கிய ஒப்பற்ற மங்கையர்கரசி, மராட்டிய சாம்ராஜ்யத்தின் பேரரசி ராணி அகல்யாபாய் ஹோல்கர் ஆவார்.

பாரத நிலத்தை ஆன்மீக ரீதியாக இணைக்கும் 12 ஜோதிர்லிங்கங்களில் 8 ஜோதிர்லிங்க கோவில்களை புனரமைத்த புண்ணியவதி. நமது இராமநாத சுவாமிக்கும், காசி விஸ்வநாதருக்கும் அன்றாடம் காசி தீர்த்தமும், கோடி தீர்த்தமும் அபிஷேகங்களுக்கு கொண்டு சேர்ப்பித்த தனிப்பெருஞ்செல்வி. அப்படிப்பட்ட சீர்மையோங்கு ராணி அஹல்யாபாய் ஹோல்கர் அவர்களின் 300-வது பிறந்தநாள் விழாவில் இன்று கலந்து கொண்டதில் பெருமை கொள்கிறேன்.

தமிழக பாஜக-வின் தலைமையகமான கமலாலயத்தில் நடைபெற்ற இவ்விழாவில், தமிழக ஆர்எஸ்எஸ்-இன் மாநில இணை செயலாளர் ராமகிருஷ்ண பிரசாத் அவர்கள், முன்னாள் கேபினட் அமைச்சரும் தற்போதையை ஆந்திர மாநில பாஜக-வின் மாநிலத் தலைவர் புரந்தேஸ்வரி அவர்கள், தமிழக பாஜக துணை மாநிலத் தலைவர் கரு.நாகராஜன் அவர்கள், தமிழக பாஜக மகளிரணி தலைவி உமாரதி ராஜன் அவர்கள், சுற்றுச்சூழல் பாதுகாப்பு பிரிவின் மாநிலத் தலைவர் கோபிநாத் அவர்கள், மாநில செயலாளர்கள் சுமதி வெங்கடேசன் அவர்கள், பிரமிளா சம்பத் அவர்கள், மாநில நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர். இவ்வாறு தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.