ஆர்.எஸ்.எஸ்., சங்கத்தின் நூற்றாண்டு விழாவை நாம் காண்பது நம் தலைமுறை சுயம்சேவகர்களின் அதிர்ஷ்டமாகும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
டெல்லியில் உள்ள டாக்டர் அம்பேத்கர் சர்வதேச மையத்தில் ஆர்எஸ்எஸ் நூற்றாண்டு விழா (அக்டோபர் 01) கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் சிறப்பு நாணயம் மற்றும் அஞ்சல்தலையை பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டார்.
அதன் பின்னர் அவர் ஆற்றிய உரையில்; மேடையில் வீற்றிருக்கின்ற, ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக் சங்கத்தின் சர்கார்யவாஹ், மதிப்பிற்குரிய தத்தாத்ரேய ஹோஸ்போலே ஜி, மத்திய அமைச்சர் திரு கஜேந்திர ஷேகாவத் ஜி, தில்லி முதலமைச்சர் ரேகா குப்தா ஜி, ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக் சங்கத்தின் அனைத்து ஸ்வயம்சேவகர்களே, அவையில் இன்னபிற சான்றோர் பெருமக்களே, தாய்மார்களே பெரியோர்களே. நேற்று நமது மூத்த ஸ்வயம்சேவகர், மற்றும் சங்கத்தினுடைய, அனைத்துத் திருப்பு முனைகளிலும், ஏதோ ஒருவகையில் அவருடைய பங்களிப்பு இருந்திருக்கிறது. இப்படிப்பட்ட, விஜய்குமார் மல்ஹோத்ரா அவர்களை நாம் இழந்திருக்கிறோம். நான் முதன்மையாக, அவர்களுக்கு மரியாதை கலந்த, சிரத்தாஞ்சலிகளை அளிக்கிறேன்.
நண்பர்களே, இன்று, மஹநவமித் திருநாள். இன்று, தேவி சித்திதாத்ரிக்கு உரித்தான நாளாகும். நான் நாட்டுமக்கள் அனைவருக்கும், நவராத்திரியின் பொருட்டு என் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். நாளை, விஜயதசமி மிகப்புனிதமான நாள். அநியாயத்தின் மீதான, நியாயத்தின் வெற்றி. அசத்தியத்தின் மீது, சத்தியத்தின் வெற்றி. இருளின் மீது, ஒளியின் வெற்றி. விஜயதசமி, பாரதநாட்டுக் கலாச்சாரத்தின், இந்த சிந்தனை மற்றும் நம்பிக்கையினுடைய, காலத்தை வெல்லும் அறைகூவல். இத்தகைய மகத்தான வேளையின் போது, நூறு ஆண்டுகள் முன்பாக, ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கத்தின் நிறுவுதல், இது ஏதோ யதேர்ச்சையான விஷயமல்ல. இது, ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நடைபெற்றுவரும், அந்தப் பாரம்பரியத்தின், மீள் புத்தாக்கமாகும். இதிலே, தேசிய விழிப்புணர்வு, அந்தந்த சமயத்திலே, அந்த காலகட்டத்துடைய, சவால்களை எதிர்கொள்ளும் வகையிலே, புதியபுதிய வடிவங்களிலே வெளிப்படுகிறது. இந்தக் காலகட்டத்திலே, சங்கம், அந்த அனாதியான தேசிய விழிப்புணர்வை, புண்ணியமான வடிவமாகும்.

நண்பர்களே, இது நம் தலைமுறையைச் சேர்ந்த ஸ்வயம்சேவகர்களுடைய, சௌபாக்கியமாகும். அதாவது எங்களுக்கு, சங்கத்தின் நூற்றாண்டு என்பது போன்ற, மகத்தான வேளையை, பார்க்க முடிந்திருக்கிறது. நான் இந்த சந்தர்ப்பத்திலே, தேச சேவை என்ற உறுதிப்பாட்டிற்கு அர்ப்பணித்த, கோடானுகோடி ஸ்வயம்சேவகர்களுக்கு, நல்வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறேன், மனதார வாழ்த்துகிறேன். நான் சங்கத்தின் நிறுவனரும், நம்மனைவருக்கும் ஆதர்ஸமானவரும், பெருமதிப்பிற்குரிய டாக்டர் ஹெட்கேவரார் அவர்களுடைய சரணாரவிந்தங்களிலே, நினைவாஞ்சலிகளை அர்ப்பணம் செய்கிறேன்.
நண்பர்களே, சங்கத்தின் இந்த நூறாண்டுக்கால கௌரவமான பயணத்தின் நினைவாக, இன்று, பாரத அரசாங்கமானது, சிறப்பு அஞ்சல்தலை, மற்றும் நினைவு நாணயத்தை வெளியிட்டது. 100 ரூபாய் நாணயத்திலே, ஒருபுறத்திலே, தேசிய சின்னம் இருக்கிறது. இன்னொரு புறத்திலே, சிங்கத்தோடு கூட, வரத ஹஸ்தத்தோடு பாரதமாதாவின் சிறப்பான தோற்றம் உள்ளது. மேலும், சமர்ப்பண உணர்வோடு அவளை வணங்கும் ஸ்வயம்சேவகர்களைக் காண முடியும். பாரதநாட்டு நாணயத்திலே, பாரதமாதாவின் திருவுருவம், ஒருவேளை, சுதந்திர பாரதத்தின் வரலாற்றிலே, முதன்முறையாக நடந்தேறியிருக்கிறது. இந்த நாணயத்தின் மேலே, சங்கத்தின் ஞானவாக்கியமும் பொறிக்கப்பட்டிருக்கிறது. ராஷ்ட்ராய ஸ்வாஹா, இதம் ராஷ்ட்ராய, இதம் ந மம.
நண்பர்களே, இன்று வெளியிடப்பட்டிருக்கும் சிற்ப்பு அஞ்சல்தலை, அதற்குமே கூட ஒரு சிறப்பம்சம் இருக்கின்றது. நாமனைவரும் நன்கறிவோம், ஜனவரி 26 அன்று, குடியரசுத்திருநாளின் அணிவகுப்பு எத்தனை முக்கியமானது என்று. 1963யிலே நைண்டீன் சிக்ஸ்டி த்ரீயிலே, ஆர்எஸ்எஸ்ஸின் ஸ்வயம்சேவகர்களும் கூட, ஜனவரி 26ஆம் தேதி தேசிய அணிவகுப்பிலே கலந்து கொண்டார்கள். மேலும் அவர்கள், அழகு மிடுக்கு பெருமிதத்தோடு, தேசபக்தியின் மெட்டுக்கேற்ப பீடுநடை போட்டார்கள். இந்தத் தபால்தலையிலே, அந்த வரலாற்றுப்பூர்வமான கணத்தின் நினைவு அடங்கியிருக்கிறது.
நண்பர்களே, சங்கத்தின் ஸ்வயம்சேவகர்கள், இவர்கள் இடைவிடாமல் தேச சேவையில் ஈடுபட்டிருக்கின்றார்கள். சமூகத்தை சக்தியுடையதாக ஆக்கி வருகின்றார்கள். இதன் காட்சியும் கூட, அந்த நினைவு தபால்தலையிலே இருக்கின்றது. நான், இந்த நினைவு நாணயம், மேலும் தபால்தலையின் பொருட்டு, நாட்டுமக்களுக்கு, பலப்பல வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறேன்.
நண்பர்களே, எந்த வகையிலே, பர்ந்துபட்ட நதிக்கரையோரம், மனித நாகரீகம் தழைக்கின்றதோ, அதே போல, சங்கத்தின் கரைகளிலும் கூட, அதன் பிரதான ஓட்டத்திலும் கூட, பல நூற்றுக்கணக்கான உயிர்கள் அதிலே தழைத்தோங்கி இருக்கின்றன. எப்படி ஒரு நதி, எந்தப் பாதையில் பெருகியோடுகிறதோ, அந்தப் பகுதியை அந்த நிலத்தை, அங்கிருக்கும் கிராமங்களை, சுஜலாம் சுஃபலாம் என்று தனது நன்னீரால், வளமையாக்குகிறதோ, அதே போல, சங்கமானது இந்த தேசத்தின் அனைத்துத் துறைகளிலும், சமூகத்தின் அனைத்துக் கோணங்களையும் தொட்டிருக்கிறது. இது, இடையறாத தவத்தின் பலனாகும், இது தேசிய நீரோட்டத்தின் பலமாகும்.
நண்பர்களே, எந்த வகையிலே, ஒரு நதி பல கிளைகளாகத் தன்னை வெளிப்படுத்துகிறதோ, அனைத்துக் கிளைகளூம் அந்தந்தப் பகுதிகளை வளமடையச் செய்கின்றதோ, சங்கத்தின் பயணமும் கூட இதைப் போன்றதே தான். சங்கத்தின் பல்வேறு அமைப்புகளும் கூட, வாழ்க்கையின் அனைத்துக் கூறுகளோடும் இணைந்து, தேச சேவையில் ஈடுபட்டு வருகின்றன. கல்வியாகட்டும் விவசாயமாகட்டும் சமூக நலனாகட்டும், பழங்குடிகள் நலனாகட்டும் மகளிர் அதிகாரமளிப்பாகட்டும், கலை மற்றும் அறிவியல் துறையாகட்டும், நம்முடைய அனைத்து தொழிலாள சகோதர சகோதரிகளாகட்டும், சமூகத்தின் இப்படிப்பட்ட அனைத்துத் துறைகளிலும், சங்கம், தொடர்ந்து பணியாற்றி வருகின்றது.
மேலும் இந்தப் பயணத்துக்கும் கூட ஒரு சிறப்பு விஷயம் இருக்கின்றது. சங்கம் என்ற பெரும் நீரோட்டம், அநேக கிளைகளாக என்னவோ ஆனது, பல்கிப் பெருகித் தழைத்தது, ஆனால் இவற்றுக்கிடையே, முரண்பாடோ பிரிவினையோ பிறந்ததில்லை என்றுமே ஏற்பட்டதில்லை. ஏனென்றால், ஒவ்வொரு கிளையினுடைய, பல்வேறு துறைகளில் பணியாற்றிவரும் அனைத்து அமைப்புகளின் நோக்கம் ஒன்று தான், உணர்வு ஒன்று தான், தேசத்திற்கே முதன்மை.
நண்பர்களே, தொடங்கப்பட்ட நாள் முதற்கொண்டே, ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக் சங்கம், விசாலமான நோக்கத்தைத் தாங்கிப் பயணித்தது. அந்த நோக்கம் என்னவென்றால், தேச நிர்மாணம். இந்த நோக்கத்தை நிறைவேற்ற, சங்கம் தேர்வு செய்த பாதை என்னவென்றால், அது தான், தனிநபர் உருவாக்கத்திலிருந்து தேசத்தின் உருவாக்கம். மேலும் இந்தப் பாதையில் இடைவிடாமல் பயணிக்க, தேவையான செயல்பாட்டுமுறை, என்னவென்றால், என்றும் விதிகளின்படி செயல்படும் ஷாகா.
நண்பர்களே, பெருமதிப்பிற்குரிய டாக்டர் ஹெட்கேவார் நன்கறிவார், அதாவது நமது தேசம் எப்போது சக்தியுடையதாய் ஆகுமென்றால், ஒவ்வொரு குடிமகனுக்குள்ளேயும், தேசத்தின் பொருட்டு கடமையுணர்வு விழிப்படையும் போது தான் என்பதை. நம்முடைய தேசம் எப்போது மேலெழும்பும் என்றால், நாட்டின் குடிமக்கள் அனைவரும், பாரதத்திற்காக வாழ்வதைக் கற்கும் போது தான். ஆகையினாலே, அவர் தனிமனித உருவாக்கலில் நிரந்தர கவனம் செலுத்தினார். அதோடு அவருடைய வழிமுறையும் கூட, மிக வித்தியாசமாக இருந்தது. பரம்பூஜ்ய டாக்டர் ஹெட்கேவார் அவர்கள். இது பற்றி நாம் அடிக்கடி கேள்விப்பட்டிருக்கிறோம், அவர் கூறுவதுண்டு எப்படி இருக்கிறதோ, அப்படியே ஏற்றுக் கொள். எப்படித் தேவையோ, அப்படி உருவாக்கிவிடு. மக்களைத் திரட்டுவதில் டாக்டர் ஐயாவின் இந்த வழிமுறை, இதை எளிமையாகப் புரிந்து கொள்ளவேன்றுமென்றால் குயவனை நினைத்துக் கொள்ளுங்கள். எப்படி குயவன், செங்கல்லைச் சுடுகிறார்!! அவர் பூமியின் சாதாரண மண்ணிலிருந்து பணியைத் தொடங்குகிறார். குயவன் மண்ணைக் கொண்டு வருகிறார், அதில் உழைக்கிறார், அதற்கு உருவம் கொடுக்கிறார் கொடுத்து, சுடப் பண்ணுகிறார். தானும் வெப்பத்தில் உழல்கிறார் செங்கல்லையும் சுடுகிறார். பிறகு அந்தச் செங்கற்களை ஒன்று திரட்டி, இவற்றைக் கொண்டு பெரும் கட்டிடத்தை எழுப்புகிறார். இதைப் போன்று தான் டாக்டர் ஐயா, மிகவும் எளிமையான மனிதர்களைத் தேர்வு செய்தார். பிறகு அவர்களுக்குக் கற்பித்தார் தொலைநோக்கை அளித்தார் உருவாக்கினார். இந்த வகையிலே, அவர் தேசத்திற்காக அர்ப்பணிக்கப்பட்ட ஸ்வயம்சேவகர்களை உருவாக்கினார். ஆகையினால் தான் சங்கம் பற்றி ஒன்று கூறுவதுண்டு. அதாவது இதிலே, சாதாரணமானவர்கள் இணைந்து, அசாதாரணமான ஆச்சரியமான பணிகளை சாதிக்கின்றார்கள்.
நண்பர்களே, தனிமனிதனை உருவாக்கும் இந்த அழகான செயல்முறை, இதை இன்றும் கூட, சங்கத்தின் ஷாகாவிலே நம்மாலே காண முடியும். சங்க ஷாகாவின் மைதானம், எப்படிப்பட்ட உத்வேக பூமி என்றால், அங்கிருந்து, நானிலிருந்து நாம் என்பதற்கான பயணம் தொடங்கி விடுகிறது. சங்கத்தின் ஷாகாக்கள், தனிமனித உருவாக்கலுக்கான யாக குண்டங்கள். இந்த ஷாகாக்களிலே, தனிமனிதனுடைய, உடல்ரீதியான, மனரீதியான மற்றும் சமூகரீதியான வளர்ச்சி ஏற்படுகிறது. சங்கத்தின் சுயம்சேவகர்களுடைய மனங்களிலே, தேச சேவைக்கான உணர்வும் உத்வேகமும், நாளொருமேனியும் பொழுதொரு வண்ணமுயாய் அதிகரிக்கிறது. அவர்களுக்கெல்லாம், தியாகமும் அர்ப்பணிப்பும், இயல்பான ஒன்றாக ஆகி விடுகிறது. தற்புகழுக்காக போட்டிமனப்பான்மை, முடிவுக்கு வந்து விடுகிறது. மேலும் அவர்களுக்கு, சமூக தீர்மானம், மற்றும் சமூகப் பணியின், நற்பண்பு கிடைக்கிறது. தேச நிர்மாணம் என்ற மகத்தான நோக்கம், தனிமனித உருவாக்கம் என்ற தெளிவான சிந்தனை, மற்றும் ஷாகா போன்ற, எளிய, உயிர்ப்புடைய, செயல்பாடு. இதுதான் சங்கத்தினுடைய, 100 ஆண்டுக்கால பயணத்தின் ஆதாரமாக ஆகியிருக்கிறது. இந்தத் தூண்களின் பலத்தால் எழுப்பப்பட்ட சங்கமானது, இலட்சக்கணக்கான ஸ்வயம்சேவகர்களை உருவாக்கியிருக்கிறது, இவர்கள் பல்வேறு துறைகளிலே, தேசத்திற்கு, தங்களுடைய சிறப்பானவற்றை அளித்து வருகிறார்கள். தேசத்தை முன்னெடுத்துச் செல்வதற்காகத் தொடர்ந்து முயற்சி செய்து கொண்டிருக்கிறார்கள். அர்ப்பணிப்பு உணர்வோடு, சேவை வாயிலாக, மற்றும் தேச உயர்வுக்கான உழைப்பு வாயிலாக செய்கிறார்கள்.

நண்பர்களே, சங்கம் எப்போது செயல்படத் தொடங்கியதோ, சங்கத்திற்காக, தேசத்தின் முதன்மை மட்டுமே, அதன் முதன்மையாக இருந்து வந்திருக்கிறது. அந்த வகையிலே, எந்தக்காலகட்டத்திலே தேசத்தின் முன்பாக சவால்கள் வந்த போதெல்லாம், சங்கமானது, அந்தக்காலகட்டத்திலே தன்னைத் தானே, அர்ப்பணித்தது, சங்கம் அதை எதிர்கொண்டது. சுதந்திரப் போராட்டத்தை எடுத்துக் கொள்ளுங்கள். பெருமதிப்பிற்குரிய டாக்டர் ஹெட்கேவார் உள்ளிட்ட பல தொண்டர்கள் சுதந்திரப் போராட்ட வேள்வியில் கலந்து கொண்டார்கள். டாக்டர் ஐயா பலமுறை சிறைக்குச் சென்றிருக்கிறார். சுதந்திரப் போராட்டத்தின் எண்ணற்ற வீரர்களுக்கு, சங்கம் ஆதரவு அளித்து வந்தது. அவர்களோடு இணைந்து, தோளோடு தோள் சேர்த்து பணியாற்றியது. 1942இலே அங்கே சிமூரிலே, ஆங்கிலேயர்களுக்கு எதிராகப் போராட்டம் வெடித்த போது, அதிலே, அநேக ஸ்வயம்சேவகர்கள், ஆங்கிலேயர்களின் தீவிரமான அடக்குமுறைக்கு இரையானார்கள். நாடு சுதந்திரம் அடைந்த பிறகும் கூட, ஹைதராபாதின் நிஜாம் கட்டவிழ்த்த கொடுமைகளுக்கு எதிரான போராட்டம் தொடங்கி, கோவாவின் சுதந்திரப் போராட்டத்தைத் தொடர்ந்து தாத்ரா நகர் ஹவேலியின் விடுதலை வரை, சங்கம் பல தியாகங்களைப் புரிந்திருக்கிறது. ஆனால் உணர்வு, ஒன்றாகவே இருந்திருக்கிறது. தேசத்திற்கே முதன்மை. இலக்கு ஒன்றாகவே இருந்திருக்கிறது. ஒரே பாரதம், உன்னத பாரதம்.
நண்பர்களே, தேச சாதனையின் இந்தப் பயணத்திலே, சங்கத்தின் மீது தாக்குதல்கள், ஏதும் நடக்காமல் எல்லாம் இருக்கவில்லை. சங்கத்திற்கு எதிராக சூழ்ச்சிகள் பின்னப்பட்டன. நாமே கவனித்திருக்கிறோம், எப்படி சுதந்திரத்திற்குப் பிறகு சங்கத்திற்கு, முடிவுகட்ட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன என்பதை. பிரதான நீரோட்டத்தில் வராமல் இருக்கச் செய்யவும், அப்படி அது வருவதைத் தடுக்கவும், எண்ணில்லாத சூழ்ச்சிகள் அரங்கேற்றப்பட்டன. பரமபூஜனீய குருஜியை, பொய் வழக்குகளில் சிக்க வைத்தார்கள். அவரை சிறைகளில் கூட அடைத்தார்கள். ஆனால், பூஜிய குருஜி சிறையிலிருந்து வெளிவந்தவுடன், அவர் மிக இயல்பாகவே கூறினார். ஒருவேளை, வரலாற்றின் ஏடுகளிலே இந்த உணர்வு, இந்தச் சொற்கள், மிகப்பெரிய கருத்தூக்கம் அளிப்பவை. அப்போது பெருமதிப்பிற்குரிய குருஜி மிக இயல்பாகக் கூறினார். சில வேளைகளிலே, நாக்கு பற்களுக்கு இடையே கடிக்கப்பட்டு விடுகிறது, நசுக்கப்பட்டும் விடுகிறது, ஆனால் நாம், பற்களை இதற்காக உடைப்பதில்லை. ஏனென்றால், பற்களும் நம்முடையவை தான், நாக்கும் நம்முடையது தான். உங்களால் கற்பனை செய்து பார்க்க முடிகிறதா? யார் சிறையில் துன்புறுத்தப்பட்டாரோ, யார்மீது பலவகையான கொடுமைகள் இழைக்கப்பட்டதோ, அதன் பிறகு கூட, பெருமதிப்பிற்குரிய குருஜியின் மனதிலே எந்தக் காழ்ப்பும் இருக்கவில்லை. எந்த வெறுப்பும் இருக்கவில்லை. இதுதான் பரமபூஜ்ய குருஜியுடைய, ரிஷியைப் போன்ற ஆளுமையாகும். அவருடைய இந்த சிந்தனைத் தெளிவு தான், சங்கத்தின் ஒவ்வொரு ஸ்வயம்சேவகரின் வாழ்க்கையின் வழிகாட்டியாக அமைந்தது. இது தான் சமூகத்தின்பால், ஒற்றுமை மற்றும் புரிந்துணர்வு நற்பண்புகளுக்கு வலுசேர்த்தது. அந்த வகையிலே, சங்கத்தின் மீது தடைகள் விதிக்கப்பட்டாலும், சூழ்ச்சிகள் பின்னப்பட்டாலும், பொய் வழக்குகள் போடப்பட்டாலும், சங்கத்தின் ஸ்வயம்சேவகர்கள், எப்போதுமே, காழ்ப்புணர்வுக்கு இடமே அளித்ததில்லை. ஏனென்றால் அவர்கள் அறிவார்கள், நாம் சமூகத்திலிருந்து வேறுபட்டவர்கள் அல்ல என்பதை. சமுதாயம், நம்மனைவரிடமிருந்து தான் உருவாகி இருக்கிறது. எது சிறப்பாக இருக்கிறதோ, அதுவும் நம்முடையது தான். எது சிறப்புக் குறைவானதோ, அதுவும் நம்முடையது தான்.
நண்பர்களே, மேலும் ஒரு விஷயம். யார் காழ்ப்புணர்வை ஏற்படுத்திக் கொள்ளவில்லையோ, அதுதான் ஒவ்வொரு ஸ்வயம்சேவகருடைய, ஜனநாயகம் மற்றும் அரசியல்சட்டத்தின்பால் இருக்கக்கூடிய அசையாத நம்பிக்கை. தேசத்தின் மீது அவசரநிலை திணிக்கப்பட்ட போது, இந்த நம்பிக்கை தான் ஒவ்வொரு ஸ்வயம்சேவகருக்கும் பலத்தை அளித்தது, போராடுவதற்கான நெஞ்சுரத்தை அவர்களுக்கு அளித்தது. இந்த இரண்டு நற்பண்புகள் தான், அதாவது சமூகத்தின்பால் ஒற்றுமை, மற்றும் அரசியல்சட்ட அமைப்புகளின்பால் கொண்ட நம்பிக்கை தான், சங்கத்தின் ஸ்வயம்சேவகர்களுக்கு, அனைத்துச் சங்கடங்களின் போதும், நிலையான சித்தம் உடையவர்களாக ஆக்கியது. சமுதாயத்தின்பால், புரிந்துணர்வு உடையவர்களாக உருவாக்கியது. அந்த வகையிலே, சமூகத்தின் பல தாக்குதல்களையெல்லாம் எதிர்கொண்டு, சங்கம் இன்றுவரை, விசாலமான ஆலமரத்தைப் போல, உறுதியாக நிற்கின்றது. தேசம் மற்றும் சமூக சேவையிலே, தொடர்ந்து பணியாற்றி வருகிறது. இப்போது இங்கே, நமது ஒரு ஸ்வயம்சேவகர், மிக அழகாக ஒரு பாடலைப் பாடினார். பூஜ்யத்திலிருந்து ஒரு நூறாண்டானது. பூஜ்யத்திலிருந்து, ஒரு நூறாண்டு வரை. பண்பே மன உணர்வாய், பாரத அன்னைக்கு வெற்றி உண்டாகட்டும். மனதிலே உத்வேகம் உண்டாகட்டும். பயிற்சியை மேற்கொள்கிறோம். தாய்நாட்டினை வழிபடுகிறோம். மேலும் அந்த பாடலின் செய்தி என்ன? நாங்கள், தேசத்தையே தெய்வமாகப் போற்றுகிறோம். மேலும் நாங்கள், தேகத்தையே தீபமாக ஆக்கும் பாடத்தைக் கற்றிருக்கிறோம். உண்மையிலேயே, இது அற்புதமானது.
நண்பர்களே, தொடக்கம்முதலே சங்கம், தேசப்பற்றுஞ் மற்றும் சேவை என்பதன் பொருளாக இருந்தது. நாடு துண்டாடப்பட்ட துயரம், இலட்சோபலட்சம் குடும்பங்களை வீடில்லாதவர்களாக ஆக்கியது. அப்போது ஸ்வயம்சேவகர்கள், அகதிகளுக்கு சேவை புரிந்தார்கள். சங்கத்தின் ஸ்வயம்சேவகர்கள் தங்களுடைய குறைவான ஆதாரங்களைக் கொண்டு, அனைவருக்கும் முன்னதாய் இருந்தார்கள். இது வெறும் நிவாரணம் அல்ல, இது, தேசத்தின் ஆன்மாவினை, ஆற்றுப்படுத்தும் பணியாகும்.
நண்பர்களே, 1956 இலே , குஜராத்தின் கட்சின் அஞ்ஜாரிலே, மிகப்பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டது. அழிவு எந்த அளவுக்கு இருந்தது என்றால், நாலாபுறங்களிலும் பெருநாசமே காட்சியளித்தது. அந்த வேளையிலும் கூட, சங்கத்தின் ஸ்வயம்சேவகர்கள் நிவாரணம் மற்றும் மீட்பில் ஈடுபட்டார்கள். அப்போது, பெருமதிப்பிற்குரிய குருஜி கூட, குஜராத்தின் மூத்த சங்க பிரச்சாரகரானஞ். வகீல் ஐயாவிடம், அவர் அந்த வேளையில் குஜராத்திலே பணியாற்றிக் கொண்டிருந்தார். அவருக்கு ஒரு கடிதம் எழுதினார். அவர் என்ன எழுதினார் என்றால், மற்ற மனிதர்களுடைய துக்கத்தை அகற்றுவதற்கு, சுயநலமற்ற தன்மையோடு தாமே அந்த கஷ்டங்களைச் சுமப்பது, ஒரு உத்தமமான இதயத்தின் அடையாளமாகும்.
நண்பர்களே, தாமே கஷ்டத்தை மேற்கொண்டு மற்றவர்களின் துயரத்தைப் போக்குதல், இதுவே ஒவ்வொரு ஸ்வயம்சேவகரின் அடையாளமாகும். நினைத்துப் பாருங்கள், 1962 யுத்தகாலத்தை. சங்கத்தின் ஸ்வயம்சேவகர்கள் இரவுபகலாக விழித்திருந்து, இராணுவத்திற்கு உதவி புரிந்தார்கள். அவர்களை ஊக்கப்படுத்தினார்கள். எல்லைப்புற கிராமங்களுக்கு உதவிகளைக் கொண்டு சேர்த்தார்கள். ஆயிரத்து தொள்ளாயிரத்து எழுபத்தி ஒன்றிலே, இலட்சோபலட்சம் அகதிகள் கிழக்கு பாகிஸ்தானிலிருந்து பாரதம் வந்தார்கள். அவர்களிடம் வீடில்லை ஆதாரங்களும் இல்லை. அந்தக் கடினமான வேளையிலே, ஸ்வயம்சேவகர்கள் அவர்களுக்கு உணவளித்தார்கள் ஆதரவளித்தார்கள் மருத்துவத் தேவைகளை கவனித்துக் கொண்டார்கள். அவர்களின் கண்ணீரைத் துடைத்தார்கள். அவர்களின் துயரத்தைப் போக்கினார்கள்.
நண்பர்களே, ஒருமுறை, நாமெல்லோரும் நன்கறிவோம். 1984. சீக்கியர்களுக்கு எதிராக, படுகொலை கட்டவிழ்க்கப்பட்டது. அநேக சீக்கிய குடும்பங்கள், ஸ்வயம்சேவகர்களின் வீடுகளிலே அடைக்கலம் ஆனார்கள். இதுவே ஸ்வயம்சேவகர்களின் இயல்பாக இருந்து வந்திருக்கிறது.
நண்பர்களே, ஒருமுறை, முன்னாள் குடியரசுத்தலைவர், டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம், சித்ரகூட்டிற்குச் சென்றார்கள். அங்கே அவர், நானாஜி தேஷ்முக் அவர்களின், ஆசிரமத்திலே நடைபெற்றுவந்த பணிகளைக் கண்டார்கள். அங்கே சேவைப்பணிகளைப் பார்த்தார்கள். அவர் ஆச்சரியப்பட்டுப் போனார். அதே போல முன்னாள் குடியரசுத்தலைவர் பிரணவ் முகர்ஜியும் நாகபுரிக்குச் சென்ற போது, அவரும்கூட சங்கத்தின் ஒழுங்குமுறை சங்கத்தின் எளிமை, இவற்றைப் பார்த்து பரவசப்பட்டார். நண்பர்களே இன்றும்கூட நீங்கள் கவனித்தால், பஞ்சாபின் பெருவெள்ளம், ஹிமாச்சல் மற்றும் உத்தராக்கண்டின் பேரிடர், கேரளத்தின் வயநாட்டின் பெருந்துயரம், அனைத்து இடங்களிலும், ஸ்வயம்சேவகர்கள் அனைவருக்கும் முன்பாகச் செல்வோரில் முன்னணியில் இருக்கிறர்கள். கொரோனா காலத்திலே உலகம் முழுவதும், சங்கத்தின் வல்லமை மற்றும் சேவையுணர்வை நேரடியாகவே கண்டு உணர்ந்தது.
நண்பர்களே, தனது இந்த நூறாண்டுக்காலப் பயணத்திலே, சங்கத்தின் ஒரு பெரும்பணி என்று சொன்னால், அது சமுதாயத்தின் அனைத்து மட்டங்களிலும்ஞ் தன்மதிப்பீட்டையும் சுயமரியாதையையும் தட்டி எழுப்பியது. இதன் பொருட்டு சங்கம், தேசத்தின் பல துறைகளிலும் பணியாற்றி வருகிறது, அவை தொலைவானவை, அங்கே செல்வது கூட கடினமானது. நம்முடைய தேசத்திலே கிட்டத்தட்ட, பத்து கோடி பழங்குடி சகோதர சகோதரிகள் இருக்கிறார்கள். இவர்களின் நலனுக்காகத் தொடர்ந்து சங்கம் முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது. நீண்டகாலமாக அரசாங்கங்கள் அவர்களுக்கு முதன்மையேதும் அளிக்கவில்லை. ஆனால் சங்கம் அவர்களுடைய கலாச்சாரம், அவர்களுடைய திருநாட்கள் திருவிழா மொழி, மற்றும் பாரம்பரியங்களுக்கு உச்சபட்ச முதன்மை அளித்தது. சேவாபாரதி வித்யாபாரதி ஏகல்வித்யாலய் வனவாசி கல்யாண் ஆசிரமம், பழங்குடி மக்களின் அதிகாரமளிப்பின் தூண்களாய் இவை நிற்கின்றன. இன்று நமது பழங்குடி மக்களிடம் தன்னம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது, அவர்களின் வாழ்க்கை மாறி வருகிறது.
நண்பர்களே, சங்கம், பல தசாப்தங்களாக பழங்குடியினத்தவர்களின் பாரம்பரியங்களை, பழங்குடிகளின் சடங்குகளை, பழங்குடிகளின் விழுமியங்களைப் பேணிக்காக்க, தனது ஒத்துழைப்பை அளித்து வந்திருக்கிறது. தனது கடமையை நிறைவேற்றி வந்திருக்கிறது. அதன் தவம் தான் பாரதத்தின் கலாச்சார அடையாளம், பாதுகாப்பாக வைத்திருப்பதில் பெரும் பங்காற்றி இருக்கிறது. நான் தேசத்தின் தொலைவுகளிலும் இருக்கின்ற, பழங்குடிகளின் வாழ்க்கையை எளிதாக்குவதில் ஈடுபட்டுவரும், சங்கத்தின் இலட்சோபலட்சம் ஸ்வயம்சேவகர்களையும் போற்றிப் பாராட்டுகிறேன்.
நண்பர்களே, சமூகத்திலே, பலநூற்றாண்டுகளாக, புரையோடிப்போன நோய்கள், உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்ற உணர்வு, தவறான பழக்கங்கள், தீண்டாமை போன்ற அசுத்தம் நிறைந்திருக்கிறது. இவை ஹிந்து சமுதாயத்தின் மிகப்பெரிய சவாலாக இருந்து வருகின்றன. இது ஒரு மிகப்பெரிய கவலை, இதன் மீது சங்கம், தொடர்ந்து பணியாற்றி வந்திருக்கிறது. ஒருமுறை, அண்ணல் காந்தியடிகள், வர்தாவிலே சங்க முகாம் ஒன்றுக்குச் சென்றார். அவரும்கூட சங்கத்திலே, சமத்துவம் அனுசரணை சகோதரத்துவம், சமவுணர்வு, புரிந்துணர்வு, இவையனைத்தையும் பார்த்துவிட்டு மனம்திறந்து பாராட்டினார். நீங்களே பாருங்கள், டாக்டர் ஐயா தொடங்கி இன்றுவரை, சங்கத்தின் அனைத்து மகத்தான ஆளுமைகளும், அனைத்து சர்சங்கசாலகர்களும், ஏற்றத்தாழ்வு மற்றும் தீண்டாமைக்கு எதிராகப் போராடியிருக்கிறார்கள். பெருமதிப்பிற்குரிய குருஜி தொடர்ந்து, ந ஹிந்து பதிதோ பவேத். இந்த உணர்வை முன்னெடுத்துச் சென்றார். அதாவது அனைத்து இந்துக்களும் ஒரே குடும்பத்தவர். எந்த ஒரு ஹிந்துவும் தாழ்ந்தவராகவோ கீழானவராகவோ இருக்க முடியாது. பூஜ்ய பாலாசாகேப் தேவ்ரஸ் அவர்களின் சொற்களும்கூட, நம்மனைவருக்கும் நினைவிருக்கும். அவர் கூறுவதுண்டு. தீண்டாமை பாவம் இல்லையென்று சொன்னால், தீண்டாமை பாவம் இல்லையென்று சொன்னால், உலகிலே வேறு எந்த ஒன்றும் பாவமில்லை. சர்சங்கசாலக்காக இருந்த ரஜ்ஜு பையா ஜியும் சரி சுதர்ஷன் ஜியும் சரி, இதே உணர்வைத் தான் முன்னெடுத்துச் சென்றார்கள். தற்காலத்திய சர்சங்கசாலக், மதிப்பிற்குரிய மோகன் பாகவத் அவர்களும், சமத்துவத்திறகாக சமூகத்தின் முன்பாக தெளிவான இலக்கை முன்வைத்திருக்கிறார். மேலும் கிராமம்தோறும் ஒரு விஷயம் குறித்து வெளிச்சம் போட்டுக் காட்டப்பட்டது. அது என்னது? அவர் கூறினார், ஒரு குளம், ஒரு ஆலயம், மேலும் ஒரு மயானம். இது தொடர்பாக சங்கம், தேசத்தின் அனைத்து இடங்களுக்கும் சென்றது. எந்தவொரு வித்தியாசமும் கிடையாது. எந்தவொரு கருத்து மாறுபாடும் இல்லை, மனதில் எந்தவொரு காழ்ப்பும் இல்லை. இது தான் சமத்துவத்தின் ஆதாரமாகும். இதுதான் அனைவரையும் உள்ளடக்கிய சமூகத்தின் மனவுறுதியாகும். மேலும் சங்கம், இதற்கே தொடர்ச்சியாக, புதிய சக்தி அளித்து வருகிறது, புதிய ஆற்றல் அளித்து வருகிறது.
நண்பர்களே, 100 ஆண்டுகள் முன்பாக சங்கம் நிறுவப்பட்ட போது, அந்தக்காலத்தின் தேவையாக, அந்தக்காலத்தின் போராட்டம் வேறாக இருந்தது. அப்போது நாம், பல நூற்றாண்டுக்கால அடிமைத்தளையிலிருந்து விடுதலை அடைய வேண்டியிருந்தது. நம்முடைய கலாச்சார நன்மதிப்புக்களை பாதுகாக்க வேண்டியிருந்தது. ஆனால் இன்றோ, நூறு ஆண்டுகள் கழிந்த பிறகு, நமது பாரதம், வளர்ச்சியை நோக்கி விரைந்து கொண்டிருக்கையில், நமது பாரதம், உலகத்தின் 3ஆவது மிகப்பெரிய பொருளாதாரமாக ஆக இருக்கும் வேளையில், நமது தேசம், மேலும் தேசத்தின் மிகப்பெரியஞ். வறுமைத்தட்டு மக்கள், ஏழ்மையைத் தோற்கடித்து, ஏழ்மையை முறியடித்து முன்னேறும் வேளையிலே, நமது இளைஞர்களுக்கு, புதியபுதிய துறைகளிலே புதிய சந்தர்ப்பங்கள் உருவாகும் போது, உலகளாவிய ராஜரீகம் முதல் பருவநிலை கொள்கை வரை, பாரதம், உலகத்திலே தனது குரலை ஓங்கி ஒலித்துக் கொண்டிருக்கிறது. இந்த வேளையிலே, இன்றைய சூழ்நிலையின் சவால்களும் வேறுவிதமானவை, போராட்டமும் வேறுரகமானது. மற்ற நாடுகளின் மீது பொருளாதார சார்புநிலை, நம்முடைய ஒற்றுமையைத் தகர்க்கும் வஞ்சகங்கள், மக்கட்தொகையியலை மாற்ற முனையும் சூழ்ச்சிகள், ஒரு பிரதம மந்திரி என்ற முறையிலே, நான் பணிவோடு கூறுகிறேன், எனக்கு மிகவும் நிறைவாக இருக்கிறது, அதாவது நமது அரசாங்கம், இந்தச் சவால்களை விரைவுகதியிலே எதிர்கொண்டு வருகின்றது. அதே வேளையிலே, ஒரு ஸ்வயம்சேவகன் என்ற முறையிலே மேலும் சந்தோஷம் அளிக்கும் விஷயம், ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கமானது, இந்தச் சவால்களை அடையாளம் கண்டுகொண்டதோடு, இந்தச் சவால்களை எதிர்கொள்ளும் வகையிலே, சிறப்பான திசைகாட்டுதலையும் அளித்திருக்கிறது. இப்போது மதிப்பிற்குரிய தத்தாஜி கூறிய விஷயத்தை நான் என் பாணியில் விளக்க விரும்புகிறேன்.
நண்பர்களே சங்கத்தின் ஐந்து மாற்றங்கள். ஸ்வபோத். சமூக சமத்துவம். குடும்ப பிரபோதன். குடிமக்கள் நடத்தைமுறை. மற்றும் சுற்றுச்சூழல். இந்த உறுதிப்பாடுகள், ஒவ்வொரு ஸ்வயம்சேவகருக்கும், தேசத்தின் முன்பாக இருக்கும் சவால்களை தோற்கடிக்கத் தேவையான பெரும்உத்வேகங்கள்.
நண்பர்களே, ஸ்வபோத் என்றால், தன்னைப் பற்றி அறிதல். ஸ்வபோத் என்றால், அடிமைத்தன உணர்விலிருந்து விடுதலை அடைந்து, நம்முடைய மரபு குறித்து பெருமிதப்படுதல். நம் மொழிகள் குறித்து பெருமைப்படுதல். ஸ்வபோத் என்றால் சுதேசி. தற்சார்புடையவராக ஆவது. மேலும் எனது நாட்டுமக்களே ஒன்றைப் புரிந்து கொள்ளுங்கள். தற்சார்புத்தன்மை. இது ஒன்றும் மாற்று அல்ல. இது இன்றியமையாத ஒன்றாகும். நாம் சுதேசி என்ற மூலமந்திரத்தை சமூகத்தின் உறுதிப்பாடாக ஆக்க வேண்டும்.
நாம், உள்ளூர் பொருட்களுக்குக் குரல் கொடுப்போம் இயக்கத்தினை, அதன் வெற்றிக்காக, உள்ளூர் பொருட்களுக்குக் குரல் கொடுப்பதைத் தொடர்ந்து, ஒரு புதிய சக்தியை அளிக்கவல்ல உத்வேக கோஷமாக ஆக்க வேண்டும். முயற்சி செய்ய வேண்டும்.
நண்பர்களே சங்கமானது, சமூக சகோதரத்துவத்தை, தனது முதன்மையாகக் கொண்டு வந்திருக்கிறது. சமூக சகோதரத்துவம் அதாவது, வஞ்சிக்கப்பட்டவர்களுக்கு முதன்மையளித்து, சமூகநீதியை ஸ்தாபிக்க வேண்டும். தேசத்தின் ஒற்றுமையை வளர்க்க வேண்டும். இன்று தேசத்தின் முன்பாக எழும்பி நிற்கும் சங்கடங்களைப் பார்த்தால், இவை நமது ஒற்றுமை நமது கலாச்சாரம் நமது பாதுகாப்பிற்கு எதிராக நேரடித் தாக்குதலைத் தொடுக்கின்றன. பிரிவினைவாத சிந்தனை, பிராந்தியவாதம், சாதி மொழியை முன்னிறுத்தும் விவாதங்கள், அந்நிய சக்திகளால் தூண்டப்படும் பல்வேறு பிரிவினைவாத இயல்புகள், இவை போல, கணக்கேயில்லாத சவால்கள் சங்கடங்கள் நம்முன்னே நிற்கின்றன. பாரதத்தின் ஆன்மா எப்போதுமே, பன்முகத்தன்மையிலே ஒருமையாகவே இருந்திருக்கிறது. இந்த இழை அறுபட்டுப் போனது என்றால், பாரதத்தின் சக்தியும் பலவீனப்பட்டுப் போகும். ஆகையால் நாம் இந்தச் சக்தியை தொடர்ந்து வாழ்ந்து வர வேண்டும். அதற்கு பலமளிக்க வேண்டும்.
நண்பர்களே, சமூக சகோதரத்துவத்துக்கு இன்று, மக்கட் தொகையில் மாற்றம் என்ற சூழ்ச்சியால், ஊருறுவல்காரர்களால் பெரும் சவாலாகி இருக்கிறது. நம்முடைய இந்த உள்நாட்டுப் பாதுகாப்பு, மற்றும் எதிர்காலத்தோடும் தொடர்புடைய கேள்விக்குறி இது. ஆகையால் தான், நான் செங்கோட்டையிலிருந்து, மக்கட்தொகையியல் மிஷன் பற்றி அறிவித்திருந்தேன். நாம் இந்த சவால் தொடர்பாக எச்சரிக்கையோடு இருக்க வேண்டும். இதை உறுதியோடு எதிர்கொள்ளவும் வேண்டும்.
நண்பர்களே, குடும்ப ப்ரபோதன். இன்று காலத்தின் கட்டாயம். சமூகவியல் ரீதியாக பல நூற்றாண்டுகளாக இருந்துவரும் மெத்தப்படித்தவர்கள் என்ன கூறுகிறார்கள் என்றால், ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக பாரதத்திலே இருந்துவரும் பிராணசக்தி, இதற்கு ஒரு காரணம், அதில் இருக்கும் குடும்ப அமைப்பு. பாரதநாட்டு சமூக அமைப்பில் பலமான ஒரு அலகு என்று சொன்னால், நமது பாரத சமூகத்திலே, தழைத்தோங்கிய, பலமானதொரு குடும்ப அமைப்புமுறை. குடும்ப பிரபோதன் அதாவது, அந்த குடும்ப கலாச்சாரத்தின் ஊட்டம். இதுவே பாரதநாட்டுக் கலாச்சாரத்தின் ஆதாரம். இது பாரதநாட்டுக் கலாச்சாரத்தின் உத்வேகம். வேர்களோடு தொடர்புடையது. குடும்பங்களின் விழுமியங்கள், பெரியோர்களுக்கு மரியாதை, பெண்சக்திக்கு மதிப்பு, இளைஞர்களிடம் நற்பண்புகள், தங்கள் குடும்பம் தொடர்பான கடமைகளை நிறைவேற்றுதல், அதைப் புரிந்து கொள்ளல், அந்த திசையிலே குடும்பத்தை சமூகத்தை விழிப்புணர்வு அடையச் செய்தல், மிகவும் அவசியமானவை.
நண்பர்களே, பல்வேறு காலகட்டங்களிலே தேசம் முன்னேறிச் செல்லும் போது, அதிலே குடிமக்களின் நன்னடத்தை பெரும்பங்கு வகித்திருக்கிறது. குடிகளின் நன்னடத்தை என்றால், கடமையுணர்வு, குடிகளின் கடமைகள் பற்றிய தெரிதல், குடிமக்கள் அனைவருக்கும் இருக்க வேண்டும். தூய்மைக்கு ஆதரவு தேசத்தின் சொத்துக்களை மதித்தல் விதிகள்சட்டங்களை மதித்தல், நாம் இவற்றை முன்னெடுத்துச் செல்ல வேண்டும். நம்முடைய அரசியல்சட்டத்தின் உணர்வு, குடிமக்கள் தங்களுடைய கடமைகளை ஆற்ற வேண்டும். நமது அரசியல் சட்டத்தின் இந்த உணர்விற்கு நாம் தொடர்ந்து சக்தியளித்து வர வேண்டும். நண்பர்களே சுற்றுச்சூழல் பாதுகாப்பு, தற்கால மற்றும் வருங்காலத் தலைமுறையினருக்கு மிகவும் அவசியமானது. இது ஒட்டுமொத்த மனித சமூகத்தின் எதிர்காலத்தோடு தொடர்புடையது. நாம் பொருளாதாரத்தோடு கூடவே, சுற்றுச்சூழல் பற்றியும் அக்கறை கொள்ள வேண்டும். நீர் பாதுகாப்பு பசுமை சக்தி சுத்தமான ஆற்றல், இந்த இயக்கங்கள் அனைத்தும், இந்த திசையைச் சார்ந்தவை தாம்.
நண்பர்களே, சங்கத்தின் இந்த ஐந்து மாற்றங்கள், இவை எப்படிப்பட்ட கருவிகள் என்றால், இவை தேசத்தின் வல்லமையை அதிகரிக்கக்கூடியவை. இவை தேசத்தை எதிர்கொள்ளும் பல சவால்களை தீர்க்கும் வல்லமை உடையவை. இவை 2047 வளர்ச்சியடைந்த பாரதத்தின் ஆதாரமாக ஆகும்.
நண்பர்களே, இரண்டாயிரத்து நாற்பத்தி ஏழின் பாரதம், தத்வஞானம் மற்றும் விஞ்ஞானம், சேவை மற்றும் சகோதரத்துவத்தால் உருவாக்கப்பட்ட பெருமிதமான பாரதமாகும். இதுதான் சங்கத்தின் நோக்கு. இதுதான் ஸ்வயம்சேவகர்களான நம்மனைவரின் பயிற்சியுமாகும். மேலும் இதுவே நமது மனவுறுதியுமாகும்.
நண்பர்களே, நாம் என்றைக்குமே ஒன்றை நினைவில் கொள்ள வேண்டும். சங்கம் உருவாக்கப்பட்டது, தேசத்தின்பால் கொண்ட உறுதியான நம்பிக்கை காரணமாக. சங்கம் இயங்கியது, தேசத்தின்பால் கொண்ட அபாரமான சேவை உணர்வுகாரணமாக. சங்கம் புடம்போடப்பட்டது, தியாகம் மற்றும் தவம் என்ற அக்னியிலே. சங்கம் தழைத்தது, சாதனை மற்றும் நற்பண்புகளின் சங்கமத்திலே. சங்கம் நிற்கிறது, ராஷ்ட்ர தர்மத்தை வாழ்க்கையின் உச்சபட்ச தர்மமாக கருதுவதால். சங்கம் இணைந்திருக்கிறது பாரத அன்னையின் சேவை என்ற பெரும் கனவால்.
நண்பர்களே, சங்கத்தின் ஆதர்ஸம் என்றால், கலாச்சாரத்தின் வேர்கள் ஆழமாகவும் சக்தியோடும் இருக்க வேண்டும் என்பது தான். சங்கத்தின் நம்பிக்கை என்றால், சமூகத்தின் தன்னம்பிக்கையும் சுயமரியாதையும் இருக்க வேண்டும் என்பதே. சங்கத்தின் இலட்சியம் என்றால், இதயங்கள்தோறும் மக்கள்சேவை என்ற ஜோதி ஒளிவிட வேண்டும் என்பதே. சங்கத்தின் கண்ணோட்டம் என்றால், பாரதீய சமூகம், சமூகநீதியன் எடுத்துக்காட்டாய் இருக்க வேண்டும் என்பதே. சங்கத்தின் இலக்கு என்றால், உலக அரங்கிலே, பாரதத்தின் குரல் மேலும் உரக்க ஒலிக்க வேண்டும் என்பதே. சங்கத்தின் உறுதிப்பாடு என்றால், பாரதத்தின் எதிர்காலம், பாதுகாப்பாவும் பிரகாசமாகவும் இருக்க வேண்டும் என்பதே. நான் மீண்டும் ஒருமுறை, உங்களனைவருக்கும், இந்த சரித்திரபூர்வமான கணத்திற்கான வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறேன். நாளை விஜயதசமி புனிதநன்னாள். நம்மனைவரின் வாழ்க்கையிலும் விஜயதசமிக்கு ஒரு மகத்துவம் இருக்கிறது. நான் அதற்காகவும் கூட, உங்களனைவருக்கும் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டு, நன்றிபாராட்டி விடைபெறுகிறேன். பலப்பல நன்றிகள். இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி தனது உரையை நிறைவு செய்தார்.