ஜம்மு காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் (ஏப்ரல் 22) ராணுவ உடையில் ஊடுருவிய இஸ்லாமிய பயங்கரவாதிகள் சுற்றுலா பயணிகளிடம் சென்று ‘‘நீ ஹிந்துவா? நீ ஹிந்துவா?’’ என கேட்டு, கேட்டு கொன்ற கொடூரம் நெஞ்சை உலுக்கச்செய்துள்ளது. இத்தாக்குதலில் வெளிநாட்டவர் உட்பட 28 சுற்றுலாப்பயணிகள் உயிரிழந்தனர்.
ஜம்மு – காஷ்மீரில் முதல்வர் ஒமர் அப்துல்லா தலைமையில் தேசிய மாநாட்டு கட்சி ஆட்சி நடக்கிறது. இங்குள்ள பஹல்காம் மாவட்டம் மிக முக்கிய சுற்றுலா தலமாக விளங்குகிறது. இந்த மாவட்டத்தில் உள்ள பைசரன் பள்ளத்தாக்கு பகுதி, நீண்ட பசுமையான புல்வெளிகள் காரணமாக ‘மினி சுவிட்சர்லாந்து’ என அழைக்கப்படுகிறது.
சுற்றிலும் அடர்ந்த பைன் மரக் காடுகள் உள்ள இந்த பகுதியில், பல்வேறு மாநில சுற்றுலா பயணியர் இயற்கை அழகை ரசித்தபடி குதிரை சவாரி செய்வது வழக்கம். இப்பகுதி எப்போதும் சுற்றுலா பயணியர் நிறைந்து காணப்படும். இந்நிலையில், நேற்று (ஏப்ரல் 22) பிற்பகல் 3:00 மணி அளவில் வழக்கம்போல் பைசரன் பள்ளத்தாக்குப் பகுதியில் சுற்றுலா பயணியர் குவிந்திருந்தனர்.
அப்போது, ராணுவ சீருடையில் வந்த இஸ்லாமிய பயங்கரவாதிகள், சுற்றுலா பயணியரை ஒவ்வொருவரிடமும் சென்று நீ ஹிந்துவா என கேட்டுள்ளனர். ஆம் என சொன்னவர்களை அங்கேயே துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர். மேலும் சில ஆண்களின் ஆடையை அவிழ்த்து காண்பிக்க சொல்லி இஸ்லாமியர் இல்லை என தெரிந்ததும் அவர்களையும் சுட்டுக்கொன்றுள்ளனர்.
துப்பாக்கி குண்டு சத்தத்தைக் கேட்டு சுற்றுலா பயணியர் அங்குமிங்கும் சிதறியடித்து ஓடினர். இந்த தாக்குதலை நடத்திவிட்டு அங்கிருந்து இஸ்லாமிய பயங்கரவாதிகள் மலைப்பகுதிக்குள் தப்பி ஓடி விட்டனர்.
இந்த கொடூர தாக்குதலில் ஹிந்து சுற்றுலா பயணியர் 28 பேர் உயிரிழந்தனர். மேலும், 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். தகவல் அறிந்து வந்த மீட்புப் படையினர், காயமடைந்தோரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.
உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் சுற்றுலா பயணியர் என்றும், அவர்கள் குஜராத், கர்நாடகா, தமிழகம், மஹாராஷ்டிராவைச் சேர்ந்தவர்கள் என்றும் தெரிய வந்தது. உயிரிழந்தவர்களில் இருவர் வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள் எனவும் கூறப்படுகிறது. தாக்குதல் நடந்த பகுதியை பாதுகாப்புப் படையினர் சுற்றி வளைத்து தப்பியோடிய பயங்கரவாதிகளை தீவிரமாக தேடி வருகின்றனர்.
இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானில் இருந்து செயல்படும் லஷ்கர் – -இ- – தொய்பா பயங்கரவாத அமைப்பின் உள்ளூர் கிளையான, ‘ரெசிஸ்டன்ஸ் பிரன்ட்’ பொறுப்பேற்று உள்ளது.
இந்த தாக்குதலுக்கு ஜனாதிபதி திரௌபதி முர்மு, துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர், பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங், ஜே.பி.நட்டா, ஜம்மு – காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா, துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா மற்றும் வெளிநாட்டு தலைவர்கள் உட்பட பலரும் தங்களது கண்டனங்களை தெரிவித்துள்ளனர்.
ஜம்மு – காஷ்மீரின் புல்வாமாவில், 2019ல், சி.ஆர்.பி.எப்., வீரர்கள் சென்ற வாகனத்தின் மீது இஸ்லாமிய பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் 40 வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். அதற்குப் பின் தற்போது தான், காஷ்மீரில் பயங்கரவாதிகள் பெரிய அளவில் தாக்குதல் நடத்தியுள்ளனர் என பாதுகாப்பு படை வட்டாரங்கள் தெரிவித்தன.
28 பேர் பலி; பஹல்காமில் நடந்தது என்ன?
காஷ்மீர் பஹல்காமில் மினி சுவிட்சர்லாந்து என கூறப்படும் பைசரன் பள்ளத்தாக்கில் பயங்கரவாதிகள் தாக்குதல்.
பஹல்காமில் இருந்து 3.5 கி.மீ. மலையேறி சுற்றுலாபயணிகள் பைசரன் பள்ளத்தாக்கை அடைய வேண்டும்.
பைசரன் பள்ளத்தாக்கு முழுக்க முழுக்க பைன் மரக்காடுகளால் சூழப்பட்டுள்ள ஒரு பகுதி, பல ஆண்டுகளாக பைசன் பள்ளத்தாக்கில் பயங்கரவாதிகள் அச்சுறுத்தல் இல்லாததால் ராணுவம் போடப்படவில்லை.
ராணுவம் இல்லாததை பயன்படுத்திக் கொண்டு சுற்றுலா பயணிகள் சுமார் 28 பேரை சுட்டுக் கொன்றுவிட்டு தப்பியுள்ளனர் பயங்கரவாதிகள்.
சுற்றுலா வந்த புதுமண ஜோடிகளிடம் சென்று உங்கள் மதம் என்ன என்று பயங்கரவாதிகள் கேட்டுள்ளனர்.
இஸ்லாமியர் இல்லை என தெரிந்த உடன் ஆண்களை மட்டும் சுட்டுக் கொலை செய்துள்ளனர் பயங்கரவாதிகள்.
இஸ்லாமியர் என கூறும் சுற்றுலா பயணிகளிடம் முஸ்லிம் மதம் தொடர்புடைய வாசகங்களை ஒப்புவிக்க கூறியுள்ளனர் பயங்கரவாதிகள்.
கலிமா கூறத் தெரியாதவர்களையும் ஈவு இரக்கமின்றி நெற்றி பொட்டில் சுட்டு கொலை செய்துள்ளனர் பயங்கரவாதிகள்.
தாக்குதலை தடுக்க வந்த உள்ளூர் கடை வியாபாரிகள், சுற்றுலா வழிகாட்டிகளையும் பயங்கரவாதிகள் சுட்டு கொலை செய்துள்ளனர்.
சுற்றுலா பயணிகளை வரிசையாக நிற்க வைத்து அவர்களின் நாடு, மாநிலம், ஊர், மதம் போன்றவற்றை தெரிந்துக்கொண்ட பின்னரே சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளனர்.