---Advertisement---

3 நாளில் பாகிஸ்தானை மண்டியிட வைத்த இந்திய ராணுவம்: ஜம்மு காஷ்மீர் ஆளுநர்

On: May 21, 2025 9:42 AM
Follow Us:
---Advertisement---

பாகிஸ்தானில் 9 பயங்கரவாத தளங்களை அழித்து எதிரியை மண்டியிட வைத்த உங்களின் துணிச்சலால் நாடு பெருமை கொள்கிறது என்று ஜம்மு காஷ்மீர் ஆளுநர் மனோஜ் சின்ஹா ராணுவத்தை பாராட்டியுள்ளார்.

ஜம்மு காஷ்மீரில் பூஞ்ச் படைப்பிரிவு தலைமையகத்திற்கு ஆளுநர் மனோஜ் சின்ஹா சென்றார். அங்கு இந்திய ராணுவ வீரர்கள், எல்லை பாதுகாப்புப் படையினரை சந்தித்தார். பின்னர் அவர்கள் மத்தியில் அவர் உரையாற்றினார்.

அப்போது பேசியதாவது: இந்திய ஆயுதப்படைகள் பாகிஸ்தானில் 9 பயங்கரவாத தளங்களை அழித்ததை உலகம் அறியும். 3 நாட்களில் எதிரியை மண்டியிட வைத்தீர்கள். உங்கள் துணிச்சல், வீரத்தால் நாடு பெருமை கொள்கிறது.

உலகின் 5வது பெரிய பொருளாதார நாடாக உள்ளோம். மிக விரைவில் 4வது பெரிய பொருளாதார நாடாக மாறுவோம். நமது அண்டை நாடு வாங்கிய கடன்களை கொண்டு பயங்கரவாதத்தை வளர்க்க முயற்சிக்கிறது. இவ்வாறு ஆளுநர் மனோஜ் சின்ஹா கூறியுள்ளார்.

Join WhatsApp

Join Now

Subscribe Youtube

Subscribe Now

இதையும் படிக்கலாமே !

Leave a Comment