Skip to content
Orey Naadu ஒரேநாடு – இமயம் முதல் குமரி வரை

Orey Naadu ஒரேநாடு – இமயம் முதல் குமரி வரை

  • முகப்பு
  • சந்த செலுத்த
  • தொடர்புக்கு
  • Toggle search form
  • பாஜக உண்மையான ஜனநாயக கட்சி : திருச்செங்கோட்டில் தலைவர் அண்ணாமலை அரசியல்
  • திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினார் பிரதமர் மோடி இந்தியா
  • ‘ஆபரேஷன் சிந்தூர்’ பெயர் வைக்க காரணம் என்ன? இந்தியா
  • காலத்தால் அழியாத சக்தி வாய்ந்த ஊடகம்: உலக வானொலி தினத்தில் பிரதமர் மோடி நெகிழ்ச்சி இந்தியா
  • புதிய பாம்பன் ரயில் பாலத்தை ராம நவமி நாளில் திறந்து வைத்தார் பிரதமர் மோடி தமிழ்நாடு
  • சி.பி.ராதாகிருஷ்ணனை அனைத்து கட்சிகளும் ஒருமனதாக ஆதரிக்க வேண்டும் : ஸ்டாலினுக்கு நயினார் நாகேந்திரன் வேண்டுகோள் அரசியல்
  • பொதுமக்கள் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் பட்ஜெட் : தலைவர் அண்ணாமலை வரவேற்பு அரசியல்
  • ஊர் உறங்கிய பின்னர், நள்ளிரவில் பதிலளிக்கும் பெரியகருப்பன் – திமுக ஆட்சியில் விடியாது என்பதில் அத்தனை நம்பிக்கையா? தலைவர் அண்ணாமலை கேள்வி அரசியல்

ரூ.6 லட்சம் கோடி முதலீட்டை ஜப்பான் நாட்டில் ஈர்க்க இந்தியா இலக்கு: பிரதமர் மோடி

Posted on August 29, 2025August 29, 2025 By வ.தங்கவேல் No Comments on ரூ.6 லட்சம் கோடி முதலீட்டை ஜப்பான் நாட்டில் ஈர்க்க இந்தியா இலக்கு: பிரதமர் மோடி

ஜப்பானின் ரூ.6 லட்சம் கோடி முதலீடுகளை ஈர்க்க இந்தியா இலக்கு நிர்ணயித்துள்ளது என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

அரசு முறை பயணமாக பிரதமர் நரேந்திர மோடி, ஜப்பான் சென்றுள்ளார். அந்நாட்டு பிரதமர் ஷிகேரு இஷிபா இல்லத்தில் அவருக்கு அணிவகுப்பு மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, இந்தியா -ஜப்பான் இடையிலான உச்சி மாநாட்டில் பங்கேற்றார். அப்போது இரு நாட்டு தலைவர்களும் பல்வேறு முக்கியமான விஷயங்கள் மற்றும் விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்தினர். இதில், இரு நாட்டு உயர் அதிகாரிகள் மற்றும் கலந்து கொண்டனர். இதன பின்னர் இரு நாடுகளுக்கு இடையே பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

இதனைத்தொடர்ந்து இந்தியா – ஜப்பான் பொருளாதார மன்றத்தில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றியதாவது: மாண்புமிகு பிரதமர் இஷிபா அவர்களே! இந்தியா – ஜப்பான் நாடுகளைச் சேர்ந்த வர்த்தக நிறுவனங்களின் தலைவர்களே, சகோதர சகோதரிகளே, வணக்கம்
ஜப்பான் மொழியிலும் வணக்கத்தைத் தெரிவித்துக் கொண்டார்.

நான் இன்று காலை டோக்கியோ வந்தடைந்தேன். என்னுடைய இந்தப் பயணம் பெரு வர்த்தக நிறுவனத் தலைவர்களுடனான சந்திப்புடன் தொடங்கியது மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது.

உங்களில் பலரை நான் நன்றாக அறிவேன், குஜராத் மாநில முதலமைச்சராக இருந்த போதும், பிறகு டெல்லியில் பிரதமராக பொறுப்பேற்றுக் கொண்ட பிறகும் உங்களில் பலருடன் நான் நெருங்கிய நட்பு கொண்டுள்ளேன். இன்று உங்கள் அனைவரையும் சந்திக்கும் வாய்ப்பு எனக்கு மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது.

இந்த பொருளாதார மன்றத்தில் பேசும் வாய்ப்பு கிடைத்ததற்காக பிரதமர் இஷிபாவிற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அவரது மதிப்பு வாய்ந்த குறிப்புகளுக்காக அவருக்கு நான் வாழ்த்துத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நண்பர்களே,

இந்தியாவின் வளர்ச்சிப் பயணத்தின் ஜப்பான் எப்போதும் முக்கிய நட்பு நாடாக உள்ளது. மெட்ரோ ரயில் உற்பத்தி, குறை கடத்தி உற்பத்தி அல்லது புத்தொழில் நிறுவனங்கள் என எதுவாக இருந்தாலும் ஒவ்வொரு துறையிலும் இரு நாடுகளுக்கும் இடையிலான பரஸ்பரம் நம்பிக்கை பிரதிபலிக்கிறது.
ஜப்பானிய நிறுவனங்கள் இந்தியாவின் 40 பில்லியன் டாலருக்கும் அதிகமாக முதலீடு செய்துள்ளன. கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் தனியார் நிறுவனங்கள் மூலம் 13 பில்லியன் டாலர்கள் முதலீடாக கிடைத்துள்ளன. இந்தியா ஒரு முதலீடு செய்வதற்கு உகந்த நம்பிக்கைக்குரிய நாடாக திகழ்கிறது என்று சர்வதேச ஒத்துழைப்புக்கான ஜப்பான்  வங்கி தெரிவித்துள்ளது. 80% ஜப்பானிய வர்த்தக நிறுவனங்கள் இந்தியாவில் தங்களது நிறுவனங்களை விரிவாக்கம் செய்ய விரும்புவதாகவும் அவற்றின் 75% நிறுவனங்கள் ஏற்கனவே லாபத்தில் இயங்கி வருவதாகவும் ஜப்பான் வெளிநாட்டு வர்த்தக அமைப்பு தெரிவித்துள்ளது. இது இந்தியாவில் முதலீடுகளுக்கான வாய்ப்புகள் பலமடங்கு அதிகரித்து வருவதை எடுத்துக் காட்டுவதாக உள்ளது.

நண்பர்களே,

கடந்த 11 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட்டுள்ள குறிப்பிடத்தக்க மாற்றங்கள் குறித்து நீங்கள் அனைவரும் மிகவும் நன்றாக அறிந்ததே. இன்று இந்தியா அரசியல் மற்றும் பொருளாதார ஸ்தரதன்மையுடன் தெளிவான மற்றும் துல்லியமான கொள்கைகளைக் கொண்டுள்ளது. உலக அளவில் இந்தியா விரைவான பொருளாதார வளர்ச்சிக் கண்டு வரும் நாடாக உருவெடுத்துள்ளது. மேலும், வெகு விரைவில் உலகின் 3-வது பெரிய பொருளாதார நாடாக இந்தியா உருவெடுக்க உள்ளது.

உலக அளவில் பொருளாதார வளர்ச்சியில் இந்தியாவின் பங்களிப்பு 18 சதவீதமாக உள்ளது. நாட்டின் மூலதன சந்தை மூலம்  நல்ல வருவாய் கிடைப்பதுடன் வங்கித்துறையின் செயல்பாடுகளும் வலுவாக உள்ளது. பணவீக்கம் மற்றும் வட்டி விகிதங்கள் குறைவாகவும், அந்நிய செலாவணிக் கையிருப்பு 700 பில்லியன் டாலராகவும் உள்ளது.

நண்பர்களே,

இத்தகைய மாற்றங்களுக்கு மறுசீரமைப்பு செயல்பாடு மற்றும் மாற்றம் என்ற அணுகுமுறைகளே காரணமாக அமைந்துள்ளது. 2017-ம் ஆண்டில் ஒரே நாடு ஒரே வரி முறை அறிமுகப்படுத்தப்பட்டது. தற்போது இந்த வரிமுறையில் புதிய மற்றும் மிகப் பெரிய அளவிலான சீர்திருத்தங்களைக் கொண்டு வருவதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. ஒரு சில வாரங்களுக்கு முன்பு இந்திய நாடாளுமன்றத்தில் புதிய மற்றும் எளிமைப்படுத்தப்பட்ட வருமான வரிச்சட்டத்திற்கு ஒப்புதல் பெறப்பட்டது.

இந்தியாவின் சீர்திருத்த நடவடிக்கைகள் வரிசார்ந்த நடைமுறைகள் மட்டுமின்றி எளிதாக வர்த்தகம் புரிவதை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுகிறது. வர்த்தக நிறுவனங்களுக்கான அனுமதி பெற ஒற்றைச் சாளர முறை ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும் 45,000 இணக்க நடைமுறைகள் எளிமைப்படுத்தப்பட்டுள்ளன. இதனை நடைமுறைப்படுத்தும் பணிகளை விரைவுபடுத்தும் வகையில், உயர்நிலைக் குழு ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு மற்றும் விண்வெளி போன்ற மிக முக்கியத்துவம் வாய்ந்த துறைகளில் உள்ள வாய்ப்புகள் தனியார் துறைக்கும் வழங்கப்பட்டுள்ளது. தற்போது, இந்த வாய்ப்புகள் அணுமின் உற்பத்தித் துறைக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

நண்பர்களே,

வளர்ச்சியடைந்த இந்தியாவை கட்டமைப்பதற்கான உறுதியான நிலைபாட்டை இந்தியா கொண்டுள்ளது என்பதை இத்தகைய சீர்திருத்த நடவடிக்கைகள் எடுத்துக் காட்டுகின்றன. உறுதியான, தெளிவான, உத்திசார் நடவடிக்கைகளுடன் கூடிய சீர்திருத்தங்களை மேற்கொள்வதன் மூலமாக உலக நாடுகள், இந்தியாவை அங்கீகரிப்பதுடன் பாராட்டுதல்களையும் தெரிவித்து வருகிறது. 20 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவின் பொருளாதார மதிப்பீட்டை எஸ் & பி சர்வதேச மதிப்பீட்டு நிறுவனம் மேம்படுத்தியுள்ளது.  உலக நாடுகள் இந்தியாவின் செயல்பாடுகளில் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகின்றன.

நண்பர்களே,

இந்தியா – ஜப்பான் வர்த்தக மன்றம் வெளியிட்டுள்ள அறிக்கை இருநாடுகளுக்கும் இடையேயான நிறுவன ஒப்பந்தங்கள் குறித்து விரிவாக குறிப்பிட்டுள்ளது. இத்தகைய குறிப்பிடத்தக்க வளர்ச்சிக்காக உங்கள் அனைவருக்கும் நான் வாழ்த்து தெரிவித்துக் கொள்கிறேன். இரு நாடுகளுக்கும் இடையேயான நட்புறவில் மேலும் சில கருத்துக்களைத் தெரிவிக்க விரும்புகிறேன்.  

முதலாவதாக உற்பத்தித் துறை குறித்தக் கருத்துக்களைத் தெரிவிக்க விரும்புகிறேன்.  வாகன உற்பத்தித் துறையில் இருநாடுகளுக்கும் இடையேயான ஒத்துழைப்பு மிகவும் வெற்றிகரமாக உள்ளது. இது குறித்து பிரதமர் விரிவாக எடுத்துரைத்தார். இதனுடன் மின்சார வாகனங்களுக்கான மின்கலங்கள், ரோபோட்டிக்ஸ், குறைகடத்திகள், கப்பல்கட்டுமானம், அணுமின் உற்பத்தி உள்ளிட்ட பல்வேறு துறைகளிலும் இந்த ஒத்துழைப்பு நீடிக்கும். மேலும், வளரும் நாடுகளுக்கு குறிப்பாக ஆப்பிரிக்க நாடுகளுக்குத் தேவையான உதவிகளை வழங்குவதற்கான வழிவகைகளும் இதில் அடங்கும்.

உற்பத்திக்கான இந்தியா மற்றும் உலகிற்கான உற்பத்தி ஆகிய இயக்கங்களில் முதலீடு செய்ய முன்வருமாறு உங்கள் அனைவருக்கும் நான் அழைப்பு விடுக்கிறேன். சுசூகி மற்றும் டாய்கின் நிறுவனங்களின் வெற்றிகரமான செயல்பாடுகள் குறித்து நீங்கள் அறிந்து கொள்ள முடியும்.

இரண்டாவதாக தொழில்நுட்பம் மற்றும் புதிய கண்டுபிடிப்புகள் பற்றி குறிப்பிட விரும்புகிறேன்.  தொழில்நுட்பத் துறையில் சக்தி வாய்ந்த நாடாக ஜப்பான் திகழ்கிறது. அதே சமயம் திறமையில் சக்தி வாய்ந்த நாடாக இந்தியா திகழ்கிறது.  செயற்கை நுண்ணறிவு. குறைகடத்தி உற்பத்தி, குவாண்டம் கம்ப்யூட்டிங், உயிரி தொழில்நுட்பம், விண்வெளி போன்ற துறைகளில் இந்தியா உறுதியான மற்றும் இலக்குகளுடன் கூடிய முன்முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. ஜப்பானிய தொழில்நுட்பம் மற்றும் இந்தியாவின் திறன் ஆகிய இரண்டும் இணைந்து தொழில்நுட்பப் புரட்சியில் உலகின் முன்னணி நாடாக உருவெடுக்கச் செய்யும்.

3-வதாக பசுமை எரிசக்தி மாற்றங்கள் குறித்ததாகும். வரும் 2030-ம் ஆண்டுக்குள் 500 ஜிகாவாட் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தியை நோக்கிய இந்தியா பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. வரும் 2047-ம் ஆண்டுக்குள் 100 ஜிகாவாட் அணுமின் உற்பத்திக்கான இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சூரிய மின் தகடுகள் முதல் பசுமை ஹைட்ரஜன் வரை, இந்தியா – ஜப்பான் நாடுகள் இணைந்து செயல்படுவதற்கு ஏராளமான வாய்ப்புகள் உள்ளன.

இந்தியா – ஜப்பான் இடையே கூட்டுக் கடன் நடைமுறை ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது. இது தூய்மையான, பசுமையான எதிர்காலத்தைக் கட்டைமப்பதற்கான நடவடிக்கைகளில் இணைந்து செயல்படுவதற்கு உதவிடும்.

நான்காவதாக அடுத்த தலைமுறையினருக்கான உள்கட்டமைப்பு வசதிகள்:  கடந்த 10 ஆண்டுகளில் இந்தியா முன் எப்போதும் இல்லாத வகையில் அடுத்த தலைமுறையினருக்கான போக்குவரத்து மற்றும் சரக்குப் போக்குவரத்துக்கான உள்கட்டமைப்பு வசதிகளை உருவாக்குவதில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியைக் கண்டுள்ளது. நாட்டில் உள்ள துறைமுகங்களின் கையாளும் திறன் இரட்டிப்பாகியுள்ளது. நாடு முழுவதிலும் 160-க்கும் அதிகமான விமான நிலையங்கள் உள்ளன. 1,000 கிலோமீட்டருக்கும் கூடுதலான மெட்ரோ ரயில் வழித்தடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மும்பை – அகமதாபாத் இடையேயான அதிவேக விரைவு ரயில் சேவைக்கான பணிகள் ஜப்பான் நாட்டின் உதவிகளுடன் நடைபெற்று வருகிறது.

ஆனால் இத்துடன் இந்தியாவின் நடவடிக்கைகள் நின்றுவிடவில்லை. ஜப்பானின் சீர்மிகு செயல்பாடுகள் மற்றும் இந்தியாவின் பெரிய அளவிலான நடவடிக்கைகள் இரு நாடுகளுக்கும் இடையிலான சிறந்த நட்புறவை மேலும் வலுப்படுத்த உதவிடும்.

ஐந்தாவதாக திறன் மேம்பாடு மற்றும் மக்கள் தொடர்பு குறித்த ஒப்பந்தங்கள். சர்வதேச நாடுகளின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில், இந்தியாவின் திறன் மிக்க இளைஞர் சக்தி எராளமாக உள்ளது. இதன் மூலம் ஜப்பான் பெரிதும் பயனடையும். ஜப்பானிய மொழியில் இந்திய இளைஞர்களுக்கு உரிய பயிற்சி மற்றும் மென்பொருள் திறன் ஆகியவற்றை வழங்குவதன் மூலம் ஜப்பானின் தொழிலாளர் சக்திக்குத் தேவையான தயார் நிலையை உருவாக்க முடியும். மனித சக்தியை பரஸ்பரம் பகிர்ந்து கொள்வதன் மூலம், வளங்களையும் பகிர்ந்து கொள்ள முடியும்.

நண்பர்களே,

இறுதியாக நான் ஒன்றை கூற விரும்புகிறேன். இந்தியா – ஜப்பான் நாடுகளிடையேயான ஒத்துழைப்பு உத்தி சார்ந்ததாகவும் திறன் மிக்கதாகவும் உள்ளது. பொருளாதார அடிப்படையில் இரு நாடுகளுக்கும் பரஸ்பரம் நலன் சார்ந்த அம்சங்களில் முன்னேற்றம் அடைவதற்கான வாய்ப்புகள் உள்ளன. வளரும் நாடுகளில் ஜப்பானிய வர்த்தக நிறுவனங்கள் தங்களது வர்த்தகத்தை விரிவுபடுத்துவதற்கு இந்தியா உதவிடும். இதன் மூலம் ஆசிய நாடுகளில் நூற்றாண்டுகாலமாக இருந்து வரும் ஸ்தரதன்மை, வளர்ச்சி, வளம் ஆகியவற்றில் ஒரு குறிப்பிட்ட நிலையை அடைய முடியும்.

எனது இந்த உரையுடன் ஜப்பான் பிரதமர் திரு இஷிபா மற்றும் உங்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். மிக்க நன்றி. இவ்வாறு பிரதமர் மோடி தனது உரையை நிறைவு செய்தார்.

இதன் பிறகு பிரதமர் நரேந்திர மோடி செய்தியாளர்களிடம் கூறியதாவது: இன்றைய எங்களின் கலந்துரையாடல் ஆக்கப்பூர்வமானதாகவும், நோக்கம் உள்ளதாகவும் இருந்தது. இரண்டு பெரிய ஜனநாயகம் மற்றும் உயிருள்ள ஜனநாயக நாடுகள் என்ற வகையில், எங்களின் கூட்டாண்மை இரு நாடுகளுக்கு மட்டும் அல்ல உலகளாவிய அமைதி மற்றும் பாதுகாப்புக்கு அவசியம் என்பதை நாங்கள் ஒப்புக் கொள்கிறோம். உலக அமைதி பாதுகாப்புக்கு இந்தியா ஜப்பான் இணைந்து செயல்படும். ஜப்பானுடனான பொருளாதார உறவ வலுவாக உள்ளது

சிறந்த உலகத்தை வடிவமைப்பதில் வலுவான ஜனநாயகங்கள் இயற்கையின் பங்காளிகள். இன்று எங்களின் கூட்டாண்மை, ஒரு புதிய மற்றும் பொன்னான அத்தியாயத்துக்கு அடித்தளமிட்டு உள்ளது. அடுத்த பத்தாண்டுகளுக்கான ஒரு வரைபடத்தை வகுத்துள்ளோம். எங்கள் தொலைநோக்கு பார்வையின் மையமாக, முதலீடு, புதுமை, தொழில்நுட்பம், சுற்றுச்சூழல் பொருளாதார பாதுகாப்பு, சுகாதாரம் ஆகியன உள்ளன.

அடுத்த 10 ஆண்டுகளில், ஜப்பானின் 6 லட்சம் கோடி முதலீடுகளை இந்தியாவில் ஈர்க்க இலக்கு நிர்ணயித்துள்ளோம். இந்தியா மற்றும் ஜப்பானின் சிறு, நடுத்தர நிறுவனங்கள் மற்றும் ஸ்டார்ட் அப்களை இணைப்பதில் சிறப்பு கவனம் செலுத்தப்படும். இந்தியா – ஜப்பான் வணிக கூட்டமைப்பிலும், ஜப்பானிய நிறுவனங்களிடம் நான், ‘இந்தியாவில் தயாரியுங்கள். உலகத்துக்காக தயாரியுங்கள்,’ எனக்கூறியுள்ளேன். இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்.

இந்தியா Tags:#Oreynaadu, #PM Modi, #Tamilnadu

Post navigation

Previous Post: பிஜியின் கடல்சார் பாதுகாப்பை வலுப்படுத்த இந்தியா பயிற்சி மற்றும் உபகரணங்களை வழங்கும்: பிரதமர் மோடி

Related Posts

  • 2027 மார்ச்சில் மக்கள் தொகை கணக்கெடுப்பு; கெஜட்டில் அரசாணையை வெளியிட்டது மத்திய அரசு இந்தியா
  • சிங்கத்தை படம் பிடித்த பிரதமர் மோடி: உலக வனவிலங்கு நாளில் உற்சாகம் இந்தியா
  • மஹா கும்பமேளாவில் புனித நீராடிய தலைவர் அண்ணாமலை இந்தியா
  • அனைவருடைய கனவுகளையும் நிறைவேற்றக்கூடிய வரலாற்று சிறப்புமிக்க பட்ஜெட்: பிரதமர் மோடி பெருமிதம் இந்தியா
  • வளர்ச்சி அடைந்த பீகாரை உருவாக்க மத்திய அரசு தீவிரம்: பிரதமர் மோடி உறுதி இந்தியா
  • வளர்ச்சி அடைந்த பாரதத்தை உருவாக்குவதில் மகளிர் சக்திக்கு பெரும் பங்கு உள்ளது : பிரதமர் மோடி பெருமிதம் இந்தியா

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • ரூ.6 லட்சம் கோடி முதலீட்டை ஜப்பான் நாட்டில் ஈர்க்க இந்தியா இலக்கு: பிரதமர் மோடி
  • பிஜியின் கடல்சார் பாதுகாப்பை வலுப்படுத்த இந்தியா பயிற்சி மற்றும் உபகரணங்களை வழங்கும்: பிரதமர் மோடி
  • நெல்லையில் பாஜக பூத் பொறுப்பாளர்கள் மாபெரும் மாநாடு: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்பு
  • சி.பி.ராதாகிருஷ்ணனை அனைத்து கட்சிகளும் ஒருமனதாக ஆதரிக்க வேண்டும் : ஸ்டாலினுக்கு நயினார் நாகேந்திரன் வேண்டுகோள்
  • இல.கணேசன் உடலுக்கு மத்திய அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் ஆகியோர் நேரில் அஞ்சலி

Recent Comments

No comments to show.

Archives

  • August 2025
  • July 2025
  • June 2025
  • May 2025
  • April 2025
  • March 2025
  • February 2025
  • January 2025

Categories

  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழ்நாடு
  • நாடு
  • முக்கியமான காலகட்டத்தில் பயணிப்பதால் அனைவரும் விழிப்புடன் இருக்க வேண்டும்: அமைச்சகங்களுக்கு பிரதமர் மோடி அறிவுரை இந்தியா
  • மும்மொழிக் கல்விக்கு ஆதரவாக பாஜக சார்பில் ஒரு கோடி கையெழுத்து இயக்கம் தொடக்கம் அரசியல்
  • காலத்தால் அழியாத சக்தி வாய்ந்த ஊடகம்: உலக வானொலி தினத்தில் பிரதமர் மோடி நெகிழ்ச்சி இந்தியா
  • வடலூர் விவகாரத்தில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பு திமுக அரசுக்கு சம்மட்டி அடி: தலைவர் அண்ணாமலை அரசியல்
  • மகாத்மா காந்தி நினைவு தினம்: ராஜ்காட்டில் பிரதமர் மோடி மரியாதை இந்தியா
  • மாம்பழ விவசாயிகளின் வயிற்றிலடிக்கும் திராவிட மாடல் : நயினார் நாகேந்திரன் தமிழ்நாடு
  • அனைவருடைய கனவுகளையும் நிறைவேற்றக்கூடிய வரலாற்று சிறப்புமிக்க பட்ஜெட்: பிரதமர் மோடி பெருமிதம் இந்தியா
  • ராஜராஜன், ராஜேந்திர சோழனுக்கு பிரமாண்ட சிலைகள்: கங்கைகொண்ட சோழபுரம் ஆடி திருவாதிரை விழாவில் பிரதமர் மோடி அறிவிப்பு தமிழ்நாடு

Copyright © 2025 Orey Naadu ஒரேநாடு – இமயம் முதல் குமரி வரை.

Powered by PressBook News WordPress theme